Tuesday, 28 June 2016

தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஜெபிப்போம்

தூத்துக்குடி மாவட்டம், தமிழகத்திலுள்ள மிகமுக்கியமான ஒரு இடம், பெரிய துரைமுகமும் பல்வேறு பெரிய, சிறிய தெழிற்சாலைகள் இங்கு உள்ளன. லட்சகணக்கான தொழிலாளர்கள் உள்ளனர், சரக்கு வாகன போாக்குவரத்து மிகுந்த இடம் இந்த மாவட்டத்தின் பாதுகாப்பிற்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும் 1, முக்கியமாக தொழிற்சாலைகளுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளை அமைக்க முயற்சி செய்யப் பட்டபோது சிலகாரணங்களை முன்னிட்டு அநேக எதிர்ப்புகள் வந்த சூழ்நிலையில் இங்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இதின் நிமித்தமாக, அநேக பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது ஆகவே இது போன்ற தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த மாவட்டத்திளுள்ள சில கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகள் மூலமாக வெளியேருகிற வாயூக்கள் மிகவும் அபாயகரமானவை இந்தவாயூக்கள் வெளியேற்றப்பட வேண்டிய அளவைவிட பல சமயங்களில் அதிகமாக வெளியேற்றபடுகிறது இது அதிகாரிகளால் சரியாக கண்காணிக்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இது போன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளிவருகின்ற விஷவாயுக்கள் காற்றில் பரவுவதால் ஏற்படும் "காற்று மாசு" "சுற்று சூழல் மாசு" போன்றவைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த காற்றை சுவாசிக்கும் பொது மக்கள் சுவாச பிரசனைகளினால் பாதிக்கப்படுகின்றார்கள் இப்படியாகப் பாதிக்கப்படும் மக்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் காற்றில் பரவும் இப்படிப்பட்ட விஷவாயுக்களால் உயிரிழப்புகள், தொடர் வியாதிகள் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு போன்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது இதற்காக விசேஷமாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment