Wednesday, 22 June 2016

சங்கீதம் 73 :8-14,25,26

துன்மார்க்கர் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள், இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள், அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் தேவனுடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள், தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவருகிறது, தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர், இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நீ விருதாவாகவே உன் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே உன் கைகளைக் கழுவினாய். நாள்தோறும் நீ வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறாய் உன் மாம்சமும் உன் இருதயமும் மாண்டுபோகிறது, தேவன் என்றென்றைக்கும் உன் இருதயத்தின் கன்மலையும் உன் பங்குமாயிருக்கிறார். பரலோகத்தில் தேவனையல்லாமல் உனக்கு யார் உண்டு? பூலோகத்தில் தேவனைத் தவிர உனக்கு வேறே விருப்பமில்லை. தேவன் என்றென்றைக்கும் உன் இருதயத்தின் கன்மலையும் உன் பங்குமாயிருக்கிறார். சங்கீதம் 73 :26

No comments:

Post a Comment