Thursday, 23 June 2016

சங்கீதம் 73 :14-24

" நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். " என்று நீ சொன்னாயானால், இதோ, கர்த்தருடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவாய். இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தாய், நீ தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, துன்மார்க்கர் முடிவைக் கவனித்து உணருமளவும், அது உன் பார்வைக்கு விசனமாயிருந்தது. கர்த்தர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணினார். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவர், விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவார். இப்படியாக உன் மனம் கசந்தது, உன் உள்ளந்திரியங்களிலே குத்துண்டாய். நீ காரியம் அறியாத மூடனானாய், ஆண்டவருக்கு முன்பாக மிருகம் போலிருந்தாய். ஆனாலும் நீ் எப்பொழுதும் கர்த்தரோடிருக்கிறாய், அவர் உன் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறார். அவருடைய ஆலோசனையின்படி உன்னை நடத்தி, முடிவிலே உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார். சங்கீதம் 73 :15-24

No comments:

Post a Comment