Friday, 24 June 2016

சங்கீதம்74;2-7

கர்த்தர் நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் அவருடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணுவார், பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். அவருடைய சத்துருக்கள் அவருடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான். இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள். அவரது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, அவரது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். கர்த்தர், பூர்வகாலத்தில் சம்பாதித்த அவரது சபையையும், அவர் மீட்டுக்கொண்ட அவரது சுதந்தரமான கோத்திரத்தையும், அவரது வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளுவார். சங்கீதம்74;2-7

No comments:

Post a Comment