Sunday, 19 June 2016

சங்கீதம் 71 :19 -24

தேவனுடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை செய்தார், தேவனுக்கு நிகரானவர் யார்? அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த உன்னை அவர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் உன்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவார் உன் மேன்மையைப் பெருகப்பண்ணி, உன்னை மறுபடியும் தேற்றுவார். உன் தேவனை, நீ வீணையைக் கொண்டு அவரையும் அவருடைய சத்தியத்தையும் துதி், இஸ்ரவேலின் பரிசுத்தரை, சுரமண்டலத்தைக் கொண்டு் பாடு். நீ பாடும்போது உன் உதடுகளும், அவர் மீட்டுக்கொண்ட உன் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். உனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் உன் நாவு அவரது நீதியைக் கொண்டாடும். சங்கீதம் 71 :19--24

No comments:

Post a Comment