307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்.
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். ‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.
என் அன்பு வாசகர்களே,
இவர்களில் யார் படு முட்டாள் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. கதையை படித்து முடித்ததும் நீங்களே அறிந்திருந்திருப்பீர்கள். முட்டாள்கள் என் அறிந்தும் அவர்களிடம் முட்டாள்த்தனமான காரியத்தை செய்ய சொல்லுபவர்கள் தான் உண்மையிலேயே படு முட்டாள்.
உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள், நீங்கள் சம்பளம் கொடுப்பதினால் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் நிச்சயம் செய்வார்கள். நீங்கள் சொல்வதையெல்லாம் செய்வதினால் அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் உங்களிடத்தில் சம்பளம் வாங்குவதால் நீங்கள் யாரிடத்திலும் அவமானப்பட்டுவிட கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் நீங்கள் சொல்வதற்கு கீழ்படிகிறார்களே ஒழிய மற்றபடியல்ல. எனவே அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை அவர்களுக்கு சொல்லுங்கள்.
ஒரு நல்ல முதலாளி, முட்டாளாய் தன்னிடத்தில் சேருகிற தன் பணிவிடைக்காரனை அறிவாளியாய் மாற்றுவான். அப்படி மாற்றவில்லையெனில் அவன் நல்ல முதலாளியல்ல. அது மாத்திரமல்ல தன் பணியாளர்களின் தேவைகளை முன்னரே அறிந்து அவர்கள் தேவை பூர்த்தியடைய செய்கிறான். மற்ற முதலாளிகளோ அப்படியல்ல தங்களிடன் பணியாளர்களை எவ்வளவு வேலை கொள்ள முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிக்கொண்டு அதற்கான சம்பளம் கொடுப்பதில்லை.
மேலும் பணியாளர்கள் தங்கள் முதலாளி என்ன காரியம் செய்ய சொன்னாலும் அதை உய்த்து ஆராய்ந்து செய்ய தகுந்த காரியமா?? செய்ய தகாத காரியமா?? என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பின்னர் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் மீதுள்ள நல்ல முதலாளியின் மதிப்பை நிச்சயம் அதிகரிக்கும். அதுவே மற்ற முதலாளி என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படும். எனவே முதலாளிகள் நல்லவர்களாகவும், பணியாளர்கள் வல்லவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பல்வேறு நிலைகளை அடைந்து உச்சத்தில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது உலக பிரகாரமான வேலைக்கு மாத்திரமல்ல ஊழியத்திற்கும் பொருந்தும் எனவே நமது பணியார்களை வல்லவர்களாக்குவது நமது கரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து,
எபேசியர் 6:5
6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:6
9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்டசபாதம் இல்லையென்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
எபேசியர் 6:9
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
308 தன்னுடைய மதிப்பை தக்கவைத்து கொள்.
ஒரு மேடைபேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார். அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள். பின்னர் அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் அது என்ன என கேட்டார். அப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள். பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி இப்போது இது என்னவென கேட்டார். இப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் தான் என கூறினார்கள்.
உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாலும் அது தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொண்டுள்ளது. அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த இக்கட்டு [சூழ்நிலை ] வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிகொள்ளாமல் நம்முடைய அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும் என கேட்டார் உடன் அனைவரும் எனக்கு எனக்கு என தத்தமது கைகளை உயர்த்தினார். ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டான்.
உடனே அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா நம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம், ஆனால் இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். ஆம் நம்மை சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன அவைகளை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி கொண்டு தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும் அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றனர் என்று அந்த மேடை பேச்சாளர் தமது உரையை முடித்துக் கொண்டார். ஜனங்கள் மிகுந்த ஆராவாரத்தோடு கைகளை தட்டி அவர் சொன்ன கருத்தை வரவேற்றனர்.
என் அன்பு வாசகர்களே,
இந்த உலகத்தில் மனிதனை தவிர மற்ற அனைத்தும் தங்களது மதிப்பை தற்காத்துக்கொள்கின்றன. ஏனெனில் மற்ற அனைத்தும் தன்மானம் நிறைந்தவை. மனிதனும் ஒரு காலத்தில் தன் மானம் காத்து நடந்தான். அன்றைய காலகட்டத்தில் தன் மதிப்பிற்கு ஏதாகிலும் பங்கம் வரும் பட்சத்தில் தங்களை ஜீவனையே துச்சமாக எண்ணி உயிர் நீத்தனர்.
ஆனால் இன்றோ தன்மானம் என்ற ஒன்றை அநேகரிடத்தில் காண்பதே அரிதாயிருக்கிறது.
இதற்கான காரணம் தான் என்ன?? என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு கிடைக்கும் பதில் இது தான். அன்று வாழ்ந்த மனிதன் இந்த உலகத்தை தனக்கு கீழ்ப்படுத்தி ஆண்டான். இன்றோ அதற்கு மாறாக இந்த உலகம் மனிதனை கீழ்ப்படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறது.
தன் மதிப்பை இந்த உலகத்திடம் கொடுத்துவிட்டபடியால் இந்த உலகம் அவனுடைய மதிப்பை தவிடு பொடியாக்கி விட்டது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய காலகட்டத்தில் இருக்கின்ற இளைஞர்கள் தான். தாங்கள் படித்த படிப்பின் பிண்ணனி தெரிந்தும் அதனுடைய மதிப்பை அறிந்தும் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த மதிப்பை உதறிதள்ளிவிடுகின்றனர். அதற்கான வாய்ப்பு கிடைக்கும் தருவாயில் அவர்கள் வேறொரு வேலையில் இருப்பதால் அதை உதாசீனப்படுத்தி விடுகின்றனர். அதன் விளைவாக அதற்கு தகுதியில்லாதவர்கள் அந்த வேலையை செய்கிறார்கள். சிறிது காலம் சென்ற பின்னர் தான் அந்த வாய்ப்பை தவற விட்டதற்காக வருந்துகின்றனர். நாம் முதாலவது அந்த மதிப்புமிக்க வேலைகளை நம்மை வந்து சேருவதற்கான வழியை ஏற்ப்படுத்தினால் தான் அவை நம்மை தேடி வருமே ஒழிய சும்மா இருந்த இடத்தில் என் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை மற்ற வேலைகளை செய்வதில்லை என்று இருக்கிறார்கள். சரி தான் ஆனால் அதற்கான முயற்சி ஏதும் செய்யாத பட்சத்தில் எல்லாம் வீணாகும்.
இதற்கு உதாரணமாக வேதத்தில், தன் விலையேறப்பட்ட மதிப்பாகிய சிரேஷ்ட புத்திர பாக்கியத்தை விற்றுப்போட்ட ஏசா, அதற்கான மதிப்பை அறிந்தபோது அவனால் அதை திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் யோசேப்போ, தன் ஜீவனுக்கே நஷ்டம் ஏற்படும் தருவாயிலும்கூட தன்னுடைய மதிப்பை காத்துக்கொண்டான், அதனால் தான் அவன் எதிர்ப்பார்த்த உயரிய பதவியை அடைந்தான்.
ஆம் அன்பானவர்களே, நம்முடைய மதிப்பை காத்துக் கொள்வது நம்மிடம் தான் உள்ளது. அதை உபயோகிப்பதும், உதாசீனப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. வேதம் சொல்கிறது,
3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
ஆபகூக் 2:3
எனவே நம்மை குறித்து தேவன் வைத்திருக்கிற தரிசனம் நிறைவேற அதற்காக காத்திருப்போம், தேவ தரிசனத்தை நிறைவேற்றுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
309 வாக்கு மாறாத பசு
காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.
அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது.
அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. ”
புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”. புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?”
புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு”
புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு”
பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.
அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”
அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.
புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக” சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்கமாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.
புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.
என் அன்பு வாசகர்களே,
பிறருக்கு நாம் ஒரு வாக்குறுதி அளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இக்கதையின் கருத்து.
நாம் பிறருக்கு கொடுக்கும் வாக்கு ஒருவேளை நமக்கு அது விருதாவாய் இருக்கலாம் ஆனால் அந்த வாக்கை கேட்பவர்களுக்கு அது தேவ வாக்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவேளை நாம் கொடுத்த வாக்கை மறக்கலாம் ஆனால் அதை கேட்பவர்கள் அது நிறைவேறும் வரை ஒருபோதும் அதை மறப்பதில்லை. அதற்காக அனுதினமும் காத்திருப்பார்கள்.
நாமும் அதைப் போலத்தான் தேவன் நமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று அனுதினமும் காத்திருந்து ஜெபிக்கிறோம். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுகிற வரை இடைவிடாது அந்த காரியத்திற்காக ஜெபிப்பதைப்போலவே நாம் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று அவர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பு அவமாய் போகும் பட்சத்தில் அவர்கள் எதையும் செய்ய துணிந்து விடுவர்.
வேதாகமத்தில் தன் மாமனாகிய யூதா கொடுத்த வாக்குறுதியை மறந்துபோனதினால் அதை நியாபகப்படுத்த தாமார் செய்த காரியம் (ஆதி 38:6-12) வசனங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தாமார் அந்த வாக்குத்தத்தம் நிறைவேற யாரும் எதிர்பாராத காரியத்தை செய்து அதை நிறைவேற்றிக்கொண்டாள். ஆனால் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட வர்கள் தேவனுக்கு நியாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவர் சொன்ன வாக்கு மாறுவதில்லை என்று வேதம் சொல்கிறது. நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே அந்த வாக்குத்தத்தம் நிறைவேற பொறுமையோடு காத்திருக்கு வேண்டும்.
36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 10:36
அவ்வாறு பொறுமையோடு காத்திருந்து நாம் விரும்பியதை பெற்றுக்கொள்ளும் போது
12 நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
நீதிமொழிகள் 13:12
எனவே பொறுமையோடு காத்திருப்போம், ஜீவ விருட்சத்தை பெற்றுக் கொள்வோம்..........
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
310. ஜெயம்
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.
அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.
சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.
அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.
நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.
பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.
எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.
எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.
இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்க ப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.
இந்த நிலையில் இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது.
10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.
இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.
அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.
அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.
அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்.
அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று ,
" என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.
"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.
ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை.
ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு ஏதும் சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
"என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?" இப்போது சிறிதாய் அவனுக்கு பயம் துளிர்விட்டது.
போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.
அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே . என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .
அவ்வளவுதான் . வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.
இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.
அன்புக்குாியவா்களே,
பலருடைய வாழ்வில், வந்துவிட்ட வியாதியைவிட,
மரணம் வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை மரணத்தில் விழத் தள்ளிவிடுகிறது.
பலவீனங்களை நோக்கிப் பாா்க்கும்போது நாம் பலவீனப்பட்டுத்தான் போவோம். என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த பெலவீனன் என்ற எண்ணங்களை தேவபெலம் என்ற ஆயுதத்தால் முற்றிலும் அழித்து விடுங்கள்.
சகல வல்லமைக்கும் தேவனானவர் நம்முடன் இருப்பதை எண்ணினால் எந்த பலவீனமும் நம்மை வெல்ல முடியாது".
பைபிள் சொல்கிறது...
"உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக". (யோவேல் 3:10)
விசுவாசத்தினாலே...
ராஜ்யங்களை ஜெயித்தார்கள்,
நீதியை நடப்பித்தார்கள்,
வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்,
சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
🧡அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்,
பட்டயக்கருக்குத் தப்புனாா்கள்
பலவீனத்தில் பலன்கொண்டார்கள்.
யுத்தத்தில் வல்லவர்களானார்கள்,
அந்நியருடைய சேனைகளை முறிய. அடித்தார்கள். (எபிரேயர் 11:33-34)
பயம் என்பது சாத்தான் நமக்கு தோல்வியைத் தருவதற்கு முன் அனுப்பும் ஆயுதம்... இந்த பயம் யாருக்குள்ளே வருகிறதோ அவா்கள் அனைவரும் தோல்வியினால் வீழ்கிறாா்கள்.
பயம் பாதகமான வாா்த்தைகளை கேட்கும் போது வருகிறது. பாதகமான வார்த்தைகள் அனைத்தும் பொய். இது சாத்தானின் தந்திரம்.
ஆதியில் இந்த பாதகமான வாா்த்தைகளை சா்ப்பத்தின் மூலமாகப் பேசி தான் ஆதாம் ஏவாள் ஆகிய இரண்டுபோின் மனதை தேவனுடைய உண்மையினின்று விலகும்படிக் கெடுத்தான்.
பவுல் சொல்கிறாா்...
சா்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
(2 கொரிந்தியர் 11:3)
எனவே
உங்கள் வாழ்வில் உங்களை தோல்வியுற செய்ய சாத்தான் உங்களுக்குத் தொிந்த நண்பர்கள், உறவினா்கள் நம்பிக்கையானவா்கள் மூலமாக பாதகமான வார்த்தைகளை பேசுவான். இப்படி உங்களை தோல்வியுறச் செய்ய தந்திரமாய் கிாியை செய்யும் போது அதைக் குறித்து பயப்பட்டு யோசிக்காதீா்கள்.
நீங்கள் இயேசுவை ஏற்றுகொண்ட போதே தேவனுடைய பிள்ளைகளானீா்கள். அவா் இரத்தத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டீா்கள்.
அப்போதே அவருக்குள்ளே இருக்கிற ஜெயம், ஜீவன், அழியாமை ,நித்ய ஜீவன்,ஆகியவைகள் இரட்சிப்பின் ஆசீா்வாதங்களான நீதி, பரிசுத்தம், ஆசீா்வாதங்கள்,ஐஸ்வா்யம், தெய்வீக சுகம், ஆரோக்கியம் சவுக்கியம் ஆகிய இவைகளோடு கூட உங்களுக்குள்ளே தான் இருக்கிறது.
இவைகளையல்லாமல்,
கிருபை,மகிமை, வேதவசனம்,சா்வாயுதவா்க்கம், வரங்கள், ஆவியின்கனி ,திறமை, சாமாா்த்தியம், மகிழ்ச்சி சமாதானம், சந்தோஷம், அபிஷேகம் ஆகிய இவைகள் அனைத்தும் உங்கள் ஆவிகியாகிய இருதயத்தில் இருக்கிறது..
அப்புறம் நீங்கள் ஏன் பயப்படவேண்டும் ???
தேவாதிதேவன் உங்களுக்குள்ளே இவைகளை வைத்திருக்கிறாா் என்று நீங்கள் விசுவாசித்து அறிக்கையிடுங்கள். நீங்கள் யாரென்பதை உங்களைக் குறித்து நீங்கள் அறியும் போது உங்களை சாத்தான் ஏமாற்ற முடியாது.
நீங்கள் கண்களில் காண்பதெல்லாம் உண்மை யாக இருந்தாலும் அது நிரந்தரமானதல்ல. நீங்கள் எப்போது அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் அகற்றி விடுகிறீா்களோ அப்போதே அது உங்களை விட்டு ஓடி விடும்.
வேதம் சொல்கிறது..
பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
பிள்ளைகளே,
நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
பிதாக்களே, ஆதி முதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
(1 யோவான் 2:13,14)
நீங்கள் பிதாக்களாயிருந்தாலும் ,வாலிபராய் இருந்தாலும், பிள்ளைகளாயிருந்தாலும் இயேசுவை ஏற்றுகொண்ட நீங்கள் ஆதிமுதல் இருந்தவரை அறிந்திருக்கிறீா்கள், ஜெயித்து இருக்கிறீர்கள், வசனம் நிலைத்திருக்கிறது.
பலவான்களாயிருக்கிறீா்கள்.
எப்போது இவைகளை அடைந்தீா்கள். ???
இயேசுவை தெய்வமாய் ஏற்றுகொண்டு தேவன் உடைய பிள்ளைகளாகும் போதே. இவைகள் உங்களுக்குள் வந்துவிட்டது.
எனவே நீங்கள் எதற்கும் மனம் கலங்காதீா்கள்.
நீங்கள் யாாரென்பதை என்பதையும், உங்களுக்குள் இருப்பதைப் பற்றியும் அறிந்து விசுவாசியுங்கள். உங்களை யாரும் தோற்கடிக்க முடியாது.
🦋 நீங்கள் ஜெயித்தவா்கள் !!
🦋 ஜெயித்துக் கொணடேயிருக்கிறவா்கள் !!!
🦋 ஜெயிக்கும் போகிறவா்கள்.!!!!!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
(1 கொரிந்தியர் 15:57)
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
311 வீண் வாக்குவாதங்கள்
ஒரு மாலை வேளையில் இரண்டு நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு வழி நடந்தார்கள்.
ஒருவன் சொன்னான், "ஆ! இந்த வானம் எவ்வளவு பெரியது. அவ்வளவு பெரிய நிலமும், புல் வெளியும் எனக்கிருந்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!" என்றான்.
அடுத்தவன் சொன்னான். "ஆ! இந்த வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல ஏராளமான ஆடுமாடுகள் எனக்கிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்"
"சரி, உனக்கு அவ்வளவு ஆடுமாடு கிடைத்தால், மேய்ச்சலுக்கு என்ன செய்வாய்?" என்று கேட்டான் முதல் ஆள்.
"அதற்கென்ன, நீ தான் வானம் போன்ற புல்வெளி கிடைக்கும் என்கிறாயே, அதில் மேய்த்துக் கொள்வேன்."
அது எப்படி? என் புல்வெளியில் ஒரு ஆட்டைக்கூட நான் அனுமதிக்க மாட்டேன். அப்படி வந்தால், காலை முறித்துவிடுவேன்" என்றான்.
அவ்வளவுதான் இரண்டு பேருக்குள்ளும் பெரிய சண்டை வந்துவிட்டது. இவனிடம் புல்வெளியும் இல்லை. அவனிடம் ஆடுகளும் இல்லை. ஆனால் போட்ட சண்டையோ , மகா பயங்கரம்.
வீண் சண்டைகளும், வீண் கவலைகளும், வீண் வாக்குவாதங்களும், வீண் சிந்தைகளும், பாவத்திற்குள் வழி நடத்தும்.
"ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள். பிலிப்பியர் 2 : 3
312 போதகரும் நடிகரும்
பிரபல நடிகர் ஒருவர் இருந்தார். இனிய குரலில் அழகாகப் பேசுவார். சத்தத்தை உயர்த்தியோ, தாழ்த்தியோ, பொருளுக்கேற்ப கவர்ச்சிகரமாகப் பேசுவார்.
ஒரு நாள் அவருடைய நண்பர் வீட்டில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. ஏராளமான விருந்தாளிகள் வந்திருந்தனர்; இந்த நடிகரும் வந்திருந்தார். விழா நிகழ்ச்சிகளில் அந்த நடிகருக்கும் ஒரு பங்கு கொடுக்க யாவரும் விரும்பினர். அவரும் அதற்குச் சம்மதித்தார்.
அவர் முறை வந்தபோது, மேடைக்கு வந்தார். "எந்த வார்த்தையை அபிநய நடிப்புடன் நான் சொல்லவிரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். சற்று நேர அமைதிக்குப்பின் ஒரு போதகர் எழும்பி, 23ஆம் சங்கீதத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.
வேதப் பகுதியன்றைச் சொல்லுவார்களென்று நடிகர் எதிர்பார்க்கவில்லை. சில வினாடிகள் தயக்கத்துடன் காட்சியளித்தார். பின் போதகரை நோக்கி: "நல்லது, கவர்ச்சிகரமாக அதை ஒப்பிக்க என்னால் கூடும்; ஆயினும் ஒரு நிபந்தனை; நான் ஒப்பித்தபின், நீரும் அதை ஒப்பிக்க வேண்டும்'' என்றார்.
போதகரும் இப்படி ஒரு நிபந்தனையை எதிர்பார்க்கவில்லை. அவர் நடிகரை நோக்கி: "உம்முடைய நடிப்புத் திறமையில் ஒரு சிறிய பகுதி அளவுகூட என்னிடம் கிடையாது. ஆயினும் அப்படி ஒரு நிபந்தனையை நீர் விதிப்பதாயிருந்தால், உமக்குப்பின் நானும் அதை ஒப்பிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை'' என்றார்.
நடிகர் முதலாவது அதை மனப்பாடமாக அபிநயத்திடன் ஒப்பிக்க ஆரம்பித்தார். ஆஹா! எவ்வளவு இனிமை! கம்பீரமான குரல்; பொருத்தமான அபிநயம்: விருந்தாளிகள் அப்படியே வியந்துவிட்டனர். நடிகர் ஒப்பித்து முடிந்ததும், பலத்த கரகோஷம்; வானைப் பிளக்கும் ஆரவாரம்; ஏகப் பாராட்டு.
பின் போதகரின் முறை. ஒப்புக்கொண்டபடி அவரும் மேடைக்கு வந்தார். தமது பாணியிலே ஒப்பிக்க ஆரம்பித்தார். நடிகரின் சிறப்புகள், போதகரின் ஒப்பித்தலில் இல்லை. குறைந்த இனிமை; கரகோஷம் இல்லை; ஆரவாரம் இல்லை; பாராட்டு இல்லை.
ஆனால்...?
ஒரே நிசப்தம்; தலைகுனிந்த நிலை; ஆறாய் பெருகின கண்கள்; அத்தனை கவர்ச்சியா? இல்லை, அத்தனை இதய உணர்ச்சி; உணர்ச்சிவசத்தால் கண்ணீர்; அதைச் சிந்தாத கண் ஒன்றுகூட அங்கு இல்லை.
சில வினாடிகள் அமைதிக்குப்பின், நடிகர் மீண்டும் மேடைக்கு வந்தார். சில வார்த்தைகள் பேச விரும்பினார். மிகுந்த உணர்ச்சிவசத்தால், அவரால்கூட வழக்கம்போல் பேச முடியவில்லை. தளதளக்கும் குரலில்: "நண்பர்களே, எனது திறமையால் உங்கள் கண்களைக் கவர்ந்தேன், உங்கள் செவிகளையும் கவர்ந்தேன். இவரோ உங்களுடைய உள்ளங்களையே தொட்டுவிட்டார். எங்கள் இருவரின் ஒப்பிப்பதலிலும் ஒரு பெரும் வித்தியாசம்! நான் இந்த மேய்ப்பர் சங்கீதத்தை மாத்திரம் அறிந்தவனாயிருக்கிறேன்; அவரோ அந்த சங்கீதத்தின் மேய்ப்பிரையே அறிந்தவராயிருக்கிறார்!'' என்றார்.
"ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்'' (யோவான்.17:3)
313. மனசு_சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை ஒரு குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது.
அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டான். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம்
சென்ற பிறகு, குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.நீர்நிலை அருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை மொண்டு கொண்டு சீடன் குருவிடம் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அமைதியாக மனதை அப்படியே கடவுளிடம் விட்டு விட வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்த மனது கடவுளின் அருளால் சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது கடவுளின் அற்புத சக்தியால் அமைதியாகிவிடும் .
நடக்க வேண்டியது எல்லாம் சரியாய் நடக்கும் அது நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! கடவுளின் பங்கு மாத்திரமே
..
என்_அன்புக்குாியவா்களே,
மனங்கலங்கி போய் சஞ்சலப்படுகிறீா்களா? பலவிதமான பிரச்சனைகளினால் நீங்கள் அமைதியின்றி தவித்து என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் பொது...
தேவன் சொல்கிறாா்.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறாா். யோசுவா 1:9
கா்த்தா்
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாா். அவா் யாவையும் செய்து முடிப்பாா். (சங்138 :8)
எனவே எதைக்குறித்தும் சஞ்சலப்படாதீா்கள். கலக்கமடையாதீா்கள். இஸ்ரேல் ஐனங்களுக்கு விரோதபாக யுத்தம் செய்கிற எதிாிகளைக் குறித்து தேவன் சொல்கிற காாியம் என்ன வென்றால்..
இஸ்ரலேரே, கேளுங்கள்,
இன்று உங்கள் சத்துருக்களுடன்யுத்தம் செய்யப் போகிறீர்கள், உங்கள் இருதயம் துவள வேண்டாம், நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லுங்கள்.
(உபாகமம் 20:3,4)
இந்த வசனங்களின்படி உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். அவர்தான் உங்களுக்காக யுத்தம் செய்கிறவா் நீங்கள் சும்மாயிருங்கள். (அமைதியாயிருங்கள்) என்ற கருத்தினை தேவன் வலியுறுத்துகிறார்.
விசுவாசமாய் பேசுங்கள் !! விசுவாசமாய் ஜெபியுங்கள்.!! இப்படி விசுவாசத்தை செயல் படுத்துங்கள்.கா்த்தா் உங்களுக்காக செயல் படுவாா்.
கா்த்தா் சொல்கிறாா்.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன்,நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள், உன்னோடே வழக்காடு கிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமல் போவார்கள். உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்,
உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றும் இல்லாமல் இல்பொருளாவார்கள். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்றாா். (ஏசாயா 41:10 -13)
நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
(எரேமியா 31:13(
சஞ்சலத்தோடே மனம் கலங்கிபோன உங்கள் மனதை சஞ்சலம் நீங்கி சந்தோஷப்படுத்துவாா்!
நீங்கள்_ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்
314. பிரச்சனைகளில்லாத_வாழ்வு....
ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார்.
முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.
இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும் வழியில்
பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.
தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார்.
"வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.
தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.
காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.
தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.
தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.
அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு கா்த்தாிடத்தில் என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன்.
வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்து கொண்டு போக கூடாது.
காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்?
நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்துக்கு அருகில் நின்று ஜெபம் செய்து பிரச்சளைகள் இல்லாமல் சமாதானமாய் போவேன்.
ஆச்சரியம் என்னவென்றால் நான் மாலை கொண்டு வந்து ஜெபித்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை முழுவதுமாக தேவன் தீர்த்து வைத்திருப்பார்.
தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.
என் அன்புக்குாியவா்களே,
நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் அஞ்சி ஓடும்.
பைபிள் சொல்கிறது..
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
(சங்கீதம் 55:22)
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது,
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
(பிலிப்பியர் 4:6,7)
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
பிரச்சனைகளில்லாமல் வாழச் செய்வாா்.
குறைவில்லாத வாழ்வு
வியாதியும், நோய்களும் இல்லாத வாழ்வு,
கடனில்லாத வாழ்வு பிரச்சனைகளில்லாத மனது ஆகியவற்றை தேவன் உங்களுக்குத் கென்று இரட்சிப்பில் ஏற்படுத்தி வைத்து இருக்கிறாா்.
விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள். விசுவாசித்து பெற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவர்கள்
315 நீயே முயற்சி செய்
ஒருநாள் விவசாயி ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.
"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.
என் அன்பு வாசகர்களே,
"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" என்று ஒரு கூற்று உண்டு. "முயற்சி திருவினையாக்கும்" என்ற மற்றொரு கூற்றும் உண்டு. எல்லாம் எடுத்துரைப்பது ஒன்றை மட்டும் தான். முயற்சி, விடாமுயற்சி இவற்றிற்குள்ள வேறுபாடு நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
முயற்சி இல்லையேல் வெற்றி இல்லை. எந்தவொரு காரியமானாலும் கடினமோ, எளிதோ அந்த காரியத்தை முயற்சி செய்து பார்க்கும்போது ஏதாகிலும் ஒரு வழி நிச்சயம் பிறக்கும். எப்படியெனில் எளிதான காரியத்திற்கு முயற்சியும், கடினமான காரியங்களுக்கு விடாமுயற்சியும் இருக்குமாயின் சாதித்து விடலாம்.
வேதாகமத்தில் இஸ்ரவேலரின் முதலாம் ராஜாவாகிய சவுல் தன் தகப்பன் கழுதைகள் தொலைந்துபோன செய்தியை கேள்விப்பட்டதும் அவன் தரித்திராமல் கழுதைகளை தேட முயற்சி செய்து புறப்பட்டான். எனவே தேவன் அவனுக்கு உதவி செய்து அந்த திசையில் சென்றால் தொலைந்த கழுதைகள் கிடைக்கும் என்று கூறினார். எளிதில் தன் தகப்பன் கழுதைகளை கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைந்தான். அதேபோலவே யாக்கோபு ஒரு இரவு முழுவதும் விடாமுயற்சியுடன் தேவனை விடாமல் பற்றிக்கொண்டு இஸ்ரவேல் என்கிற ஆசீர்வாதத்தை சுதந்தரித்தான்.
வெறுமனே இருந்துகொண்டு தேவன் எனக்கு எல்லாம் தருவார் நான் எல்லா ஆசீர்வாதத்தையும் சுதந்தரிப்பேன் என்று வீம்புபேசுவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. தேவன் உதவுவது யாருக்கென்றால் தனக்கென்றோ, தன் குடும்பத்திற்கென்றோ பிழைப்பிற்கென்று எந்த ரீதியும் இல்லாதவர்களுக்கு தான் தேவன் உதவுவாரே ஒழிய மற்றபடி எல்லா சவுகரியங்களும் இருந்தும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு தேவன் உதவுவது இல்லை.
அதுபோலவே தான் ஊழியத்திலும், தேவனே எனக்கு கொள்ளை பொருளாய் ஆத்துமாக்களை தாரும் என்று பல மணிநேரம் போராடி ஜெபிப்பார்கள். ஜெபித்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். களத்தில் சென்று சுவிஷேசத்தை அறிவிக்கவோ, தேவனுடைய வார்த்தையை பகிரவோ செய்யாமல் நான் ஜெபித்து விட்டேன் தேவன் பார்த்துக்கொள்வார் என்று முயற்சி செய்யாமல் விட்டுவிடுவார்கள். அதன் பலன் அவர்கள் பல மணிநேரம் ஜெபித்த ஜெபம் விருதாவாய் மாறிவிடும். நாம் முயற்சி செய்யும் பட்சத்தில் தேவன் நமக்கு அனுகூலமான வழிகளை திறந்து எளிதில் வெற்றியடைய செய்வார்.
வேதம் சொல்கிறது,
8 சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
1 தீமோத்தேயு 4:8
எனவே சரீர முயற்சி மாத்திரமல்ல தேவ பக்தியும் அவசியம். தேவ பக்தியோடு சரீர பிரகாரம் முயற்சி செய்தால் மட்டுமே காரியத்தை ஜெயமாய் மாற்ற முடியும். எனவே நம்மால் இயன்ற மட்டும் தேவ பக்தியோடு சரீர பெலத்தையும் உபயோகிப்போம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
316 பாகங்களும்_பாகங்களும்..
ஒரு அரசனுக்கு திடீரென
இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.
அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும். அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.
அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.
நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால்
இடது பக்கம் திரும்ப வேண்டும்.
வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்.
நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.
நடந்து கொண்டே இருக்கவேண்டும்.
எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை.
என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.
கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலி கேட்கிறது. ஆா்வம் மிகுதியால் திரும்பி பாா்த்து அவனும் கற்சிலையாகி விடுகிறான்.
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.
இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.
பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
அன்புக்குாியவா்களே,
பின்னால் வரும் தேவதைதான் நமது மனம் நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதி யை தடுக்க .எல்லா முயற்ச்சியையும் செய்யும்.
அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.
மனதில் தோன்றும் பாவமான, பாரமான காாியங்களை பேசவும், செய்யவும் மனது மூலம் சாத்தான் சரீரத்தில் செய்ய வைப்பான்.
அதற்கப்புறம் நீங்கள் கற்சிலையாய் மாறி இதுவரை நீங்கள் செய்து வந்த வேலை, படிப்பு ஊழியம் எல்லாவற்றையும் உங்களைக் கொண்டே சாத்தான் தந்திரமாக உங்களை விட்டு நிறுத்தி விடுவான்.
அதாவது உங்களை கற்சிலை என்ற கோபம், வைராக்கியம், முறுமுறுப்பு எல்லாமே உங்கள் மனதில் சாத்தான் தோன்றச் செய்து நீங்கள் செய்துவந்த சகலவற்றையும் நிறுத்திவிடுவான்.
அதற்கு பின்,
தேவன் உங்கள் மேல் வைத்த திட்டங்களும், தீர்மானங்களும், நோக்கங்களும் வீணாய் போய் விடும். உங்கள் ஆவிக்குாியவாழ்வு, குடும்ப வாழ்வு, எதிர்கால வாழ்வு சூனியமாகிவிடும்.
எனவே
இந்த வினாடியே மனம் திரும்புங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால் உங்களை திருத்தி கொள்ளுங்கள். மற்றவா்கள் தவறு செய்து இருந்தால் மன்னியுங்கள்.
கிறிஸ்தவ வாழ்வானது ரோஷம் இல்லாத வாழ்க்கையாகும் எது நடந்தாலும் கா்த்தா் பாா்த்துக் கொள்வாா்.
என்று நினையுங்கள்.
இன்று மட்டுமல்ல, உலகத்தில் உள்ள வரை,,
பலவிதமான பிரச்சனைகளின் பாரங்கள் உங்களுக்கு வந்தாலும், உங்கள் மனதில், வாயில், செய்கையில் பாவங்கள் வருவதற்கு சாத்தான் முயற்சி செய்தாலும் அதை இயேசுவின் நாமத்தில் தள்ளி விடுங்கள்..
அப்போது பிழைத்துக் கொள்வீா்கள்...
*பைபிள் சொல்கிறது...*
*"பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்".*
*-(எபி 12:1)*
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்.
317 உண்மையான அழகு எது?
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே,
அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.
சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.
அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.
கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.
அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.
உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
என் அன்பு வாசகர்களே,
இந்த உலகத்தில் தாயின் அன்பு ஈடற்றது, இணையற்றதுஎன சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் அழகு என்பதை வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது.
நாம் நல்லெண்ணத்தோடு பிறருக்கு உதவி செய்யும்போது அவர்களின் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம். ஆம் இன்றைய கதையில் தன்னுடைய தாய் கருப்பாகவும், ஒரு கண்ணில் காட்சி இல்லாமல் இருந்தபோதும் தன்னை அன்போடும், பண்போடும் நடத்தினதால் அவன் கண்களுக்கு மிகுந்த அழகுள்ளவளாய் காணப்பட்டாள்.
நாம் எத்தனை பேர்களின் கண்களுக்கு அழகுள்ளவர்களாய் காணப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். சிலரின் எண்ணம் இதுதான். நான் கருப்பாயிருக்கிறன் என்னை யார் நேசிப்பார்கள், எனக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை என்று எந்நேரமும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இருதயம் அழகாக இருப்பவர்கள் தான் இந்த உலகத்தில் மிகுந்த அழகுள்ளவர்கள்.
இந்த தாயைப்போல அன்பும், அரவணைப்பும் நமக்கு இருக்கும் பட்சத்தில் அனைவரின் கண்களுக்கும் நாம் அழகானவர்கள் தான்.
ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார்,
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2
நாம் விரும்பத்தக்க ரூபம் இல்லாமல் போக காரணம் நாம் தான். நம்முடைய பாவங்களை, பாபங்களை, வியாதிகளை தன்மேல் சுமந்துகொண்டு அடிக்கப்பட்டு, நொருக்கப்பட்டார். அவர் பூரண அழகுள்ளவராய் இருந்தும் நமக்காக அவருடைய அழகை இழந்தார் மட்டுமல்ல தன் ஜீவனையே கொடுத்தார்.
ஆகவேதான் பல நூறு ஆண்டுகளாக அநேகருடைய இருதயத்தில் மிகுந்த அழகுள்ளவராய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை நாம் இந்த உலகத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும் இந்த உலகம் உள்ளவரை அவருடைய அழகும், அன்பும் போற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே இவ்வுலகில் வாழும் நாட்களில் நம்மால் மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவுவோம் அழகுள்ளவர்களாய் மாறுவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
318. வேதம் விலை மதிப்பற்றது.
பாரசீகம் என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட ஈரான் நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிறந்த மன்சூர்சிங் தனது வாலிப நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
தனது விடாமுயற்சியின் மூலமாக பல்மருத்துவராக மாறிய இவர், ஈரான் நாட்டின் பாலைவனங்களிலும், மலைகளிலும் சுற்றித்திரிந்து, ஏழை கிராமமக்களுக்கு இலவசமாய் மருந்துகளை வழங்கி இயேசுவின் அன்பை நற்செய்தியாக அறிவித்து வந்தார்.
இஸ்லாமிய நாட்டில் இயேசுவைப்பற்றிக் கூறியமைக்காக பலமுறை சவுக்கால் அடிபட்டு, சிறைக்குக் சென்றார்.
இவ்வாறு ஒருமுறை பிடிக்கப்பட்டு ஷிராஸ் (Shiraz) நகர சிறையில் இருந்த பொழுது, தைரியமாக இயேசுவின் அன்பை அநேகருக்கு அறிவித்துவந்தார்.
இதை அறிந்த பாஹாய் (Bahá'í) மதத்தை சேர்ந்த காவல் அதிகாரி மன்சூரை தன்னிடம் அழைத்தார். மன்சூரிடம் புதிய ஏற்ப்பாட்டு புத்தகத்தைக் காண்பித்து,
“இதன் விலை என்ன?” என்று கேட்டார். மன்சூர் பதிலாக, “இந்த புத்தகத்தை இலவசமாக பிறருக்கு வழங்கின்றோம்” என்றார்.
சிறைச்சாலை அதிகாரி ஏளனமாக சிரித்துக்கொண்டே, “அதுவே அதற்கேற்ற சரியான விலை. தகுதியற்ற இந்த புத்தகத்திற்கு நிர்ணயத்த விலை சரியானதே” என்று கூறி
தன்னிடம் இருந்த பாஹாய் மதநூலைக் காண்பித்து, இதை வாங்க பெருந்தொகை கொடுக்க வேண்டுமென்று கூறினார்.
மன்சூர் அவ்வதிகாரியின் அறையில் இருந்த மின்சார விளக்கைக் காண்பித்து, “இது என்ன விலை?” என்று கேட்டார். அது அதிக வெளிச்சத்தைக் கொடுக்கும்படியாக அதிக பணம் கொடுத்து வாங்கியதாக கூறினார்
காவல் அதிகாரி. பின்னர் மன்சூர், ஜன்னல் வழியாக வெளியே சூரியனை சுட்டிக்காட்டி,
“அதோ அந்த சூரியன் உமக்கு தேவையான ஒளியை பகல் முழுவதும் கொடுக்கின்றது. அதற்கு எவ்வளவு விலை கொடுத்தீர்” என்று கேட்டார்.
பதில் கூறமுடியாமல் திகைத்த காவல் அதிகாரிடம் மன்சூர், “ஐயா, மனிதர்’களால் படைக்கப்பட்ட மின்சார விளக்கையும், உமது மதநூல்களையும் வாங்க அதிக பணம் தேவைதான்.
சூரியன், சந்திரன், காற்று, நீர் போன்றவை விலைமதிக்க முடியாததாக இருந்தாலும் அவற்றை தேவன் மனிதனுக்கு இலவசமாக வழங்குகின்றார்.
அதேப் போலத்தான் இந்த புதிய ஏற்ப்பாடு புத்தகமும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி, நமக்கு பாவமன்னிப்பையும், மீட்பையும் இலவசமாக தந்துள்ளார்.
புதிய ஏற்ப்பாடு புத்தகத்தை வாசிப்பதின் மூலம் நீங்களும் இயேசுவைப்பற்றி அறிந்து கொள்ளமுடியும்” என்று கூறினார்.
தமது தவறை உணர்ந்த காவல் அதிகாரி மன்சூர் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பிவைத்தார்.
#பிரியமானவர்களே,
ஒவ்வொரு நாளும் தேவன் நமக்கு இலவசமாக கொடுக்கின்ற காற்றை சுவாசிகின்றோம். சூரிய ஒளியை அனுபவிகின்றோம். தண்ணீரைக் குடிக்கின்றோம். அதேபோல தேவன் நமக்கு ஈவாக அருளிய வேத வசனத்தை அனுதினமும் தியானிக்க வேண்டும்.
“உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை”
-(சங் 119: 101,165).
நீங்கள் அனுதினமும் வேதத்தை தியானித்தால் நிச்சயமாக பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
தினமும் வேதத்தை வாசித்து தியானியுங்கள்..
நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும். அந்த வழியிலும் உங்களை நடத்தும். இருளுள்ள ஸ்தலத்தில் ஒளியாய் பிரகாசிக்கும்.
தினமும் வேதம் வாசித்து தியானிப்பதால்
அறிவும், புத்தியும், ஞானமும், வெளிச்சமும், விவேகமும் ஆகிய அனைத்தும் உங்களுக்குள் வரும்.
அப்படி வரும்போது நீங்கள் திறமை உள்ளவர்களாகவும், உங்களை மீறின சக்தியுள்ளவர்கள் உங்களை விட யாருமே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு உங்களை உயர்த்தி விடும்...
உதாரணம்:
யோசேப்பு, மோசே, யோசுவா, நெகேமியா, எஸ்றா, தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ,பேதுரு, யோவான், பவுல் ஆகிய இவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்து பாருங்கள். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் திறமையும், அறிவாற்றலும், ஞானமும் உள்ளவர்களாய் தங்கள் வாழ்க்கையில் சாதித்தார்கள். இவர்கள் பின்னணியில் இருந்து சாதிக்க வைத்தது விலைமதிப்பற்ற வேதத்தை தவிர வேறும் ஒன்றுமில்லை.
"உங்களையும் விலைமதிப்பற்ற வேதம் விலையேறப்பட்டவர்களாய் மாற்றும்".!!.
ஆமென்.
நீங்கள்_ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
319 இரட்டிப்பான வரம்
நவின் டேவிட் விட்டில் ஊருக்கு கிளம்பினார்கள் . பெரிய காரில் சென்றார்கள் . நின்று பார்த்துக்கொண்டேயிருந்தான் . அவனுக்கும் காரில் செல்ல ஆசையாக இருந்தது . அவனோ மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் . நவின் ஆலயத்திற்குச் சென்றான் . எனக்கும் கார் வேண்டுமென ஜெபித்தான் . அதன்பின் வீட்டுக்கு வந்தான் .
அவன் அம்மா " ஏன்டா இன்று நீ வேதாகமம் வாசித்தாயா ? எங்கு வெளியில் சென்று வருகிறாய் ? முதலில் வேதாகமம் வாசி பின்புதான் உனக்கு சாப்பாடு என்றார்கள் . நவின் வேதாகமத்தைத் திறந்தான் .
2 இராஜாக்கள் 2 ம் அதிகாரம் வந்தது . அந்த அதிகாரத்தில் எலிசா எலியாவை விடாது பின்சென்று இரட்டிப்பான வரத்தைப் பெற்றுக்கொண்டது அவன் மனதைத் தொட்டது .
கர்த்தரிடம் அவன் கார் வேண்டுமென்று கேட்டிருந்தானே ! அதற்குரிய வழி அவனுக்குப் புலப்பட்டது . எலிசா எப்படி எலியாவை விடாமல் பின்சென்றானோ அதைப்போலவே தானும் இடைவிடாது படிக்க தீர்மானித்தான் . தன் பாடங்களை ஜெபத்துடன் படிக்க ஆரம்பித்தான் .
ஏற்கனவே படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த அவனால் படிக்கவே முடியவில்லை . முயன்று படித்தான் . விளையாட்டைக் குறைத்தான் . தூக்கத்தைக் குறைத்தான் . முயன்று படித்தான் . சிறிது சிறிதாக அவனது மதிப்பெண் கூட ஆரம்பித்தது .
10 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றான் . +1 . +2 அரசாங்கமே நல்ல பள்ளியில் படிக்க வைத்தது . +2 முடித்தான் . நல்ல மதிப்பெண் இருந்ததால் நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது . படித்தவுடன் நல்ல வேலையில் அமர்ந்தான் .
இப்பொழுது நவீனிடம் சாதாரண கார் அல்ல மிகவும் விலையுயர்ந்த கார் இருக்கிறது . ஊரடங்கு காலமதால் தன் சொந்த ஊருக்கு வந்திருந்தான் . அங்கு ஆலயத்தைப் பார்த்தான் .
இன்று பெரிய பொறியாளராக இருக்கும் நவீனுக்கு அன்றைய ஜெபம் நியாபகம் வந்தது . ஆம் . அன்று நவின் கர்த்தரிடம் காரைக் கேட்டான் . கர்த்தர் அவனுக்கு விடா முயற்சி என்னும் வழியைக் காட்டினார் . நல்ல ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் .
320 எருசலேம் வீதியிலே
எருசலேம் வீதியிலே இரண்டு கழுதைகள் பேசிக் கொண்டு சென்றன.
முதல் கழுதை;
சே என்ன ஜனங்க பா இந்த ஜனங்க?
2வது கழுதை;
ஏன் பா இப்டி சலிச்சிக்கிற? என்னாச்சி?
முதல் கழுதை;
இரண்டு நாளைக்கு முன்பாக என்னை சிலர் வந்து கூட்டிட்டு போயி, என் மேல வஸ்திரங்கள விரிச்சாங்க, நான் நடக்குற வழியில வஸ்திரங்களையும், மரக் கிளைகளையும் போட்டு என்னைப் பார்த்து வாழ்த்திப் பாடினாங்க, ஆனால் அதே தெரு வழியா நேற்று வரும் போது ஒரு பயளும் என்னைக் கண்டுக்கவே இல்ல பா. அதான் எனக்கு கஷ்டமா இருந்துச்சி.
2வது கழுதை;
உன்மேல யாரு பா ஏறியிருந்தாங்க? அத சொல்லு?
முதல் கழுதை;
யாரோ இயேசுவாம், அவர்தான் உக்காந்து இருந்தார்.
2வது கழுதை;
அட முட்டா கழுத, இந்த ஜனங்க எல்லாம் உனக்கு மரியாதையும், கனமும் குடுத்தாங்க னு நீ நெனச்சியா?
முதல் கழுதை;
அட ஆமாம் பா. வேற யாருக்கு கொடுத்தாங்க?
2வது கழுதை;
அட முட்டாளே, உனக்கு யாரும் மரியாதையும், கனமும் குடுக்கல டா. உன்மேல ஏறியிருந்தவர் ஆண்டவராகிய இயேசு. அதனால அவருக்குதான் மரியாதையும் கனமும் குடுத்தாங்க. அத புரிஞ்சிக்க.
முதல் கழுதை;
அட அப்டியா? நான்தான் அத்தனை மரியாதையையும், கனத்தையும் எனக்குதான் கொடுக்குறாங்க னு நெனச்சிப்ட்டேன் பா.
சனங்க சரியாதான் இருக்காங்க. நாமதான் தப்பா புரிஞ்சிக்கிறோம்.
2வது கழுதை;
உண்மைதான் டா. உன்மேல சவாரி வந்த இயேசுவுக்குதான் மரியாதையும், கனமுமே தவிர, உனக்கு கிடையாது. புரியுதா?
முதல் கழுதை;
அட புரிஞ்சிகிட்டேன் பா.
2வது கழுதை;
நீயாச்சும் புரிஞ்சிகிட்டியே. இப்டிதான் இந்த மனுஷ பயலுக, இயேசுவ சுமந்துட்டு போயி அநேகருக்கு அவரோட வார்த்தைகள சொல்றாங்க. அதனால ஜனங்க அவங்கள மதிப்புடன் நடத்துறாங்க.
ஆனால் அவங்க எல்லாரும் தனக்குதான் மரியாதையும் கனமும் னு நெனச்சி இயேசுவ விட்டுடுறாங்க.
முதல் கழுதை;
இத எப்பதான் இந்த மனுஷ பயலுக புரிஞ்சிக்க போறாங்களோ?
என் அன்பு தேவனுடைய பிள்ளைகளே! இந்த கதை சற்று விளையாட்டாக தோன்றினாலும், இன்றைக்கும் #நம்மில்பலர்_கிறிஸ்துவுக்கு_கொடுக்க_வேண்டிய_மகிமையை_
தங்களுக்கும்_தங்களது_பெயருக்குமே_கொடுத்துக்_கொண்டிருக்கிறார்கள்.
சொல்லப் போனால் நீயும் நானும் இயேசுவை சுமக்கிற கழுதைகள்தான். இயேசுவை சுமக்கும் வரைதான் உனக்கும் எனக்கும் மதிப்பு. அதை மறந்து போயி உனக்குதான் மதிப்பு னு நீ நெனச்சா, அது உன்னோட தவறுதான். புரிஞ்சுதா?
*தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்*
(மத்தேயு.23:12)
எனவே
*இனி நானல்ல, கிறிஸ்துவே* என்று தேவனை மகிமைப் படுத்துவோம்.
ஆமென்! அல்லேலூயா!
321 கற்பித்தல்
ஒரு ஊர்ல விஷ்வா-ன்னு ஒருத்தர் இருந்தார், அவர் தன் ஊரில் உள்ள பள்ளியில் பயின்று , மேற்படிப்புகளை முடித்து ஆசிரியர் வேலை வாங்கியதும் அவருடைய பழைய பள்ளி ஆசிரியரை காண செல்கிறார். அவர் அந்த பள்ளியை அடைந்ததும் அய்யா வணக்கம், என்னை தெரிகிறதா? நான் உங்ககிட்ட தான் படிச்சேன் அய்யா என சொல்கிறார்.
ஆசிரியர், ஞாபகம் இல்லையப்பா....! நீ எந்த வருடத்தில் படித்தாய்? எந்த வகுப்பு? என கேட்க.... விஷ்வா சொல்கிறார் நான் இந்த வருடத்தில் படித்தேன் அய்யான்னு சொல்லிட்டு, நீங்க தான் சார் எனக்கு குரு , நீங்க தான் எனக்கு வழிகாட்டி, நீங்கதான் என் முன்மாதிரின்னு அடிக்கிட்டே போனார் . உங்களை மாதிரியே நன்கு படித்து நல்ல ஆசிரியரா வரணும்ன்னு அயராது படித்து இப்போது ஆசிரியரும் ஆகிவிட்டேன் அய்யா-ன்னு சொன்னார் விஷ்வா.
ஆசிரியருக்கு மிக பெரிய சந்தோசம், நாம கிட்ட படிச்ச பையன் நம்மளை போலவே ஆசிரியரா வந்து நிக்கிறான்னு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.
எப்படிப்பா... எப்படி என்னை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு நீ ஆசிரியரானே... அப்படி என்ன விஷயம் என்கிட்டே பிடிச்சுது-ன்னு கேட்டார்.
விஷ்வா வகுப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினான்...
அய்யா...! உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல.... நான் உங்களுக்கு விரிவா சொல்லுறேன்யா....!
உங்க வகுப்புல தான் நான் படிச்சேன், நான் ஒரு ஏழை மாணவன், எந்த பொருளை பார்த்தாலும் எனக்கு ஆசை வரும், ஒருநாள் செந்தில் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை கட்டி இருந்தான், அதை பார்த்ததும் எப்படியாவது நான் அதை எடுத்துறணும்-ன்னு பேராசைப்பட்டேன், அந்த கடிகாரத்தை வாங்கும் அளவுக்கு என் குடும்பத்துல வசதி கிடையாது.
மதிய உணவு இடைவேளையில் செந்தில் கடிகாரத்தை கழட்டி வச்சுட்டு கை கழுவ போய்ட்டான், அந்த நேரம் பார்த்து நான் அதை எடுத்து என் கால் சட்டை பையில் போட்டுகிட்டேன்..... செந்தில் அழுதுகிட்டே உங்ககிட்ட புகார் சொன்னான்.....
நீங்க அதுக்கு எந்த கோபமும் படாமா... யாரையும் சந்தேக படாம.... எடுத்தவங்க கொடுத்துருன்னு சொன்னீங்க, ஆனா யாருமே கொண்டுவந்து வைக்கல......
கொஞ்ச நேரம் கழித்து நீங்க எல்லோரையும் வரிசையா நிற்க சொன்னீங்க... எல்லோரும் வரிசையில நின்னோம்.
எல்லாரோட கண்களையும் கட்டுனீங்க, அப்புறம் பொறுமையா ஒவ்வொருத்தருடைய கால் சட்டைப்பையிலும் கைய விட்டு பரிசோதனை பண்ணுனீங்க,. என்னோட சட்டைப்பையில் கடிகாரம் இருந்தது... எல்லோரும் அப்போது கண்ணை கட்டிதான் இருந்தாங்க, எந்த சத்தமும் இல்லாம செந்தில்-கிட்ட போயி அந்த கடிகாரத்தை கொடுத்துடீங்க...
எங்க இருந்து எடுத்தீங்கன்னு சொல்லல, எப்படி எடுத்தீங்கன்னு சொல்லல..... .
எங்கிட்டையும் எதுவும் கேட்கவும் இல்லை....., ஏன்டா இப்படி செய்தேன்னு என்னை எல்லோர் முன்னாடியும் அவமானமும் படுத்தவில்லை, எனக்கு திருட்டு பட்டமும் கட்டவில்லை....
என் மானத்தையும் காப்பாத்துனீங்க...! என்னோட சுய மரியாதையும் காப்பாத்துனீங்க...! அய்யா...!
அன்றைக்கு முடிவு பண்ணுனேன் அய்யா, கற்பித்தல் ஏவோல பெரிய விஷயம்ன்னு....!. அப்போது தான் முடிவு பண்ணுனேன் அய்யா, படிச்சா ஆசிரியரா தான் படிக்கனும்-ன்னு....! கற்பித்தலை தலையாய கடமைன்னு எடுத்துக்கனும்-ன்னு முடிவு பண்ணிட்டு உங்களை என் முன்மாதிரி எடுத்துக்கிட்டு படிச்சேன் அய்யா. உங்கலமாதிரி நல்ல ஆசிரியரா நான் வாழ்ந்து காண்பிக்கணுன்னு ஆசை அய்யா ன்னு சொன்ன விஷ்வா கண்களில் கண்ணீர் பெருகியது, செய்த தவறிலிருந்து பாடம் கற்பித்து கொண்ட ஆனந்தம் அதுதான்.
ஆசிரியருக்கு ரொம்ப சந்தோசம், அருமைடா.... அருமை ரொம்ப பெருமையை இருக்கு, நீ இன்னும் பெரிய ஆளா வருவேன்னு வாழ்த்துனாரு....
விஷ்வா ஆசிரியரிடம் கேட்டான், அய்யா இப்போதாவது சொல்லுங்க அய்யா, என்னோட முகம் உங்களுக்கு ஞாபகம் வருதான்னு..?
அப்பவும் அந்த ஆசிரியர் , இல்லையேப்பா எனக்கு ஞாபகம் வரல ன்னு - சொன்னார்
என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க...!? ஏவோல பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்துனீங்க, அப்படியும் என் முகம் மறந்து போனதா...?
இல்லப்பா எப்படி எனக்கு ஞாபகம் வரும்ன்னு நீ நினைக்கிறே....! அன்றைய தினம் உங்களையெல்லாம் பரிசோதனை செய்யும் போது நானும் என் கண்களை கட்டிக் கொண்டு அல்லவே பரிசோதனை செய்தேன்.....! அப்புறம் எப்படி உன் முகம் எனக்கு ஞாபகம் வரும்...? சொல்லு.....?
ஏவோலவு பெரிய விஷயம் அமைதியா முடிச்சிருக்கார் பாருங்க... அவரால் அவனுக்கு திருட்டு பட்டம் கட்டியிருக்க முடியும், தண்டித்திருக்க முடியும், ஆனா அவரு எதையுமே செய்யல....!
அந்த மாணவனையும் அடையாளம் கண்டிருக்க முடியும், அதையும் செய்யவில்லை.
ஏவலோ பொறுமையா இந்த விஷயத்தை கையாண்டுருக்கார் பாருங்களேன்...! எங்க அந்த மாணவனின் முகத்தை பார்த்துட்டா அந்த திருட்டு ஞாபகம் வந்துருமோன்னு, தன் கண்களையும் கட்டிக்கொண்டு கண்டு பிடித்தார் அல்லவா..... ஒரு விஷயத்தை அவர் நாசூக்கா சொல்லுறார்.... தண்டித்தலில் இல்ல, கற்பித்தலிலும், முன்மாதிரியாக இருப்பதிலும் தான் நல்ல நிகழ்வே நடக்கும்.
என்னா ஒரு அமைதியா அந்த மாணவனை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார் பார்த்தீர்களா..! இதே தான் நம்ம வாழ்க்கையிலும், ஒருத்தர தண்டித்தால் தான் திருந்துவாங்கன்னு நினைச்சா கண்டிப்பா மாறமாட்டாங்க, அதுக்கு பதிலா நாம முன்மாதிரியா இருந்தா.....!? நம்மல சுத்தி இருக்ககிறவங்களும் நல்லவர்களாக மாறுவார்கள்....!
வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இல்லை. கற்பித்தல், கற்பிப்பது என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விசயம். ஓர் ஆசிரியர் இதயபூர்மாகப் படிப்பித்தால்தான் அது மாணவர்களைச் சென்றடையும். உள்ளத்துடன் படிப்பித்தால்தான் மாணவர் களால் உள்வாங்க முடியும். ஆகவே கண்டித்துக் கற்பிக்கச் செய்வதெல்லாம் உரிய பலனைத் தராது என்ற உன்னத கருத்தினையும் முன்வைக்கிறார் இங்கே.
உண்மையிலேயே கற்பித்தல் என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் ஈடேற்றிவிட முடியாதுதான். மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வீட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பண்பு உள்ளவர்களாகத் திகழ்வதெல்லாம் ஆசிரியர்கள் கைகளில்தானே உள்ளது? அதை தான் அமைதியாக முடித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.
தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார் என்பதனை மனதில் கொள்வோம்.
எதிர்காலத்தின் தூண்களாகத் திகழும் மாணவர்களுக்குச் சீரிய சிந்தனையை விதைத்து, ஊக்க உரமிட்டு வளர்க்க இந்த ஆசிரியர்களே காரணம்.
முடிந்தவரை ஊருக்கு செல்லும் போதெல்லாம் உங்கள் ஆசிரியரை சந்தியுங்கள்....
முன்மாதிரியாய் நாமும் வாழ்ந்துதான் பார்ப்போமே கற்பித்தலில் களங்கமற்று கற்றுக்கொள்வோம்.
என் அன்பு வாசகர்களே,
கற்பித்தல் ஒரு கலை அதை சிறந்த முறையில் செய்தால் அநேக நற்குணசாலிகளை உருவாக்க முடியும் என்பதே இக்கதையின் கருத்து.
ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும், சபை ஊழியர்களும் சிறந்த கலைஞர்கள் தான். ஒருவருக்கு அறிவுரை வழங்குவது மிக எளிது அதை அறிவுரை வழங்கியவர்கள் கடைபிடிப்பார்களா என்றால் அது கேள்விக்குறியே. மேலும் அவர்களிடமிருந்து வரும் பதில் நான் அதை கடைபிடிக்கவில்லை அதனால் தான் எனக்கு இத்தனை துன்பம் என்று கூறுவர். ஒருமுறை அனுப்பப்பட்டு விட்டோம் மறுபடியும் அந்த தவறை செய்ய கூடாது என்று நினைப்பதில்லை அந்த தவறை திரும்பத்திரும்ப செய்துவிட்டு மற்றவர்களுக்கு அதீத அறிவுரைகளை வழங்குவார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நம்முடைய வாக்கு அல்ல நம்முடைய நன்நடத்தையே மற்றவர்களை மாற்றும் வல்லமை கொண்டது.
இன்றைய கதையிலும் அந்த ஆசிரியரின் வார்த்தை அல்ல அவரின் நன்நடத்தையே அவரை ஒரு சிறந்த உதாரணமாக எடுக்க வழிவகுத்தது. அதன்மூலம் இந்த மாணவன் மட்டுமல்ல அநேக நல்லவர்களும் இந்த உலகத்தில் தோன்றுவர். நாமும் அவ்வண்ணமே நற்கிரியைகளை செய்யத்தான் சிருஷ்டிக்க பட்டிருக்கிறோம் என வேதம் இவ்வாறு கூறுகிறது
10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10
நம்மை நற்கிரியைகள் செய்ய தேவன் ஏற்கனவே நம்மை தகுதிபடுத்தி ஆயத்தப்படுத்தியிருக்கிறார். எனவே நாம் தேவனுக்குள் நற்கிரியைகளை ஆயத்தப்படுவோம் அநேக நல்லவர்களை உருவாக்குவோம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
322 வீணாய்ப்போன இருபது ஆண்டுகள்..
அமெரிக்காவில் ஒரு கைப்பிரதி ஊழியர் உள்நாட்டு ஆறுகளில் ஓடும் சிறிய கப்பலில் கைப்பிரதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். உயர்தர ஆடைகள் அணிந்த ஒரு செல்வந்தன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஊழியர் அந்த செல்வந்தருக்கும் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார். கோபமடைந்த செல்வந்தர் ஊழியரைப் பார்த்து, “நானும் கிறிஸ்தவன் தான். இதை ஏன் கொடுத்துக் கொண்டிருகின்றீர். இதினால் எவ்வித பயனும் இல்லை” என்றார். அதற்கு ஊழியர், “நீங்கள் ஒரு போதும் அப்படி சொல்லாதீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாவ வாழ்வில் மூழ்கிக் கிடந்த நான், நியூயார்க் பட்டணத்தின் வீதி ஒன்றில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அந்த தெருவில் இருக்கின்ற ஆலயத்திற்கு முன்பாக வந்த போது, ஒரு வாலிபன் அந்த ஆலய வாசற்ப்படியில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து, நடந்து கொண்டிருக்கும் ஆராதனையில் பங்குபெறும்படி ஒவ்வொருவரையும் வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான்.
அவ்வாலிபன் பேசிய அன்பாலும் பரிவாலும் ஈர்க்கப்பட்ட நானும் அவனிடம் கைப்பிரதியை வாங்கிக்கொண்டு ஆலயத்திற்குள் சென்றேன். அங்கே போதகர் யாவரும் இரட்சிக்கப்ட வேண்டியதின் அவசியத்தைம், இயேசு தன்னிடம் வருவோரை ஒருநாளும் புறம்பே தள்ளுவதில்லை என்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நான் பாவி என்ற உணர்வு எனக்குள் அதிகமாக ஏற்படவே அந்த ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டேன். ஆயினும் நான் பாவி என்ற உணர்வு என்னை அதிகம் வாட்டியது. அப்பொழுது அந்த வாலிபன் கொடுத்த கைப்பிரதியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (I யோவான் 1:9), “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12.) என்ற அந்த கைப்பிரதியிலிருந்த வசனங்கள் என் உள்ளதை வெகுவாய் அசைத்தன. உடனே நான் எனது பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவால் கிடைக்கப்பெறும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டேன். நான் பெற்ற இந்த இரட்ச்சிபின் அனுபவத்தை மற்றவரும் பெற்றனுபவிக்க கடந்த இருபது ஆண்டுகளாக இந்த கைப்பிரதி ஊழியத்தை செய்து வருகின்றேன் என்று ஊழியர் அந்த செல்வந்தரிடம் கூறினார்.
அதைக்கேட்ட அந்த செல்வந்தர் கண்களில் கண்ணீர் ததும்ப, “கடந்த இருபது ஆண்டுகளுக்குமுன், உனக்கு கைப்பிரதியை கொடுத்த அந்த வாலிபன் நான்தான். இவ்விதமாய் கைப்பிரதிகளைக் கொடுத்து பெரிய மாற்றத்தை காணாததினால் அந்த ஊழியத்தை கைவிட்டு இருபது ஆண்டுகள் வீணாய்க் கழித்துவிட்டேன். ஆனால் உன்னைப்போல எத்தனை பேர்கள் அந்த கைப்பிரதியினால் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உன்னைப் பார்த்து நான் அறிந்து கொண்டேன் நான் நியூயார்க் பட்டணம் சென்றபிறகு மீண்டும் இந்த கைப்பிரதி ஊழியத்தை தொடர்வேன்” என்றார். நாம் விதைகளை விதைக்கும் பொழுது எந்த விதை விளையும், எது விளையாது என்று நமக்கு தெரியாது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே அதை விளையச்செய்வார். நீங்கள் கைப்பிரதி கொடுத்து ஊழியம் செய்ய முன்வருவீர்களா?
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள். எபேசியர் 5 :16
புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள். கொலோசெயர் 4 :5
No comments:
Post a Comment