Sunday, 26 June 2016

பெண் பிள்ளைகளுக்காக

நாடுமுழுவதும் சில சமுதாயங்களில் உள்ள பாரம்பரிய முறைமைகள் பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்துள்ளது. இப்படிபட்ட சமுதாய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட, கல்வியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சாத்தானின் தந்திரமான திட்டங்கள், பெண்ணினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாதாளத்திலிருந்து பொல்லாத ஆவிகள் எழும்பி, இவர்களுக்கு விரோதமாகக் கிரியை செய்யும்படி ஏவப்படுகிறது. இக்கிரியைகள் அனைத்தும் இயேசு கறிஸ்துவின் இரத்தத்தாலும், அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலும் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் எழுப்புதலில் பெண்களுக்கு சிறப்பான இடத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறபடியினால், பெண் பிள்ளைகளைக் கொண்டு தேசத்திலே கர்த்தர் பலத்த கரியங்களை நடப்பித்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment