Thursday, 16 June 2016

சங்கீதம் 71 :1-5

நீ கர்த்தரையே நம்பியிருக்கிறாய், நீ ஒருபோதும் வெட்கம் அடையாதபடி கர்த்தர் செய்வார். கர்த்தருடைய நீதியினிமித்தம் உன்னை விடுவித்து, உன்னைக் காத்தருளுவார். அவரது செவியை உனக்குச் சாய்த்து, உன்னை இரட்சிப்பார். நீ எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிருப்பார், உன்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டதினால், கர்த்தரே உன் கன்மலையும் உன் கோட்டையுமாய் இருக்கிறாா். உன் தேவன், துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் உன்னைத் தப்புவிப்பார் கர்த்தராகிய ஆண்டவரே, உன் நோக்கமும், உன் சிறுவயதுதொடங்கி உன் நம்பிக்கையுமாயிருக்கிறார். சங்கீதம் 71 :1-5

No comments:

Post a Comment