Sunday, 19 June 2016

சங்கீதம் 71 :13-18

உன் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், உனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள். நீயோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் கர்தரைத் துதி. உன் வாய் நாள்தோறும் அவரது நீதியையும் அவரது இரட்சிப்பையும் சொல்லட்டும்; அவைகளின் தொகையை நீ் அறியாய். கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நட, அவருடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டு. தேவன், உன் சிறுவயதுமுதல் உனக்குப் போதித்துவந்தார், இதுவரைக்கும் அவருடைய அதிசயங்களை அறிவித்துவந்தாய். இப்பொழுதும் தேவன், இந்தச் சந்ததிக்கு அவரது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் அவரது பராக்கிரமத்தையும் நீ அறிவிக்குமளவும், முதிர்வயதும், நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் உன்னைக் கைவிடமாட்டார். சங்கீதம் 71 :13-18

No comments:

Post a Comment