Sunday, 26 June 2016

சங்கீதம் 74 :15 -23

தேவன் ஊற்றையும் ஆற்றையும் பிளந்து விட்டவர், மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினவர். பகலும் அவருடையது, இரவும் அவருடையது, தேவன் ஒளியையும் சூரியனையும் படைத்தவர். அவர் பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினார், கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினார். சத்துரு அவரை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் அவரது நாமத்தைத் தூஷித்ததையும் அவர் நினைத்துக்கொள்ளுவார். அவரது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடார், அவரது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவார். அவருடைய உடன்படிக்கையை நினைத்தருளுவார், பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது. துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடார், சிறுமையும் எளிமையுமானவன் அவரது நாமத்தைத் துதிக்கும்படி செய்வார். தேவன், எழுந்தருளுவார், அவருக்காக அவரே வழக்காடுவா், மதியீனனாலே நாடோறும் அவருக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளுவார். அவருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. அவருடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவார். சங்கீதம் 74:15-23

No comments:

Post a Comment