Sunday, 5 June 2016

சங்கீதம் 68 :16-20

பாசான் பர்வதத்தில் வாசமாயிருக்கத் தேவன் விரும்பினார், ஆம் கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார். தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். தேவன் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனார் தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டார். எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக, நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார், ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. சங்கீதம் 68 :16-20

No comments:

Post a Comment