Thursday, 2 June 2016

சங்கீதம் 68 :1-5

தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள். புகை பறக்கடிக்கப்படுவது போல அவர்களைப் பறக்கடிப்பார், மெழுகு அக்கினிக்கு முன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள். நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள். தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணு், வானாந்தரங்களில் ஏறி வருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்து, அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூரு. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்கீதம் 68 :1-5

No comments:

Post a Comment