Tuesday, 28 June 2016

சங்கீதம் 76 :1-12

யூதாவின் தேவனுடைய நாமம் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறிக்கிறார் கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் கர்த்தர் பிரகாசமுள்ளவர். தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள், வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. யாக்கோபின் தேவனு டைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. தேவனே பயங்கரமானவர், அவரது கோபம் மூளும்போது அவருக்கு முன்பாக நிற்பவன் யார்? நியாயம் விசாரிக்கவும், பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவன் எழுந்தருளினபோது, வானத்திலிருந்து, நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணூகிறார் பூமி பயந்து அமர்ந்தது. மனுஷனுடைய கோபம் தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும், மிஞ்சுங்கோபத்தை அவர் அடக்குவார் பொருத்தனைபண்ணி அதை உன் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்று, பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவா, அவர் பிரபுக்களின் ஆவியை அடக்குவார், பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவா் சங்கீதம் 76 :1-12

No comments:

Post a Comment