Wednesday, 22 June 2016

காவல் துறைக்காக! ஜெபிப்போம்

காவல் துறைக்காக! ஜெபிப்போம் தமிழகக் காவல் துறைரையிலுள்ள முக்கியமான உயர் அதிகாரிகள் மற்றும் அதில் பணிபுரியும் அலுவல ர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு போலிசார் மீதும் தேவ ஆளுகை இறங்கிவர, சட்டத்திற்கு மீறி அவர்கள் எதுவும் செய்யாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பணம், மது, மாது, போன்றவைகளுக்கு அவர்கள் அடிமையாகாதிருக்க, 'போதும்' என்கிற மனதோடுகூட வாழ ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அப்பாவிகள், நிரபராதிகள் மிது பொய் வழக்கு போடுகிற காரியங்கள் தேசத்தில் இல்லாமல் போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள பெண் போலிசாருக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். காவல்துறையினரின் குடும்பங்களுக்காகவும், அரசியல் ரீதியான எந்தத்தொந்தரவும் காவல் துரையினருக்கு ஏற்படாதிருக்கவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment