Saturday, 25 June 2016

சிறு பிள்ளைகளுக்காக

நமது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறு பிள்ளைகளுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும் தேவ சமுகத்தில் கண்ணீரோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் குழந்தை பருவத்திலிருந்தே சிறு பிள்ளைகளுக்கு பேராபத்து காத்திருக்கிறது குறிப்பாக, கருவில் உள்ள சிசு, 'பெண் குழந்தை' என்று தெரிந்தால், கருக் கலைப்புச் செய்யும் புதிய கலாச்சாரமும் பெருவாரியான மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த தீமை தேசத்திலிருந்து முற்றிலுமாக விலகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறுமிகள் மீது வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்களால் உண்டாகும் பாலியல் வன்கொடுமைகள் முறியடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறு பிள்ளைகள், பெண் பிள்ளைகள் கடத்தப்படுதல் மற்றும் அவர்கள் பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்துவது போன்ற காரியங்கள் மாறிப்போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறுபிள்ளைகளை, ''தெய்வம்" என்று நம்பப் படுபவைகளுக்கு நேர்ந்து விடும் பழக்கம் இன்னும் சிலபகுதிகளில் காணப்படுகிறது. இந்நிலை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment