Wednesday, 29 June 2016

மலட்டுத்தன்மை போ‌க்கு‌ம் ஆவாரை‌!

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது.   அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம்.   க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.  மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும். ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

சங்கீதம் 77:1-10

நீ உன் தேவனை நோக்கி உன் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சு, உன் சத்தத்தைத் தேவனிடத்தில் உயர்த்தினாய், அவர் உனக்குச் செவிகொடுப்பார். உன் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினாய், இரவிலும் உன் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது, உன் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. நீ உன் தேவனை நோக்கி அலறினாய், நீ தியானிக்கும்போது உன் ஆவி தொய்ந்துபோயிற்று. நீ தூங்காதபடி உன் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறார், நீ பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறாய். பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்தி. இராக்காலத்தில் உன் சங்கீதத்தை நீ நினைத்து, உன் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறாய், உன் ஆவி ஆராய்ச்சிசெய்தது. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே அவரது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்கிறாய். அப்பொழுது நீ் இது என் பலவீனம் என சொல், ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூரு. சங்கீதம் 77:1-10

Tuesday, 28 June 2016

தூத்துக்குடி மாவட்டத்திற்காக ஜெபிப்போம்

தூத்துக்குடி மாவட்டம், தமிழகத்திலுள்ள மிகமுக்கியமான ஒரு இடம், பெரிய துரைமுகமும் பல்வேறு பெரிய, சிறிய தெழிற்சாலைகள் இங்கு உள்ளன. லட்சகணக்கான தொழிலாளர்கள் உள்ளனர், சரக்கு வாகன போாக்குவரத்து மிகுந்த இடம் இந்த மாவட்டத்தின் பாதுகாப்பிற்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும் 1, முக்கியமாக தொழிற்சாலைகளுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளை அமைக்க முயற்சி செய்யப் பட்டபோது சிலகாரணங்களை முன்னிட்டு அநேக எதிர்ப்புகள் வந்த சூழ்நிலையில் இங்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இதின் நிமித்தமாக, அநேக பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது ஆகவே இது போன்ற தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த மாவட்டத்திளுள்ள சில கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகள் மூலமாக வெளியேருகிற வாயூக்கள் மிகவும் அபாயகரமானவை இந்தவாயூக்கள் வெளியேற்றப்பட வேண்டிய அளவைவிட பல சமயங்களில் அதிகமாக வெளியேற்றபடுகிறது இது அதிகாரிகளால் சரியாக கண்காணிக்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இது போன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளிவருகின்ற விஷவாயுக்கள் காற்றில் பரவுவதால் ஏற்படும் "காற்று மாசு" "சுற்று சூழல் மாசு" போன்றவைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த காற்றை சுவாசிக்கும் பொது மக்கள் சுவாச பிரசனைகளினால் பாதிக்கப்படுகின்றார்கள் இப்படியாகப் பாதிக்கப்படும் மக்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் காற்றில் பரவும் இப்படிப்பட்ட விஷவாயுக்களால் உயிரிழப்புகள், தொடர் வியாதிகள் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு போன்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது இதற்காக விசேஷமாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 76 :1-12

யூதாவின் தேவனுடைய நாமம் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறிக்கிறார் கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் கர்த்தர் பிரகாசமுள்ளவர். தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள், வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. யாக்கோபின் தேவனு டைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. தேவனே பயங்கரமானவர், அவரது கோபம் மூளும்போது அவருக்கு முன்பாக நிற்பவன் யார்? நியாயம் விசாரிக்கவும், பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவன் எழுந்தருளினபோது, வானத்திலிருந்து, நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணூகிறார் பூமி பயந்து அமர்ந்தது. மனுஷனுடைய கோபம் தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும், மிஞ்சுங்கோபத்தை அவர் அடக்குவார் பொருத்தனைபண்ணி அதை உன் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்று, பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவா, அவர் பிரபுக்களின் ஆவியை அடக்குவார், பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவா் சங்கீதம் 76 :1-12

Monday, 27 June 2016

சங்கீதம் 75 :1-10

நீ தேவனை துதி, அவரது நாமம் சமீபமாயிருக்கிறதென்று அவரது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. நீ வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும், துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொல். இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி, ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார், பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். நீயோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணு. துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடு, நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். சங்கீதம் 75 :1-10

வாய்ப்புண் உடம்பு வலி

கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

Sunday, 26 June 2016

பெண் பிள்ளைகளுக்காக

நாடுமுழுவதும் சில சமுதாயங்களில் உள்ள பாரம்பரிய முறைமைகள் பெண்கள் கல்வி கற்பதைத் தடை செய்துள்ளது. இப்படிபட்ட சமுதாய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட, கல்வியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சாத்தானின் தந்திரமான திட்டங்கள், பெண்ணினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாதாளத்திலிருந்து பொல்லாத ஆவிகள் எழும்பி, இவர்களுக்கு விரோதமாகக் கிரியை செய்யும்படி ஏவப்படுகிறது. இக்கிரியைகள் அனைத்தும் இயேசு கறிஸ்துவின் இரத்தத்தாலும், அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலும் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் எழுப்புதலில் பெண்களுக்கு சிறப்பான இடத்தைக் கர்த்தர் வைத்திருக்கிறபடியினால், பெண் பிள்ளைகளைக் கொண்டு தேசத்திலே கர்த்தர் பலத்த கரியங்களை நடப்பித்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

நாள்பட்ட ரணங்கள்

பெரிய வெங்காயத்தை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும், நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்துவிடும். பழுத்து வீங்கி, உடையாமல் குடைச்சலும், குத்தலுமாகத் தொந்தரவு செய்யும் கட்டியின் மீது புகையிலையை நன்கு விரித்துப் போட்டு அதில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கட்டி உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறி குணமாகும். எருக்கன் இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக செய்து விளக்கெண்ணெயில் குழைத்துப் போட்டால் நாள்பட்ட ரணங்கள் ஆறிச் சுகமாகும். பழுத்த அத்தி இலை, ஆல், புங்கன் ஆகிய மரங்களின் பட்டையை நன்கு நசுக்கி, புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்டபுண் மீது தடவினால் விரைவில் குணம் தெரியும். வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தடவி, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் சுட்ட அரப்பு தேய்த்து குளித்து விட்டால் உடலில் தோன்றும் நமைச்சல் அகலும், சொறி சிரங்கிற்கும் இது நல்ல மருந்து.

சங்கீதம் 74 :15 -23

தேவன் ஊற்றையும் ஆற்றையும் பிளந்து விட்டவர், மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினவர். பகலும் அவருடையது, இரவும் அவருடையது, தேவன் ஒளியையும் சூரியனையும் படைத்தவர். அவர் பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினார், கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினார். சத்துரு அவரை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் அவரது நாமத்தைத் தூஷித்ததையும் அவர் நினைத்துக்கொள்ளுவார். அவரது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடார், அவரது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவார். அவருடைய உடன்படிக்கையை நினைத்தருளுவார், பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது. துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடார், சிறுமையும் எளிமையுமானவன் அவரது நாமத்தைத் துதிக்கும்படி செய்வார். தேவன், எழுந்தருளுவார், அவருக்காக அவரே வழக்காடுவா், மதியீனனாலே நாடோறும் அவருக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளுவார். அவருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. அவருடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவார். சங்கீதம் 74:15-23

Saturday, 25 June 2016

சிறு பிள்ளைகளுக்காக

நமது நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறு பிள்ளைகளுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும் தேவ சமுகத்தில் கண்ணீரோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் குழந்தை பருவத்திலிருந்தே சிறு பிள்ளைகளுக்கு பேராபத்து காத்திருக்கிறது குறிப்பாக, கருவில் உள்ள சிசு, 'பெண் குழந்தை' என்று தெரிந்தால், கருக் கலைப்புச் செய்யும் புதிய கலாச்சாரமும் பெருவாரியான மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த தீமை தேசத்திலிருந்து முற்றிலுமாக விலகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறுமிகள் மீது வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்களால் உண்டாகும் பாலியல் வன்கொடுமைகள் முறியடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறு பிள்ளைகள், பெண் பிள்ளைகள் கடத்தப்படுதல் மற்றும் அவர்கள் பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்துவது போன்ற காரியங்கள் மாறிப்போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சிறுபிள்ளைகளை, ''தெய்வம்" என்று நம்பப் படுபவைகளுக்கு நேர்ந்து விடும் பழக்கம் இன்னும் சிலபகுதிகளில் காணப்படுகிறது. இந்நிலை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 74 :8-14

தேவனுடைய ஜனங்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று சத்துரு தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். தேவனுடைய ஜனங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம், தீர்க்கதரிசியும் இல்லை, இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் அவர்களிடத்தில் இல்லை. எதுவரைக்கும் சத்துரு தேவனை நிந்திப்பான்? பகைவன் அவரது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? தேவன் அவரது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறார்? தேவன் அதை அவரது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்குவார். பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் உன்னுடைய ராஜா. தேவன் அவரது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தார். அவர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தார். சங்கீதம் 74 :8-14

மலச்சிக்கலுக்கு

இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

சங்கீதம் 74 :8-14

தேவனுடைய ஜனங்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று சத்துரு தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். தேவனுடைய ஜனங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம், தீர்க்கதரிசியும் இல்லை, இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் அவர்களிடத்தில் இல்லை. எதுவரைக்கும் சத்துரு தேவனை நிந்திப்பான்? பகைவன் அவரது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? தேவன் அவரது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறார்? தேவன் அதை அவரது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்குவார். பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் உன்னுடைய ராஜா. தேவன் அவரது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தார். அவர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தார். சங்கீதம் 74 :8-14

Friday, 24 June 2016

நீதி துறைக்காக ஜெபிப்போம்

நீதித்துறை மீதான நம்பகத் தன்மை சமீபகாலமாக குறைந்து வருவதாக, மக்கள் எண்ணுகிறார்கள் "அநியாயங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. நீதியை அர்த்தம் உள்ளதாகவும், செலவில்லாததாகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு நீதிபதிக்கும், வக்கீலுக்கும் உண்டு" எனறு உச்ச நீதிமன்ற நீதிபதி, திரு தத்து அவர்கள் பேசியுள்ளார் இந்தியாவலுள்ள ஒவ்வொரு நீதிபதிகளுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியவிலுள்ள லட்சக்கணக்கான வழக்குறைஞர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நீதி நிலை நாட்டப்பட, ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தேங்கிக் கிடக்கிற சுமார் 3கோடிக்கும் மேற்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம்74;2-7

கர்த்தர் நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் அவருடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணுவார், பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். அவருடைய சத்துருக்கள் அவருடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான். இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள். அவரது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, அவரது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். கர்த்தர், பூர்வகாலத்தில் சம்பாதித்த அவரது சபையையும், அவர் மீட்டுக்கொண்ட அவரது சுதந்தரமான கோத்திரத்தையும், அவரது வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளுவார். சங்கீதம்74;2-7

Thursday, 23 June 2016

கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

யோகாவும் கிறிஸ்தவமும்.

யோகாவும் கிறிஸ்தவமும். ஆதி மனிதர்களை பிசாசானவன் ஏமாற்ற முதலாவது அவன் பயன்படுத்திய மிருகமாக “சர்ப்பமும்”, இரண்டாவது அவன் பயன்படுத்திய மரத்தின் கனியாக, “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியும்”, மூன்றாவது ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து அவர்களை ஏமாற்றுவதற்காக “நீங்கள் சாவதே சாவதில்லை” என்ற வார்த்தையையும், நான்காவது நயவஞ்சகமாக அவர்களை ஏமாற்றுவதற்காக “தேவர்களைப் போல் இருப்பீர்கள்” என்ற வார்த்தையையும் பயன்படுத்தினான். இந்த நான்கு காரியங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது தான் யோகா. இதை வரைமுறைபடுத்தியவர் பதஞ்சலி முனிவர். இவர் கி.மு. நாலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகின்றது. ஆயிரம் தலைகள் அல்லது ஏழு தலைகள் கொண்ட பாம்பின் படுக்கையிலிருக்கும் சில விக்கிரகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பாம்பிற்கு ஆதிசேஷன் (சேஷன்=பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் – வெளி 20:2) என்று பெயர். பதஞ்சலி தம்மை ஆதிசேஷனின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டவர். பிசாசானவன் ஆதி மனிதர்களை ஏமாற்ற முதலாவது சர்ப்பத்தைப் பயன்படுத்தியதைப் போலவே, பதஞ்சலி முனிவரையும் பயன்படுத்தியுள்ளான். பதஞ்சலி முனிவரது சிலையானது இடுப்புக்கு மேல் மனித உருவமும், இடுப்புக்கு கீழே பாம்பின் உருவமும் கொண்டது. ஆகவே தான் யோகா கற்றுக்கொடுக்கும் இடங்களில் பாம்பின் படங்கள் வைத்திருப்பார்கள். இவர் யோகாவை எட்டு அங்கங்களாக வகைப்படுத்தினார். அதில் முதல் இரண்டு, “நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, அடுத்த இரண்டு, “ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, மீதமுள்ள நான்கு, “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்ற நயவஞ்சக வார்த்தையின் மூலாமாக மனிதர்களை ஏமாற்றவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை. 2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல். ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 3. ஆசனா – யோகாசனங்கள் 4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு. “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று நயவஞ்சகமாக மனிதர்களை ஏமாற்றுவதற்காக: 5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வெளியே போகாமல் கட்டுப்படுத்துதல் 6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல் 7. தியானா- தியானம் 8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல் ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பங்குபெற்ற இந்திய பிரதமர் யோகா நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் விளைவாக உலகெங்கும் யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது. இதற்கு கிறிஸ்துவ நாடுகள் உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்திருக்கின்றது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகெங்கும் கொண்டாட போகின்றார்கள். “யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல” என்று வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடுகின்றனர். யோகா தின அறிவிப்புக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகா வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், யோகா வல்லுனர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. விரைவில் பள்ளி புத்தகத்திலும் யோகாவைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றைக்கு பிசாசானவன் யோகாவின் மூலமாக மக்களை வஞ்சிக்க துடிகின்றான். “உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்” (உபாகமம் 11:16). யோகா என்பது உடற்பயிற்சி முறையோ, தியானமோ, ஆசனமோ கிடையாது. இது அந்நிய தெய்வத்தின் வழிபாடு. உங்கள் அலுவலகத்திலோ கல்வி நிறுவனத்திலோ யோகோ வகுப்புகள் இருந்தால் நீங்கள் தைரியமாக புறக்கணிக்க வேண்டும். ஆலய வளாகத்தினுள்ளோ, ஆலய ஆடிட்டோரியத்தினுள்ளோ யோகா பயிற்ச்சிக்கு அனுமதி கொடுக்க கூடாது. பல போதகர்களும் சாத்தானின் வலையில் வீழ்ந்து கிடப்பது வேதனையே! “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத்தேயு 24:4) என்று இயேசு நமக்கு அறிவுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் சர்ப்பத்தின் வழிபாடாகிய யோகாவிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். சர்ப்பங்களை மிதிக்க அதிகாரம் தந்த இயேசுவின் நாமத்தினால் யோகா சர்ப்பத்தை மிதித்து போடுவோமாக. ஆமேன். அல்லேலுயா.

விவசாய நிலங்களுக்காக!

நிலம் எடுப்பு மசோதாவினால் தேசம் முழுவதும் உள்ள விவசாயிகளினால் போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு! இதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்காமல் செயல் பட்டுவருகிறது. விவசாயிகளின் நலனை அரசு முக்கிய படுத்த ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் விளை நிலங்கள் கையகப்படுத்தும்போது விவசாயிகள் ஏமாற்றப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பயனற்ற, தரிசு நிலங்கள் மாத்திரம் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்பட, தற்போது விவசாயம் நடைபெரும் நிலங்கள் அரசாங்கம் மற்றும் தனியாரால் பிடுங்கப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 73 :14-24

" நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். " என்று நீ சொன்னாயானால், இதோ, கர்த்தருடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவாய். இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தாய், நீ தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, துன்மார்க்கர் முடிவைக் கவனித்து உணருமளவும், அது உன் பார்வைக்கு விசனமாயிருந்தது. கர்த்தர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணினார். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவர், விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவார். இப்படியாக உன் மனம் கசந்தது, உன் உள்ளந்திரியங்களிலே குத்துண்டாய். நீ காரியம் அறியாத மூடனானாய், ஆண்டவருக்கு முன்பாக மிருகம் போலிருந்தாய். ஆனாலும் நீ் எப்பொழுதும் கர்த்தரோடிருக்கிறாய், அவர் உன் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறார். அவருடைய ஆலோசனையின்படி உன்னை நடத்தி, முடிவிலே உன்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவார். சங்கீதம் 73 :15-24

நீர்ச்சுருக்கு

வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்

Wednesday, 22 June 2016

காவல் துறைக்காக! ஜெபிப்போம்

காவல் துறைக்காக! ஜெபிப்போம் தமிழகக் காவல் துறைரையிலுள்ள முக்கியமான உயர் அதிகாரிகள் மற்றும் அதில் பணிபுரியும் அலுவல ர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு போலிசார் மீதும் தேவ ஆளுகை இறங்கிவர, சட்டத்திற்கு மீறி அவர்கள் எதுவும் செய்யாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பணம், மது, மாது, போன்றவைகளுக்கு அவர்கள் அடிமையாகாதிருக்க, 'போதும்' என்கிற மனதோடுகூட வாழ ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அப்பாவிகள், நிரபராதிகள் மிது பொய் வழக்கு போடுகிற காரியங்கள் தேசத்தில் இல்லாமல் போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள பெண் போலிசாருக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். காவல்துறையினரின் குடும்பங்களுக்காகவும், அரசியல் ரீதியான எந்தத்தொந்தரவும் காவல் துரையினருக்கு ஏற்படாதிருக்கவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

வேனல் கட்டியா

வேனல் கட்டியா வேனல் கட்டியாக இருந்தால் வலி .அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். -

சங்கீதம் 73 :8-14,25,26

துன்மார்க்கர் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள், இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள், அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் தேவனுடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள், தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவருகிறது, தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர், இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நீ விருதாவாகவே உன் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே உன் கைகளைக் கழுவினாய். நாள்தோறும் நீ வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறாய் உன் மாம்சமும் உன் இருதயமும் மாண்டுபோகிறது, தேவன் என்றென்றைக்கும் உன் இருதயத்தின் கன்மலையும் உன் பங்குமாயிருக்கிறார். பரலோகத்தில் தேவனையல்லாமல் உனக்கு யார் உண்டு? பூலோகத்தில் தேவனைத் தவிர உனக்கு வேறே விருப்பமில்லை. தேவன் என்றென்றைக்கும் உன் இருதயத்தின் கன்மலையும் உன் பங்குமாயிருக்கிறார். சங்கீதம் 73 :26

Tuesday, 21 June 2016

தமிழக அரசுக்காக

தமிழகத்தின் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்காக பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் அவர்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் பல நலத்திட்டங்களை நிறைவேற்றிட ஊழலற்ற, லஞ்சமில்லாத தமிழ்நாடு உருவாகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் நமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமல் படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நலதிட்டங்கள் விரைந்து முடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு சீக்கிரத்தில் திர்வு கிடைக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

ஜலதோஷம்

இலவங்கப் பூ சூரணத்தை தாய்ப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

சங்கீதம் 73 :1-7,27,28

சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். துன்மார்க்கரின் வாழ்வை நீ காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டாய் மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை, அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும் கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. இதோ, கர்த்தரை விட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள், அவரைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பார். நீயோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நீ அவரது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் உன் நம்பிக்கையை வைத்திரு. சங்கீதம் 73 :1-7,27,28

Sunday, 19 June 2016

தமிழக அரசுக்காக

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர், மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஒவ்வொரு அரசுத் துனறகளின் அமைச்சர்களுக்காக, அதிகாரிகளுக்காக, ஓவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்காக அரசு அலுவலர்சளுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தமிழகத்திலுள்ள மக்கள் பிரதிநிநிகள், ஊராட்சி, பேருராட்சி,நகராட்சி, மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

பல் கூச்சம்

பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்

சங்கீதம் 71 :19 -24

தேவனுடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை செய்தார், தேவனுக்கு நிகரானவர் யார்? அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த உன்னை அவர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் உன்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவார் உன் மேன்மையைப் பெருகப்பண்ணி, உன்னை மறுபடியும் தேற்றுவார். உன் தேவனை, நீ வீணையைக் கொண்டு அவரையும் அவருடைய சத்தியத்தையும் துதி், இஸ்ரவேலின் பரிசுத்தரை, சுரமண்டலத்தைக் கொண்டு் பாடு். நீ பாடும்போது உன் உதடுகளும், அவர் மீட்டுக்கொண்ட உன் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். உனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் உன் நாவு அவரது நீதியைக் கொண்டாடும். சங்கீதம் 71 :19--24

இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்காக ஜெபிப்போம்

தேசத்திலுள்ள மிக முக்கியமான அரசியல் தலைவர்கள்மீது தேவபாதுகாப்பு இருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் குறிப்பாக, ஆளும்கட்சி தலைவர்கள்,எதிர்கட்சி தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அவர்களுடைய பிரயாணங்களில் தேவகரம் கூட இருக்கவும், எல்லா விதமான அசம்பாவிதங்களுக்கும் அவர்கள் அனைவரும் விலக்கிக் காக்கப்படவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேவனுடைய ஞானத்தால் அவர்கள் நிரப்பப்பட்டு, ஜனங்களுக்கு நல்ல திட்டங்களை அவர்கள் செயல் படுத்திட ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம். அவர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் தீட்டும் சதித்திட்டங்கள் அனைத்தும் வாய்க்காமல் போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

இருமல் கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

சங்கீதம் 71 :13-18

உன் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், உனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள். நீயோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் கர்தரைத் துதி. உன் வாய் நாள்தோறும் அவரது நீதியையும் அவரது இரட்சிப்பையும் சொல்லட்டும்; அவைகளின் தொகையை நீ் அறியாய். கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நட, அவருடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டு. தேவன், உன் சிறுவயதுமுதல் உனக்குப் போதித்துவந்தார், இதுவரைக்கும் அவருடைய அதிசயங்களை அறிவித்துவந்தாய். இப்பொழுதும் தேவன், இந்தச் சந்ததிக்கு அவரது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் அவரது பராக்கிரமத்தையும் நீ அறிவிக்குமளவும், முதிர்வயதும், நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் உன்னைக் கைவிடமாட்டார். சங்கீதம் 71 :13-18

Saturday, 18 June 2016

தற்கொலை

சேலம் மாவட்டத்தில், ஒரு தாய் வறுமையின் கொடுமையால் தன்னுடைய 3குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு. தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். இப்படியாக ஏதோ ஒரு காரணத்தை பயன் படுத்தி, ஏழை ஏளிய ஜனங்களை தர்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிற தற்கொலையின் ஆவிகள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் குடும்பங்களை அழிக்கத் துடிக்கும் தற்கொலை ஆவியினால் பாதிக்கப்பட்டிருக்கிற ஜனங்களை விடுதலைக்காக, பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Friday, 17 June 2016

சங்கீதம் 71 :6-12

நீ கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் கர்த்தரால் ஆதரிக்கப்பட்டாய், உன் தாயின் வயிற்றிலிருந்து உன்னை எடுத்தவர் அவரே, அவரையே நீ எப்பொழுதும் துதி. அநேகருக்கு நீ ஒரு புதுமைபோலானாய், கர்த்தரோ உனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறாீர். உன் வாய் அவரது துதியினாலும், நாள்தோறும் அவரது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. முதிர்ந்தவயதில் உன்னைத் தள்ளிவிடாமலும், உன் பெலன் ஒடுங்கும்போது உன்னைக் கைவிடாமலும் இருப்பார். உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்ப் பேசி, உன் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: தேவன் அவனைக் கைவிட்டார் அவனைத் தொடர்ந்துபிடியுங்கள், அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள். தேவன், உனக்குத் தூரமாயிராா், உன் தேவன், உனக்குச் சகாயம்பண்ணத் தீவிரிப்பார் சங்கீதம் 71 :6-12

வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்

முதியோர்களுக்காக ஜெபிப்போம்

தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும், கவனிப்பாரற்று, அனாதை இல்லங்களிளும், முதியோர் காப்பகங்களிிலும் தஞ்சம் புகுகிற முதியோர்கள், இக்காலகட்டத்தில் பெருகி வருகிரார்கள் இந்நிலைமை மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சில பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளின் வீடுகளுக்குள்ளேயே அனாதைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் மனசாட்சி இல்லாத இந்த காரியங்கள் சமுதாயத்தை விட்டு ஒழிய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வயதான பெற்றோர்களுக்கு, போதுமான அன்பும் ஆதரவும், அரவணைப்பும் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பெலவீன பட்டுள்ள, வியாதிபடுக்கையுள்ள, நடமாட முடியாமல் தள்ளாடும் நிலையிலுள்ள முதியவர்களுக்கு கர்த்தரின் பராமரிப்பும், ஆரோக்கியமும் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Thursday, 16 June 2016

கண்வலி

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

சங்கீதம் 71 :1-5

நீ கர்த்தரையே நம்பியிருக்கிறாய், நீ ஒருபோதும் வெட்கம் அடையாதபடி கர்த்தர் செய்வார். கர்த்தருடைய நீதியினிமித்தம் உன்னை விடுவித்து, உன்னைக் காத்தருளுவார். அவரது செவியை உனக்குச் சாய்த்து, உன்னை இரட்சிப்பார். நீ எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிருப்பார், உன்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டதினால், கர்த்தரே உன் கன்மலையும் உன் கோட்டையுமாய் இருக்கிறாா். உன் தேவன், துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் உன்னைத் தப்புவிப்பார் கர்த்தராகிய ஆண்டவரே, உன் நோக்கமும், உன் சிறுவயதுதொடங்கி உன் நம்பிக்கையுமாயிருக்கிறார். சங்கீதம் 71 :1-5

முதியோர்களுக்காக ஜெபிப்போம்

"முதிர்வயதுள்ளவர்களை கனம் பண்ண வேண்டும்" என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது.பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனவீனம் பண்ணாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பெற்றோர் முதிர்வயதாகும் போது, பிள்ளைகள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை சந்தோஷமாக மனமுவந்து செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தங்கள் தாயின் போதகத்தைத் தள்ளாமலும், அவர்களை அலட்சியம் பண்ணாமலும், அவர்கள் மூலமாக வருகிற கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

புடலங்காய்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

சங்கீதம் 70 :1-5

தேவன், உன்னை விடுவிப்பார், கர்த்தர், உனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரிப்பார். உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்கள், உனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலட்சையடைவார்கள். ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்கள். கர்த்தரைத் தேடுகிற யாவரும் கர்த்தரில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள், அவரது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்கள். நீயோ சிறுமையும் எளிமையுமானவன், தேவன், உன்னிடத்தில் வருவார்: அவரே உன் துணையும் உன்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தர், தாமதிக்கமாட்டார். சங்கீதம் 70 :1-5

Wednesday, 15 June 2016

சங்கீதம69:30-36

தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவதே கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள், தேவனைத் தேடுகிறவர்களுடைய இருதயம் வாழும். கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கும். தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார், அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள், அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். சங்கீதம69:30-36

கொண்டதுரை" இனம்

மக்கள் தொகை; 2லட்சத்து85ஆயிரம் கிறிஸ்தவர்கள்:1-5% வாழும்முக்கியமாநிலங்கள்: ஆந்திரா;(2லட்சத்து58ஆயிரம்) ஒடிசா;(28ஆயிரம்) தெலுங்கானா;(2ஆயிரம்) மொழி: தெலுங்கு எழுத்தறிவு; 41% கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகள்! "கொண்டதுரை" இன மக்கள் ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம்,விஜயநகரம்,ஸ்ரீகாகுளம்,கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களிலும், ஒடிசாவிலுள்ள "கோராபுட்" என்கிற மாவட்டத்திலும் வாழ்கின்றனர் "கொண்டா" என்கிற மொழிதான் இவர்களின் தாய் மொழி, ஆனால் காலப்போக்கில் அந்த மொழியை பயன் படுத்தாமல்,தெலுங்கு மொழியை தங்களுடைய தாய் மொழியாக மாற்றிக் கொண்டனர் விவசாயத்தின் மூலமாகவும், காட்டில் கிடைக்கும் பொருட்களை விற்றும். வருவாய் ஈட்டுகின்றனர்.கூலி தொழலாளிகளாகவும் செயல்படுகின்றனர் தங்களுக்கென்று ஒரு சிலகடவுள்களும், ஒருசில மதநம்பிக்கைகள் இருந்தாலும், இன்றைக்கு இந்து மத கோட்பாடுகளையே பெரும்பான்மையாக பின் பற்றுகினறனர் ஆண்களும், பெண்களும் சாராயத்திற்கு அடிமையாகியுள்ளனர். கொண்டதுரை இனமக்கள், மிஷனரிகள் முலமாக இயேசு கிறிஸ்துவை அறித்துகொள்ள, ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இவ்வினமக்கள் மத்தியில் காணப்படுகிற குடி பழக்கம் மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இம்மக்கள் மத்தியில் சுதேச ஊழியர்கள் எழும்பிட, திருச்சபைகள் பெருகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Tuesday, 14 June 2016

பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

சங்கீதம் 69 :26-30

துன்மார்க்கர், தேவன் அடித்தவனை துன்பப்படுத்தி, அவர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்கள். அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் தேவன் சுமத்துவார், அவர்கள் தேவனுடைய நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்கள் ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போகும், நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருக்கும் நீயோ சிறுமையும் துயரமுமுள்ளவன், தேவனுடைய இரட்சிப்பு உனக்கு உயர்ந்த அடைக்கலமாகும். தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்து சங்கீதம் 69 :30

மதுபானம்

தமிழகத்தில், மதுபானத்தினால் சீரழியும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவ, மாணவிகள் கூட இப்பழக்கத்தால் பெருவாரியாக பாதிக்கப் பட்டு வருகின்றனர் குடிபழக்கத்துக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வாலிப பெண்பிள்ளைகளுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சட்ட்டம் கொண்டுவரப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடி பழக்கத்திற்கு அடிமைப் பட்டிருக்கிற மாணவ சமுதாயத்தினரின் மறுவாழ்வு மற்றும் அவர்களுடைய மிட்புக்காக ஜெபிப்போம். பிஹார் மானிலத்தில் கொண்டுவரப் பட்டுள்ள பூரண மதுவிலக்கு சட்டம் நீடித்திருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

Monday, 13 June 2016

மாரடைப்பைத் தடுக்கலாம்

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

லஞ்சம்,ஊழல்

"கொள்ளையர்களைக் கூட மிஞ்சும் அளவிற்கு வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் ஊழலில் தினைக்கின்றன"எனறு மத்திய சாலை போக்குவரத்து துறை வருத்தம் தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில்,ஊழல் இல்லாதத்துறை!, என எதையும் விட்டுவிடமுடியாது, ஊழலில் முதலிடத்தில் வருவாய்துறை உள்ளது.பட்டா மற்றும் பல்வேறு சான்றிதல் வழங்குகின்ற காரியங்களில் லஞ்சம் மலிந்து கிடக்கிறது, அடுத்தபடியாக பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை பொதுப்பணி துறை என எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது தமிழ் நாட்டில் செயல்படுகிற அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மீது பரிசுத்தம், சுத்திகரிப்பு உண்டாக, அவர்கள் பணஆசை இலலாதவர்களாக உண்மையாய் பணியாற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

ஆறாத புண்கள்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

சங்கீதம் 69 :21-25

உன்னை பகைக்கரவர்கள் உன் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், உன் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கும். அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படும் அவர்கள் இடுப்புகளை எப்போதும் தேவன் தள்ளாடப்பண்ணுவார் அவருடைய உக்கிரத்தை தேவன் அவர்கள்மேல் ஊற்றுவார், அவருடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும். அவர்கள் வாசஸ்தலம் பாழாகும், அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போகும். சங்கீதம் 69 :20-25

Sunday, 12 June 2016

ஊருக்குள் புகும் லன விலங்குகள்

கோடைகாலத்தில் வனப்பகுதிகளில் வலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுகிறது இதனால் யானைகள் அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து வெளியேரி மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்கள் மற்றும்தோட்டங்களுக்குள் புகுந்து அவைகளை நாசப்படுத்துகின்றன. சிறுத்தை கரடி காட்டுபன்றி போன்ற விளங்குகளும் கூட ஊருக்குள் புகுந்து ஆடுகள் மற்றும் மனிதர்களை கூட தாக்கி விடுகின்றன விளைநிலங்கள் மற்றும் தோட்டபகுதிக்குள் வனவளங்குகள் புகுந்து சேதபடுத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திட ஜெபிப்போம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மூலமாக உரிய இழப்பீடு தொகை கிடைத்திட ஜெபிப்போம் வனவிளங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க ஜனங்கள் பாதுகாக்கப்பட வனத்துறை நடவடிக்கை எடுக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

வயிற்றுப் போக்கு

2 கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் 1தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்

சங்கீதம் 69 :16-20

கர்த்தர் உன் விண்ணப்பத்தைக் கேட்டருளுவார், அவருடைய தயை நலமாயிருக்கிறது, அவரது உருக்கமான இரக்கங்களின்படி உன்னைக் கடாட்சித்தருளுவார். அவரது முகத்தை அவரது அடியானுக்கு மறைக்க மாட்டார், நீ வியாகுலப்படாதே, உனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளுவார். அவர் உன் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணுவார், உன் சத்துருக்களினிமித்தம் உன்னை மீட்டுவிடுவார். தேவன் உன் நிந்தையையும் உன் வெட்கத்தையும் உன் அவமானத்தையும் அறிந்திருக்கிறார், உன் சத்துருக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை உன் இருதயத்தைப் பிளந்தது, நீ மிகவும் வேதனைப்படுகிறாய், உனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தாய், ஒருவனும் இல்லை, தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தாய், ஒருவனையும் காணாய், சங்கீதம் 69 :16-20

Saturday, 11 June 2016

சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

இந்தீியாவில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளீில் 88% பேர் தங்கள் பெற்றோர்களாலேயே அப்படிபட்ட துன்பத்தை அனுபவிக்கின்றனர்! இந்தியாவில் 4லட்சம் குழந்தைகள் மிக ஆபத்தான வேலைகளிலும், 25,000 குழந்தைகள் நூல் உற்பத்தியிலும் ஈடுபடுகினறனர் சிறுகுழந்தைகள் மீது திணிக்கப் படுகிற கொடுமைகள் மற்றும் தீமைகள் விலகவும் அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்காக அரசாங்கம் எடுக்கிற முயற்சிகள் வெற்றி பெறவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில்

பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது

சங்கீதம் 69 :11-15

இரட்டை உன் உடுப்பாக்கினாய், அப்பொழுதும் உன்னைபகைகிறவர்க்குப் பழமொழியானாய். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் உனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள், மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானாய். ஆனாலும், அநுக்கிரககாலத்திலே கர்த்தரை நோக்கி விண்ணப்பஞ் செய்தாய், தேவனுடைய மிகுந்த கிருபையினாலும் அவரது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் உனக்குச் செவிகொடுப்பார் நீ அமிழ்ந்துப் போகாதபடிக்குச் சேற்றினின்று உன்னைத் தூக்கிவிடுவார், உன்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நீ நீங்கும்படி செய்வார். ஜலப்பிரவாகங்கள் உன்மேல் புரளாமலும், ஆழம் உன்னை விழுங்காமலும், பாதாளம் உன்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருக்கும். சங்கீதம் 69 :11-. 15

Friday, 10 June 2016

சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

இந்தியாவிலுள்ள அரசு பள்ளிகள் 59% குடிநீர் வசதியற்றதாகவும் 89% கழிப்பிடம் வசதியற்றதாகவும் இருப்பதால் அநேக சிறு பிள்ளைகள் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இந்தியாவிலுள்ள நீரழிவு நோயாளிகளில் 10% பேர் குழந்தைகள் இந்தியாவில் 4ல்3 குழந்தைகளுக்கு இரத்த சோகை என்ற நோய் இருக்கிறது இந்தியாவில் 10ல்6 குழந்தைகளுக்கு 'ஆஸ்மா' நோய் உள்ளது, இந்த நிலை இந்தியாவில் மாறும்படியாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 69;6-10

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்காகக் காத்திருக்கிறவர்கள் உன்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்கள், இஸ்ரவேலின் தேவனைத் தேடுகிறவர்கள் உன்னிமித்தம் நாணமடையாதிருப்பார்கள். அவரது நிமித்தம் நிந்தையைச் சகித்தாய், இலச்சை உன் முகத்தை மூடிற்று. உன் சகோதரருக்கு வேற்று மனுஷனும், உன் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானாய். அவருடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் உன்னைப் பட்சித்தது, அவரை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் உன்மேல் விழுந்தது. உன் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதாய, அதுவும் உனக்கு நிந்தையாய் முடிந்தது. சங்கீதம் 69 :6-10

வெண்டைக்காய்

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். -

Thursday, 9 June 2016

சிறு பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்

சீனாவிலுள்ள "பீஜிங்" என்கிற பட்டணத்திலுள்ள,1முதல்5 வயதிற்குட்பட்ட சிறுபிள்ளைகள், 'பீர்'என்கிற மதுபானத்தை குடிக்க பழகி வருகிறார்கள் இந்த நிலை மாறுவதற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வறுமை காரணமாக, தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 2லட்சம் குழந்தைகள் விற்கப்படுகின்றனர் இது தடுக்கப்படுவதற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் அமெரிக்காவில் ஒரு குழந்தை ஆரம்பப்பள்ளியை முடிப்பதற்குள்,சுமார் 8,000 வன்முறை காட்சிகளை நேரிடையாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ பார்க்க நேரிடுகிறது. இதனால், அவர்களுடைய உள்ளம் சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது இந்த நிலைமாறும்படியாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Wednesday, 8 June 2016

தாய்ப்பால்

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

சங்கீதம் 69 :1-5

தேவன், உன்னை இரட்சிப்பார்! வெள்ளங்கள் உன் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறாய்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறாய்; வெள்ளங்கள் உன் மேல் புரண்டுபோகிறது. நீ கூப்பிடுகிறதினால் இளைத்தாய், உன் தொண்டை வறண்டுபோயிற்று, உன் தேவனுக்கு நீ காத்திருப்பதால், உன் கண்கள் பூத்துப்போயிற்று நிமித்தமில்லாமல் உன்னைப் பகைக்கிறவர்கள் உன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள், வீணாக உனக்குச் சத்துருக்களாகி உன்னைச் சங்கரிக்கவேண்டு மென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள், நீ எடுத்துக்கொள்ளாததை நீ கொடுக்க வேண்டியதாயிற்று. தேவன் உன் புத்தியீனத்தை அறிந்திருக்கிறார், உன் குற்றங்கள் தேவனுக்கு மறைந்திருக்கவில்லை. சங்கீதம் 69 :1-5

குழந்தைகள் மாயம்

வெளி மாநிலங்களிலிருந்து வந்து, தங்கள் பிழைப்பிற்காக தமிழ் நாட்டின் சாலையோரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற குடும்பங்களிலுள்ள குழந்தைகளும் கடத்தல்காரர்களின் பார்வையில் சிக்கியிருக்கின்றன அப்படிபட்ட சிறுகுழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம் சிறுபிள்ளைகள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழகம் முழு முயற்சியோடு செயல்பட, தமிழகத்தில் சிறு பிள்ளைகள், குறிப்பாக சிறுமியர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சார்க் நாடுகளில் குழந்தைகளின் இறப்பில் இந்தியா 3வது இடம் வசிக்கிறது கடந்த 2015ம் ஆண்டின் புள்ளி விவரப்படி "5வயதிற்குட்பட்ட 1000குழந்தைகளில், 48குழந்தைகள் இறந்து விட்டன" என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், குழந்தைகள் இறப்பு தடுக்கப்பட ஜெபிப்போம்

இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

சங்கீதம் 68 :31-35

பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார். தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள், அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. தேவன் அவரது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறார், இஸ்ரவேலின் தேவன் அவருடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர், தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங்கீதம் 68 :31-35

Tuesday, 7 June 2016

குழந்தைகள் மாயம் !

தமிழகத்தில் சிறுவர்கள்,சிறுமியர்கள் கடத்தல் என்பது மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு வரையிலும் சுமார் 1,103 சிறுவர் சிறுமியர் காணாமல் போனதும், இவர்களில் 879பேர் இன்னும் மிட்கபடாமல் இருப்பதும் அரசின் ஆவணக் குறிப்பிலிருந்து தெரிய வந்துள்ளது குழந்தை இல்லாத தம்பதியர்களுக்காக, பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஆட்களை கடத்தும் கொள்ளைக்கார கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். வறுமை,ஏழ்மை, பாதுகாப்புக் குறைபாடு போன்ற காரணங்களை அறிந்து. பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலிருந்துதான் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.தற்போது மருத்துவத்துறை எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் மூலமாக குழந்தைகள் கடத்தப்படுதல் முற்றிலும் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

வயிற்று உப்புசம், அஜீரணம்

1 கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

சங்கீதம் 68 :26-30

நீ சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்தரி. உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார், அவர் உன் நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்துவார். எருசலேமிலுள்ள அவருடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் அவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டுவார், ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான், அவர் யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். சங்கீதம் 68 :26-30

Monday, 6 June 2016

வால்மிளகு

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

சங்கீதம் 68;21-25

மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், உன்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவாா், அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவார் அவர்கள் உன் தேவனுடைய நடைகளைக் கண்டார்கள், உன் தேவனும் உன் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள் சங்கீதம் 68;21-25

கடலரிப்பு

அவ்வப்போது கடலோர கிராமங்களில் காணப்படுகிற கடல்சீற்றம் காரணமாக கடற்கரை ஒரங்களில வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் "கடல் சீற்றத்தினால் வீடுகள் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்படும் சூழ்நிைலை உருவாகும்" என குமரிமாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூறுகிறார்கள் தமிழகத்தின் அனைத்து கடற்கரையோர கிராமங்களின் பாதுகாப்பிற்காக, கடற்கரை யோரங்களில் அரசின் மூலம் தூண்டில் வலைவு மற்றும் உறுதியான கடலரிப்பு தடுப்புச்சுவர் பாதுகாப்பு செய்யப்பட, பேரிடர் ஆபத்தை தவிர்க்க கடற்கரையை வட்டு 500மீட்டர்தள்ளியே குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட, வரும் நாட்களில் இந்த காரியத்தில் அரசுடன் பொதுமக்களும் ஒத்துழைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம

Sunday, 5 June 2016

தொழிலில் நஷ்டம்

இன்றைய சூழ்நிலையில் வியாபாரம் மற்றும் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால் கடன்பாரம் மற்றும்பலவிதமான நெருக்கடிகளின் நிமித்தமாக அனேக குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன இப்படியாக வியாபாரிகள் மற்றும் தொழில் செய்கிறவர்களுடைய நஷ்டங்கள் மற்றும் நெருக்கடிகள் மாறிட ஜெபிப்போம்

பற்களில் மஞ்சள் நிறமா?

பற்களில் மஞ்சள் நிறமா? கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாக பளீரிடும்.

ஓமம்

ஓமம் 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும். - உணவே மருந்து

சங்கீதம் 68 :16-20

பாசான் பர்வதத்தில் வாசமாயிருக்கத் தேவன் விரும்பினார், ஆம் கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார். தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். தேவன் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனார் தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டார். எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக, நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார், ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. சங்கீதம் 68 :16-20

Saturday, 4 June 2016

பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க;

பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.

பெருங்காயம்

பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.

கொசுக்களை அழிப்போம்

கொசுக்களின் மூலமாகப் பரவும் "ஜிக்கா" என்னும் வைரஸ் உலகம் முழுவதும் ஒரு பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது "ஜிக்கா" "டெங்கு" "சிக்கன்குனியா நோய்கள் கொசுக்களின் மூலமாகத்தான் பரவுகிறது, உலகம் முழுவதிலும் கொசுக்களினால் ஏற்படும் வியாதிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட. நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க எடுக்கப்படுகிற திவிரமான ஆய்வுகள் மற்றும் முயற்சிகள் வெற்றிபெற ஆண்டவனர நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 68 :11-16

ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. துன்மார்க்கர் தத்தளித்து ஓடினார்கள், வீட்டிலிருந்த நீ கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாய். நீ அடுப்பினடியில் கிடந்தவனாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருககிறாய். சர்வவல்லவர் துன்மார்க்கனை சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது, பாசான் பர்வதத்தில் உயர்ந்த சிகரங்களுள்ளது. சங்கீதம் 68 :11-15

Friday, 3 June 2016

செனனைக்கு ஆபத்து

சென்னையை மிரட்டிய பெருமழை மற்றும் பெரு வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்! "எல் நினோ" எனப்படும் பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எதிர்பாராத அதிக மழையினாலும், புவி வெப்ப மயமாக்குதலால் வறட்சியும் நிலவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் நமது நாட்டிலுள்ள நீராதாரங்களை பராமரித்து, அவைகளை பேணிப்பாதுகாக்க அரசு உடனடி கவனம் செலுத்திட, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் மறு சீரமைக்கப்பட, இந்த காரியங்களுக்கென்று சரியான, சுதந்திரமான நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அனைத்தும் சரி செய்யப்பட, வரும் ஆபத்துக்கு தமிழகம் மற்றும் குறிப்பாக சென்னை பட்டணம் பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சங்கீதம் 68 :6-10

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார், துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். தேவன் அவருடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, தேவனுக்கு முன்பாக வானமும் பொழிந்தது, இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினார் இளைத்துப்போன அவரது சுதந்தரத்தைத் திடப்படுத்தினாா். அவருடைய மந்தை அதிலே தங்கியிருந்தது, தேவன், அவருடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார். சங்கீதம் 68 :6-10

தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால்

தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.

சிறுநீரகத்தை குளுமைப்படுத்த

வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

செனனைக்கு ஆபத்து

சென்னையை மிரட்டிய பெருமழை மற்றும் பெரு வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்! "எல் நினோ" எனப்படும் பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எதிர்பாராத அதிக மழையினாலும், புவி வெப்ப மயமாக்குதலால் வறட்சியும் நிலவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் நமது நாட்டிலுள்ள நீராதாரங்களை பராமரித்து, அவைகளை பேணிப்பாதுகாக்க அரசு உடனடி கவனம் செலுத்திட, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் மறு சீரமைக்கப்பட, இந்த காரியங்களுக்கென்று சரியான, சுதந்திரமான நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அனைத்தும் சரி செய்யப்பட, வரும் ஆபத்துக்கு தமிழகம் மற்றும் குறிப்பாக சென்னை பட்டணம் பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

Thursday, 2 June 2016

ரவையில் புழுக்கள்

ரவையை மெல்லிய துணியில் கொட்டிப் பரப்பி, அரை மணி நேரம் கழித்து சலித்து எடுங்கள். புழுக்கள் எல்லாம் துணியோடு ஒட்டிக் கொண்டு போய் விடும்.

சாலை விபத்துக்கள்

உலகளவில் சாலை விபத்துக்களில், இந்தியாவில்தான் அதிகம் பேர் பலியாகிறார்கள்! வருடத்திற்கு, சுமார் 5லட்சம் சாலைவிபத்துக்கள் நடக்கின்றன! இதில், சுமார் 1,5லட்சம்பேர் இதில் பலியாகின்றனர்!கடந்த 2014ம் ஆண்டு,தமிழ்நாட்டில்தான் அதிகளவு சாலை விபத்துக்கள் நடந்துள்ளது! நாடுமுழுவதும் 3ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100கி.மி. தூரத்திறகு, ஒரு விபத்து சிகிச்சை மையம், என,1.200 சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளன நாடுமுழுவதும் சாலைவிபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கப்பட ஜெபிப்போம் .மக்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட ஜெபிப்போம் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை மக்கள் கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் தடைகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட ஜெபிப்போம் சாலைவிபத்துகளின் உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க.ஆங்காங்கே சாலையோரங்களிருந்து கொண்டு. இரத்தம் சிந்த பேராடுகிற பெல்லாத பெண் விக்ரக ஆவிகளை கட்டி துரத்தி ஜெபிப்போம் சாலைகளில் செல்வோர் மீது தேவ பாதுகாப்பு இருக்க ஜெபிப்போம்

மூளைக்குப் புத்துணர்ச்சி

பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

சங்கீதம் 68 :1-5

தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள். புகை பறக்கடிக்கப்படுவது போல அவர்களைப் பறக்கடிப்பார், மெழுகு அக்கினிக்கு முன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனுக்கு முன் அழிவார்கள். நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள். தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணு், வானாந்தரங்களில் ஏறி வருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்து, அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூரு. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். சங்கீதம் 68 :1-5

சாலை விபத்துக்கள்

உலகளவில் சாலை விபத்துக்களில், இந்தியாவில்தான் அதிகம் பேர் பலியாகிறார்கள்! வருடத்திற்கு, சுமார் 5லட்சம் சாலைவிபத்துக்கள் நடக்கின்றன! இதில், சுமார் 1,5லட்சம்பேர் இதில் பலியாகின்றனர்!கடந்த 2014ம் ஆண்டு,தமிழ்நாட்டில்தான் அதிகளவு சாலை விபத்துக்கள் நடந்துள்ளது! நாடுமுழுவதும் 3ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100கி.மி. தூரத்திறகு, ஒரு விபத்து சிகிச்சை மையம், என,1.200 சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளன நாடுமுழுவதும் சாலைவிபத்துக்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கப்பட ஜெபிப்போம் .மக்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட ஜெபிப்போம் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளை மக்கள் கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் தடைகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட ஜெபிப்போம் சாலைவிபத்துகளின் உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க.ஆங்காங்கே சாலையோரங்களிருந்து கொண்டு. இரத்தம் சிந்த பேராடுகிற பெல்லாத பெண் விக்ரக ஆவிகளை கட்டி துரத்தி ஜெபிப்போம் சாலைகளில் செல்வோர் மீது தேவ பாதுகாப்பு இருக்க ஜெபிப்போம்

Wednesday, 1 June 2016

வயிறு இதமாக

புழுங்கலரிச நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும

நீரில் மூழ்குதல் !

உலகளவில் வருடந்தோரும் சுமார் 3,70,000 பேர் நீரில் முழ்கி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது "மக்கள்,படகில் சுற்றுளா செல்லும்போது அநேகர் பாதுகாப்பு மிதவைகளை அணிய மறந்து விடுவதுதான் காரணம்" எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது உலகம் முழுவதும் படகில் சுற்றுலா செல்லும் பயணிகள் தண்ணீரில் பயணிக்கும்போது, உயிர்காக்கும் உடைகளை பயன்படுத்திக்கொள்ள ஜெபிப்போம் .நீரில் மூழ்கி மக்கள் பலியாவது தடுக்கப் படவும், அதற்குரிய விதி முறைகளை ஜனங்கள் பின்பற்றவும் ஜெபிப்போம்

சங்கீதம்67

தேவன், பூமியில் அவருடைய வழியும், அவருடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவன் உனக்கு இரங்கி, உன்னை ஆசீர்வதித்து, அவருடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணுவார் நீ கர்த்தரைதுதிப்பாயாக, சகல ஜனங்களும் அவரைத் துதிப்பார்களாக. தேவன் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவார் ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். நீ தேவனை துதிப்பாயாக, பூமி தன் பலனைத் தரும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். சங்கீதம்67

கொசுக்கள் ஓடி விடும்

இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்