Thursday, 16 June 2016

முதியோர்களுக்காக ஜெபிப்போம்

"முதிர்வயதுள்ளவர்களை கனம் பண்ண வேண்டும்" என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது.பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனவீனம் பண்ணாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பெற்றோர் முதிர்வயதாகும் போது, பிள்ளைகள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை சந்தோஷமாக மனமுவந்து செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தங்கள் தாயின் போதகத்தைத் தள்ளாமலும், அவர்களை அலட்சியம் பண்ணாமலும், அவர்கள் மூலமாக வருகிற கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment