Sunday, 12 June 2016

சங்கீதம் 69 :16-20

கர்த்தர் உன் விண்ணப்பத்தைக் கேட்டருளுவார், அவருடைய தயை நலமாயிருக்கிறது, அவரது உருக்கமான இரக்கங்களின்படி உன்னைக் கடாட்சித்தருளுவார். அவரது முகத்தை அவரது அடியானுக்கு மறைக்க மாட்டார், நீ வியாகுலப்படாதே, உனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளுவார். அவர் உன் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணுவார், உன் சத்துருக்களினிமித்தம் உன்னை மீட்டுவிடுவார். தேவன் உன் நிந்தையையும் உன் வெட்கத்தையும் உன் அவமானத்தையும் அறிந்திருக்கிறார், உன் சத்துருக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை உன் இருதயத்தைப் பிளந்தது, நீ மிகவும் வேதனைப்படுகிறாய், உனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தாய், ஒருவனும் இல்லை, தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தாய், ஒருவனையும் காணாய், சங்கீதம் 69 :16-20

No comments:

Post a Comment