Monday, 30 May 2016

காய்கறிகளை நறுக்கிப் போடும் போது

காய்கறிகளை நறுக்கிப் போடும் தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து வந்து விடும்.

சோம்பு (பெருஞ்சீரகம்):

சோம்பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

சங்கீதம் 66 :16-20.

தேவனுக்குப் பயந்தவர்களுக்கு தேவன் உன் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லு. அவரை நோக்கி உன் வாயினால் கூப்பிடு உன் நாவினால் அவர் புகழப்பட்டார். உன் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தாயானால், ஆண்டவர் உனக்குச் செவிகொடார். மெய்யாய்த் தேவன் உனக்குச் செவிகொடுத்தார், உன் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 66 :16 -20

உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்

சிங்கப்பூர் தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம் பெருகி வருகிற சூதாட்டங்கள் விபச்சாரக் கிரியைகள தடைச் செய்யப்படவும் அந்த தேசம் கர்த்தருடைய தேசமாக மாறவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Sunday, 29 May 2016

வெந்தயம்

அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். -

கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால்,

கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.

உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்

உலக முழுவதும் பூமியின் பல இடங்களில் வெள்ளங்கள் பொருக்கெடுத்து, பலத்தசேதங்கள் உண்டாகாதிருக்கவும் சூறாவளி சுனாமி போன்ற தண்ணீரினால் உண்டாகக்கூடிய சேதங்கள் வராமலிருக்க இதற்கு காரணமாயிருக்கிற உலக மக்களின் பாவங்களை தேவன் இயேசு கிறிஸ்த்துவின் இரத்தத்தினால் கழுவி அவருடைய பிள்ளைகளாய் மாற்றும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 66 :11-15

நீ வலையில் அகப்பட்டு, உன் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரம் ஏற்றப் பட்டு மனுஷரை உன் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணி, தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தாய், கர்த்தர் செழிப்பான இடத்தில் உன்னைக் கொண்டுவந்து விட்டார். சர்வாங்க தகனபலிகளோடே அவரது ஆலயத்திற்குள் பிரவேசி உன் இக்கட்டில் நீ உன் உதடுகளைத் திறந்து, உன் வாயினால் சொல்லிய உன் பொருத்தனைகளை அவருக்குச் செலுத்து,, ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை கர்த்தருக்குத் தகனபலியாக இடு. காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் அவருக்குப் பலியிடு. சங்கீதம் 66 :11-15

Saturday, 28 May 2016

உலக நாடுகளுக்காக ஒருநிமிடம்

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து தேசங்களின் பாதுகாப்பிற்காக, ஆசீர்வாத்திற்காக ஜெபிப்போம் நிலநடுக்கங்கலோ பஞ்சங்கலோ கொடிதான காரியங்களோ சம்பவிக்கக் கூடாதபடிக்கு, இதற்கு காரணமாயிருக்கிற அந்தமக்களுடைய பாவங்களை இயேசுவின் இரத்தத்தினால் கழுவி அவருடைய பிள்ளைகளாய் மாற்றும்படி யாகவும ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இலவங்கம்

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

சங்கீதம் 66 :6-10

கர்த்தர் கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஜனங்கள் ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தோம் அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார், அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது, துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்கள். நீ, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணு அவர் உன்னுடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், உன்னுடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார் தேவன், உன்னைச் சோதித்து வெள்ளியைப் புடமிடுகிறதுபோல உன்னைப் புடமிட்டார் சங்கீதம் 66 :6-10

எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா?

எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா? ஒருவெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, அறையின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். பூச்சிகள் காணாமல் போகும்.

Friday, 27 May 2016

ஏலக்காய்

ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

மீடியாக்களைப் பிடித்து வைத்திருக்கிற சாத்தானின் கிறியைகள் அழிக்கப்பட மக்கள் தவறான பாதையில் வழிநடத்துகிற நிகழ்ச்சிகள் வராமலிருக்க கர்த்தரின் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்

சங்கீதம் 66 :1-5

நீ தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடு அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடு தேவன் அவருடைய கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறார், அவரது மகத்துவமான வல்லமையினிமித்தம் அவருடைய சத்துருக்கள் அவருக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். பூமியின்மீதெங்கும் அவரைப் பணிந்துகொண்டு அவரைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் அவருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் . நீ தேவனுடைய செய்கைகளை வந்து பார், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானது.
சங்கீதம் 66 :1-5

வாஷ் பேசின் அடைப்பு

வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும். அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.

Thursday, 26 May 2016

மஞ்சள்

மஞ்சள் மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

இந்தியாவின் வடகிழக்கு மானிலங்கள் (குறிப்பாக திரிபுரா,மேகாலேயா,மணிப்பூர்)மற்றும் தென் மானிலங்களில் எழுப்புதல் உண்டாகும் கர்த்தரின் வாக்கு நிறைவேற ஜெபிப்போம் சிறுவர்கள் வாலிபர்கள் மீது ஆவியானவர் பலமாய் ஊற்றப்பட தீர்க்கதரிசன அபிஷேகங்கள் அளவில்லாமல் ஊற்றப்பட அவர்கள் கர்த்தருக்காக மாபெரும் சேனையாக எழும்ப கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 65 :8 -13

கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் கர்த்தருடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள், அவர் காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறார் அவர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிீறார் தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிீறார், இப்படி அவர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறார். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறார். வருஷத்தை அவருடைய நன்மையால் முடிசூட்டுகிறார், அவரது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது, மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது, பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. சங்கீதம் 65 :8 -13

வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள்

வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

FIRST

The worlds first engineer -Noah
The world's 1st man who travelled to space without rocket -Enoch
The world's 1st man who travelled to space with fire -Elijah The world's 1st man who travelled in live Submarine -Jonah
The world's 1st 3men's who wore the fire proof jackets -Shadrach, Meshach, Abednego
The world's 1st man who used the stone as Bullet -David
These were the world's 1st, because they kept God 1st in their life's
. So, If U keep God 1st, HE'll also keep U at 1st place. Be blessed

Wednesday, 25 May 2016

வேப்பம் இலை

இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம

உலகத்தின் பல பகுதிகளிலிருந்து கள்ள உபதேசங்களை, வேதபுரட்டுகளைக் கொண்டு வர சாத்தான் திட்டமிடுகிறான் ஊழியர்களும், விசுவாசிகளும் சாத்தானின் தந்திரங்களை சரியாய் அடையாளம் கண்டு கொண்டு விலகும் கிருபையை தேவன் அவர்களுக்கு கொடுக்க ஜெபிப்போம்

பெருங்காயம்

பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்

சங்கீதம் 65 :1-7

தேவனுக்காக, சீயோனில் துதியானது அமைந்து காத்திருக்கிறது, பொருத்தனை அவருக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரிடத்தில், மாம்சமான யாவரும் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் உன் மேல் மிஞ்சி வல்லமைகொண்டது, தேவநோ உன் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறார் அவருடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி அவரை தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், அவருடைய பரிசுத்த ஆலயமாகிய அவரது வீட்டின் நன்மையால் திருப்தியாவான் பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற உன் இரட்சிப்பின் தேவன் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் உனக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறார். வல்லமையை இடைகட்டிக்கொண்டு, அவருடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறார். சங்கீதம் 65 :1-7

Tuesday, 24 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம

இந்தியாவெங்கும் மதுபானக் கடைகள் முடப்பட, போதை வஸ்துகள் அழிக்கப்பட, இதைத்தூண்டுகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

வெங்காயம்

வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். -

சங்கீதம் 64 :1-10

தேவன், உன் விண்ணப்பத்தில் சத்தத்தைக் கேட்டருளுவார், சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, உன் பிராணனைக் காத்தருளுவாா். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் உன்னை விலக்கி மறைத்தருளுவார். அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமனாகிய உன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள், சற்றும் பயமின்றிச் சடிதியில் உன்மேல் எய்கிறார்கள். அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். அவர்கள் நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள், அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும், அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள். நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 64 :1-10

Monday, 23 May 2016

சீரகம்

சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

சமுதாய சீர்கேடுகளான வரதட்சணைக் கொடுமைகள், ஜாதி வெறி போன்ற காரியங்கள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 63 :1-11

உன்னுடைய தேவனை அதிகாலமே தேடுகிறாய், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே உன் ஆத்துமா அவர் மேல் தாகமாயிருக்கிறது, உன் மாம்சமானது அவரை வாஞ்சிக்கிறது. அப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப்பார்க்க ஆசையாயிருந்து, அவரது வல்லமையையும் அவரது மகிமையையும் கண்டாய் ஜீவனைப்பார்க்கிலும் அவரது கிருபை நல்லது, உன் உதடுகள் அவரைத் துதிக்கட்டும் உன் ஜீவனுள்ளமட்டும் நீ அவரைத் துதித்து, அவரது நாமத்தைச் சொல்லிக் கையெடு நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல உன் ஆத்துமா திருப்தியாகும், உன் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் அவரைப் போற்றும். உன் படுக்கையின்மேல் நீ அவரை நினைக்கும்போது, இராச்சாமங்களில் அவரைத் தியானிக்கிறாய் அவர் உனக்குத் துணையாயிருந்ததினால், அவரது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறாய் உன் ஆத்துமா அவரைத் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறது, அவரது வலதுகரம் உன்னைத் தாங்குகிறது. உன் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள், நரிகளுக்கு இரையாவார்கள். நீயோ தேவனில் களிகூருவாய், அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும் சங்கீதம் 63 :1-11

குளோரிந்தாள் அம்மையார

இந்தியாவைச் சமையங்களின் சங்கமம் என்று அழைக்கலாம் ஏனென்றால் பல சமையங்கள் இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப் பட்டன. அதே நேரம் இந்தியாவை" மூடத்தனங்கள் நிறைந்த நாடு" என்றுக் கூட கூறமுடியும். ஏனெனில் ஒரு காலத்தில் உலகில் எந்த பாகங்களிலும் நடந்திராத கொடிய சம்பவங்கள் இங்கே நடந்ததுண்டு. சதி, உடன்கட்டை ஏறுதல் குழந்தைகள் திருமணம் பெண்கல்வி மறுப்பு இன்னும் பல இதற்க்கு உதாரணங்கள் ஆகும். அப்படியே ஒரு நிகழ்ச்சி இது. ஒரு அழகிய இளம் பெண்🏽 கணவன் இறந்துவிட்டான். பிணத்தோடு 🛌 சேர்த்து அவளையும் சுட்டெரிக்க இழுத்துச் செல்லப்பட்டாள். இதனை அறிந்த கர்னல் லிட்டில்டன் 🏻 விரைந்து சென்று அவளை காப்பாற்றினார். ஆனால் ஊரார் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் லிட்டில்டன் அவளை🏽 தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்பெண்ணே கோகிலா என்ற குளோரிந்தாள். ஆவர். கிறிஸ்தவ சித்தாத்தங்களை லிட்டில்டன்🏻 பிரபு மூலம் அறிந்துக்கொண்ட குளோரிந்தாள் ஞானஸ்நானம் பெற விரும்பி சுவார்ட்ஸ் ஐயரிடம் புது பிறப்பு அடைந்தாள். அன்று முதல் காண்பவர்களிடம்👁 எல்லாம் கிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஆத்தும ஆதாயப் பணியை செய்தார். 1780 ஆம் ஆண்டு40 பேர் இவரால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். கர்த்தருக்கென்று ஒரு ஆலையம் கட்ட விரும்பிய குளோரிந்தாள் அம்மையார் 1785 ஆம் ஆண்டு நெல்லையில் முதல் ஆலையத்தை கட்டினார். சிறு பள்ளிக்கூடத்தையும் ஆரம்பித்தார். ஆசாரம் மிக்க பிராமண குடியில் பிறந்து, சாதி ஆசாரங்களை தகர்த்து ஏழை எளியவர்களுடன் சமமாக பழகி அவர்களுக்கு பண உதவி அளித்தார். அவர்கள் ஆன்மா முன்னேற்றத்துக்காக உழைத்து தனக்கென ஒரு முத்திரையை🏵 திருச்சபை வரலாற்றில் பதித்த குளோரிந்தாள் நமக்கு ஒரு தூண்டுகோல்❗ அன்பரே❗ சாதி மதங்களை கடந்து கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்பவரா நீங்கள்?
⚰:1806
ஊர்: தஞ்சாவூர்
நாடு:இந்தியா
உன் ஓய்வினை சீக்கிறம் எடுத்துக் கொள்ளாதே. எடுத்துக்கொண்டால் உனது உண்மை ஓய்வினை நீ அடைய முடியாது. R.Rajapandian

Sunday, 22 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம,

எல்லா குடும்பங்களின் பாதுகாப்பிற்காக, கணவன் மனைவி உறவுகள் நிலைத்திருக்க, விவாகரத்துக்கள் இல்லாமலிருக்க, பெற்றோர் பிள்ளைகள் உரவுகள் சீர்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

மிளகு

மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

சங்கீதம் 62 :7

உன் இரட்சிப்பும், உன் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது, பெலனான உன் கன்மலையும் உன் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்கள், எக்காலத்திலும் அவரை நம்புவார்களாக அவர் சமுகத்தில் உன் இருதயத்தை ஊற்றிவிடு தேவன் உனக்கு அடைக்கலமாயிருக்கிறார். கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே, தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். கொடுமையை நம்பாதே கொள்ளையினால் பெருமைபாராட்டாதே ஐசுவரியம்.விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதே தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் அவருடையது தேவன் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிப்பார் சங்கீதம் 62 :7 -12

முதலூூர் தூய மிகாவேல் சகல தூதர்களின் ஆலயம்

Saturday, 21 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம

தேசமெங்கும் ஊழியம் செய்கிற மிஷ்னரிகளுக்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்கள் குடும்பத்திற்காக, பணித்தளங்களில் மகிமையான எழுப்புதல் ஏற்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம

தேசமெங்கும் ஊழியம் செய்கிற மிஷ்னரிகளுக்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்கள் குடும்பத்திற்காக, பணித்தளங்களில் மகிமையான எழுப்புதல் ஏற்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 62 :1-6

தேவனையே நோக்கி உன் ஆத்துமா அமர்ந்திருக்கட்டும் அவரால் உன் இரட்சிப்பு வரும். அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. துன்மார்க்கர் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பார்கள், அவர்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவார்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவார்கள். உன்னுடைய மேன்மையிலிருந்து உன்னைனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம் பேசவிரும்புகிறார்கள், தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். உன் ஆத்துமா, தேவனையே நோக்கி அமர்ந்திருக்கட்டும் நீ நம்புகிறது அவராலே வரும் அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அசைக்கப்படுவதில்லை. சங்கீதம்62;1-6

வெள்ளரிக் காய்

இதன் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம

ஆந்திரா, ஒரிஸ்ஸா, கேரளா, மஹாராஷ்ட்ரா மானிலங்களில் அழிவு வராமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பெங்களூரு, மைசூர், ஹைதராபாத் பட்டணங்களின் சமாதா னத்திற்காகவும் ஜெபிப்போம்

சங்கீதம் 61 :1-8

தேவன், உன் கூப்பிடுதலைக் கேட்டு,உன் விண்ணப்பத்தைக் கவனிப்பார் உன் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவரை நோக்கிக் கூப்பிடு், உனக்கு எட்டாத உயரமான கன்மலையில் உன்னைக் கொண்டுபோய்விடுவார். அவர் உனக்கு அடைக்கலமும், உன் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருக்கிறார் நீ அவருடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவாயாக அவரது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவாயாக தேவன், உன் பொருத்தனைகளைக் கேட்டார், அவரது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை உனக்குத் தந்தார் இப்படியே தினமும் உன் பொருத்தனைகளை நீ செலுத்தும்படியாக, அவரது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணு சங்கீதம் 61 :1-8

வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். - உணவே மருந்து

Thursday, 19 May 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

சபைகளுக்குள் காணப்படுகிற யார் பெரியவன் என்ற அதிகார வெறியையும் பொருளாசையையும் ஆவிக்குரிய காரியத்தில் மேல் நிர்விசாரத்தையும் கொண்டுவருகிற ஆவிகள் கட்டப்பட விதைக்கப்படுகிற சத்தியங்கள் வேரூன்ற முடியாதபடி செய்கின்ற கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

தாய்லாந்து தேசம் விசாரத்திற்கு பேர்போன தேசமாயிருக்கிறபடியினால் கர்த்தரின் கோபாக்கினை ஏற்படாதிருக்க தேவன் இந்த ஜனங்களை சந்திக்கவும், இத்தேசத்தின் பாவத்தை மன்னிக்கவும், மனமிரங்கும் படியாகவும் ஜெபிப்போம்

சுக்கு

சுக்கு தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும

சங்கீதம் 60 ;1-6

தேவன், உன்னை கைவிட்டார் உன்னைச் சிதறடித்தார், உன் மேல் கோபமாயிருந்தார், மறுபடியும் உன்னிடமாய்த் திரும்பியருளுவார் பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினார், அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணுவார் அது அசையாது. உனக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தார், தத்தளிப்பின் மதுபானத்தை உனக்குக் குடிக்கக் கொடுத்தார். சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தார். அவரது பிரியர் விடுவிக்கப்படும்படி, அவரது வலதுகரத்தினால் இரட்சித்து, உனக்குச் செவிகொடுத்தருளுவார் தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூரு சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள். சங்கீதம் 60 ;1-6

ஸ்தோத்திர ஜெபம.

தமிழ் நாட்டில் ஓட்டு அமைதியாக எண்ணி முடிக்கப் பட்டதற்காகவும் கர்த்தருக்கு சித்தமானவர்கள் நேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் தேவன் அவர்களை சந்திக்கிறதற்காகவும். அவருடைய பிள்ளைகளாய் மாற்றுவதற்காகவும், தேவஞானம் அவர்கள் மேல் ஊற்றப் படுவதற்காகவும், முதலமைச்சருக்கு நல்ல சுகத்தை,தெளிந்த புத்தியை, கர்த்தரே உண்மையான தெய்வம் என்று தெரிந்துக் கொள்ளும் ஞானத்தைக் கொடுப்பதற்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்

Wednesday, 18 May 2016

கடுகு

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

சங்கீதம் 59 :14-17

துன்மார்க்கர் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறு முறுத்துக்கொண்டிருப்பார்கள். நீயோ கர்த்தருடைய வல்லமையைப் பாடி, காலையிலே அவரருடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவாயாக, உனக்கு நெருக்கமுண்டான நாளிலே கர்த்தர் உனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமாவார் உன் பெலனான கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணு தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள உன் தேவனுமாயிருக்கிறார். சங்கீதம் 59 :14-17

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

எல்லா திருச்சபை களிலும் ஜெப ஆவி ஊற்றப்படும்படியாக மன்றாட்டு வீரர்களை கர்த்தர் திரளாக எழுப்பும்படியாக சபைகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவைகளாக மாற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

விண்ணப்ப ஜெபம்

இன்று தேர்தல் வாக்குகளை எண்ணும் நாள் ஆண்டவருக்கு சித்தமானவர்கள் தேர்தலில் ஜெயிக்கவும், நாட்டில் அமைதியான சூழ்நிலை உறுவாகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

கொடிய விபச்சார அலையை தேசத்தில் கட்டவிழ்த்து விட சாத்தான் திட்டம் தீட்டுகிறான் விபச்சார விடுதிகள், விபச்சார கிராமங்கள், அரசாங்க அனுமதியோடு திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது ஓரினச் சேர்க்கைகள் பெருகுகிறது விபச்சார ஆவிகளை கட்டி ஜெபிப்போம்

எள்

எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

சங்கீதம் 59 :10 -13

தேவன் தம்முடைய கிருபையினால் உன்னைச் சந்திப்பார், தேவன் உன் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நீ காணும்படி செய்வார். அவர்களைக் கொன்றுபோடமாட்டா், ஏனென்றால் நீ கர்த்தரை மறந்து போவாயே! உன் கேடகமாகிய ஆண்டவர், தமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடுவார் அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது, அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யுமாகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்கள் தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை அவருடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்குவார், இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்குவார். சங்கீதம் 59 :10 -13

Monday, 16 May 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

எல்லா திருச்சபைகளிலும் பின்மாரி மழை ஊற்றப்படும்படியாக, சுத்திகரிப்பு உண்டாக ஆடுகளைப் பட்சிக்கிற மேய்ப்பர்களை கர்த்தர் அப்புறப் படுத்தி நல்ல மேய்ப்பர்களை எழுப்ப ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 59 :6 -9

துன்மார்க்கர் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள், அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் அவர்களைப் பார்த்து நகைப்பார், புறஜாதிகள் யாவரையும் இகழுவார். அவன் வல்லமையை நீ கண்டு கர்த்தருக்குக் காத்திரு தேவனே உனக்கு உயர்ந்த அடைக்கலம். சங்கீதம் 59 :6 -9

காணம்

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (காணம்) (Horsegram) கொடுக்க வேண்டும்.

ஸ்தோத்திர ஜெபம.

தமிழ் நாட்டில் நாட்டில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்

உடல் அசதியா

உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

Sunday, 15 May 2016

உடல் அசதியா

உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-6

+தமிழக தேர்தல் கமிஷனர் தேர்தல் அதிகாரிகள் மனதைரியமாய் நீதியோடு செயல்பட ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம் + தேர்தல் நாளன்று எந்தவிதமான கலவரமோ வன்முறையோ ஏற்படாமலிருக்க, கள்ள ஓட்டு கலாச்சாரம் ஒழிய, எல்லோரும் ஓட்டுரிமையை தவறாமல் பயன்படுத்த கர்த்தரை நோக்கி ஜெபிப்போம் +234 தொகுதிகளிலும் நல்லவர்கள் மாத்திரம் வெற்றிபெற கிரிமினல்கள், கொள்ளையடிக்கும் எண்ணமுள்ளவர்கள், தோற்று போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் +கர்த்தருடைய இதயத்துக்கு ஏற்ற முதலமைச்சர், அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட, நல்லாட்சி தமிழகத்தில் மலர ஆண்டவரை நோக்கி பாரத்தோடு ஜெபிப்போம்

சங்கீதம் 57 :6 11

துன்மார்க்கர் உன் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள், உன் ஆத்துமா தொய்ந்துபோயிற்று, உனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நீ பாடிக்கீர்த்தனம்பண்ணு உன் மகிமையும்,வீணையும், சுரமண்டலமும் விழிக்கட்டும் அதிகாலையில் விழித்துக்கொள் ஆண்டவரை ஜனங்களுக்குள்ளே துதி ஜாதிகளுக்குள்ளே அலரை கீர்த்தனம்பண்ணு அவரது கிருபை வானபரியந்தமும், அவரது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. தேவன், வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளுவார், அலரது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 57 :6-11

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-

234 தொகுதிகளிலும் ஓட்டு போடவிருக்கிற வாக்காளர்களின் சிந்தையில் இயேசுவின் இரத்தத்தை தெளிக்கும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வழக்கத்தின்படி வாக்களிக்கிற கட்சி, ஜாதி உணர்வு, இலவசங்கள், பொய்வாக்குறுதிகளை நம்புதல், பணம் வாங்கி ஓட்டுப்போடுதல்-இப்படிப்பட்ட மனநிலையை கர்த்தர் மாற்றி நல்லவர்களுக்கு ஓட்டுபோடும் விழிப்புணர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 59 :1-5

தேவன், உன் சத்துருக்களுக்கு உன்னைத் தப்புவிப்பாா், உன்மேல் எழும்புகிறவர்களுக்கு உன்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பாரர் அக்கிரமக்காரருக்கு உன்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார் இதோ, உன் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள் உன்னிடத்தில் மீறுதலும், பாவமும் இல்லாதிருந்தும்,பலவான்கள் உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். உன்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், கர்த்தர் உனக்குத் துணைசெய்ய விழித்து உன்னை நோக்கிப்பார்ப்பார் சேனைகளின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவன், சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்புவாா், வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யமாட்டார். சங்கீதம் 59 :1-5

இருமல்

காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

Friday, 13 May 2016

வயிற்றுவலியா

ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

சங்கீதம் 58 :7-11

கடந்தோடுகிற தண்ணீரைப்போல் துன்மார்க்கன் கழிந்துபோவான், அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகும் கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவான், ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பான் முள் நெருப்பினால் அவன் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் கர்த்தர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார் பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான், நீதிமான் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப்பலன் உண்டென்றும், மெய்யாய்ப் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். சங்கீதம்58;7-11

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-4

+அநேக இடங்களில் பலிகள் (மிருக பலிகள்/நரபலிகள்) செலுத்தப்பட்டு அதில் கிடைக்கிற எழும்புகள் சாம்பல்கள் மூலம் மனிதர்களை வசியப்படுத்தக்கூடிய கிரியைகள் செய்யப்படுகிறது இந்த கிறியைகள் ஒன்றும் பலிக்காமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் + ஜாதி வெறியை தூண்டிவிட்டு தேர்தலில் ஜெயிக்க நினைக்கும் கிரியைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அழிக்க ஜெபிப்போம் +ஏழை ஜனங்களை வஞ்சித்து கோடிக் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணங்கள், தங்களுக்கு வேண்டியவர்களை ஜெயிக்கவைக்க பெரிய தொழிலதிபர்கள் கோடிகளில் பணத்தை வாரியிரைக்க திட்டமிடுகிறார்கள் இவர்கள் வெட்கப்பட்டுபோக ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம்

இளநீர்

சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

+தமிழ் நாட்டின் பலவானை, வானமண்டல பொல்லாத ஆவிகளின் சேனைகளை, அஸ்தரோத்தை கட்டித் துரத்துவோம் + தேர்தலில் வெற்றி பெற பல இடங்களில் யாகங்கள் செய்யப்பட்டு வருகிறது மந்திர பொருட்கள் மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டிருக்கிறது அசுத்த ஆவிகளோடு தொடர்புடைய சாமியார்கள் இதற்கான வேலைகளில் தீவிரமாய் ஈடுபடுகிறார்கள் இந்த கிரியைகள் சபிக்கப்பட்டு போகும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் + தமிழ்நாட்டின் மலைபிரதேசங்களை குறிவைத்து ஜெபிப்போம், அடர்ந்த காடுகளில், குகைகளில் மந்திரவாதிகள்,சூனியகாரர்கள் அசுத்த ஆவிகளை ஏவி தேர்தலில் கொடிதான காரியங்களை நிறைவேற்ற திட்டமிடுகிறார்கள் அந்த பலிபீடங்கள் சுட்டெரிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 58 :2-6

துன்மார்க்கர் மனதார நியாயக்கேடு செய்கிறார்கள், பூமியிலே அவர்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறார்கள் துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள், தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள் சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள். தேவன், அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடுவார், கர்த்தர், பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடுவார். சங்கீதம் 58 :2-6

Thursday, 12 May 2016

புற்று நோய்க்கு மருந்து

சங்கீதம் 57 :6 11

துன்மார்க்கர் உன் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள், உன் ஆத்துமா தொய்ந்துபோயிற்று, உனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, உன் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நீ பாடிக்கீர்த்தனம்பண்ணு உன் மகிமையும்,வீணையும், சுரமண்டலமும் விழிக்கட்டும் அதிகாலையில் விழித்துக்கொள் ஆண்டவரை ஜனங்களுக்குள்ளே துதி ஜாதிகளுக்குள்ளே அலரை கீர்த்தனம்பண்ணு அவரது கிருபை வானபரியந்தமும், அவரது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. தேவன், வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளுவார், அலரது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 57 :6-11

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-

தமிழ்நாட்டை கர்த்தர் நேசிக்கிறதற்காக, தோமாவின் இரத்தம் தமிழ் நாட்டில் சிந்தப்பட்டதற்காக, எழுப்புதலுக்காக, தமிழ் நாட்டை முன் குறித்ததற்காக, இதுவரை சுவிசேஷம் அறிவிப்பதை எதிற்காத அரசாங்கத்தை கர்த்தர் தந்தற்காக கர்த்தரைத் துதிப்போம் " உன்னதமான தேவன் மனுஷரின் ராஜியத்தில் ஆளுகைச்செய்து தமக்கு சித்தமானவனை அதின் மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல்5;21) இந்தவார்த்னதயை கர்த்தர் நிறைவேற்றி, தாம் ஒருவரே ராஜரீகம் பண்ணுகிற கர்த்தர் என்பதை நிருபிக்க கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். - உணவே மருந்து

Wednesday, 11 May 2016

தேனின் மகிமை

சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும். பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை சுலபமாக நீங்கி விடுகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும். தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம் வாந்திபேதி, தீப்புண் விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும். தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும். நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமின்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம். வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

சங்கீதம் 57 :1-5

தேவன் உனக்கு இரங்குவார், அவரை உன் ஆத்துமா அண்டிக்கொள்ளட்டும், விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் அவரது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவாயாக உனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவாயாக உன்னை விழுங்கப்பார்க்கிறவன் உன்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, உன்னை இரட்சிப்பார். தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். உன் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது, தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறாய், அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. தேவன், வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளுவார், அவரது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 57 :1-5

நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக தமிழ் நாட்டின் எழுப்புதலுக்காக மிகத் திவிரமாக ஜெபித்து நாம் செயல்படுகிரோம் மிகச் சீக்கிரத்தில் கர்த்தர் எழுப்புதலை அனுப்பப் போகிறார் இந்த எழுப்புதலை தடை செப்பவும் தன்னுடைய திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவும் தன்னுடைய ஆட்களை ஆளுகையிலே கொண்டுவரவும் சாத்தான் இந்த தேர்தலை பயன்யடுத்தத் திட்டமிடுகிறான் நாம் விழிப்போடிருந்து ஜெபம் பண்ணி அவன் திட்டங்களை முறியடிப்போம்

Tuesday, 10 May 2016

சிறுநீர் எரிச்சல்

இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் காரம், புளி, உப்புச் சுவை, புலால் உணவு, பட்டை, சோம்பு கரம் மசாலாவின் கலவை, டீ, காபி, புகைபிடிப்பது, மது அருந்துதல், அதிகக் கோபம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும். பறங்கிக் காய் விதை 4-8 வரையில் எடுத்துக் கஷாயமிட்டுச் சாப்பிட சிறுநீரக அழற்சி தணியும். இளம் பிஞ்சுப் பாக்கை உலர்த்திக் தூளாக்கிச் சர்க்கரை சம அளவு சேர்த்து 1 கிராம் அளவு சாப்பிட அஜீர்ணப் பேதி, சிறுநீரக அழற்சி, வயிற்று அழற்சி நீங்கும். மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும். விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டிப் போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிவு, சிறுநீர் எரிச்சல் நீங்கி உற்சாகம், மனத்தெளிவு பிறக்கும். வாழைத் தண்டின் நீரைப்பருக நீர்ச்சுருக்கு, நீர்க் கல்லடைப்பு சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி இவற்றில் குணம் கிட்டும். கீரை வகைகளில் பசளைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்ல உணவு. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மற்றும் புதினாக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை. ஜவ்வரிசி - கஞ்சி, கூழ் பாயசம், வடாம் போன்றவை பல வகைகளில் நமக்கு பயன்படும். நீர்த்தாரை, குடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். நீர்ச் சுருக்கு உள்ளவருக்கு ஏற்ற உணவு. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும். வால் மிளகைப் பசுவின் பாலில் ஊறவைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த் துவார வேக்காளம் குறையும். - உணவே மருந்து

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

பல மானிலங்களில் பிரிவனையைக் கொண்டு வரப்போராடுகிற ஆவிகள் கட்டப்பட, பிரிவினைக் கோஷங்கள் எழும்பாமலிருக்க, தேசத்தை துண்டாட நினைக்கிற தீயசக்திகள் செயல்படாமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

தாய்லாந்து தேசம் விசாரத்திற்கு பேர்போன தேசமாயிருக்கிறபடியினால் கர்த்தரின் கோபாக்கினை ஏற்படாதிருக்க தேவன் இந்த ஜனங்களை சந்திக்கவும், இத்தேசத்தின் பாவத்தை மன்னிக்கவும், மனமிரங்கும் படியாகவும் ஜெபிப்போம்

சங்கீதம் 56 :8-13

உன் அலைச்சல்களைத் தேவன் எண்ணியிருக்கிறார், உன் கண்ணீரை அவருடைய துருத்தியில் வைத்திருக்கிறார், அவைகள் அவருடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது நீ அவரை நோக்கிக் கூப்பிடும் நாளில் உன் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள், தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவாய் தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவாயாக, தேவனை நம்பியிரு, நீ பயப்படாதே மனுஷன் உனக்கு என்னசெய்வான்? தேவனுக்கு நீ பண்ணின பொருத்தனைகள் உன்மேல் இருக்கிறது, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்து நீ தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, அவர்என் ஆத்துமாவை மரணத்துக்கும் உன் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பாரோ? சங்கீதம் 56 :8-13

Monday, 9 May 2016

நினைவாற்றல் பெருக

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கவும் கலவரம் வருவதைத் தடுக்கவும் தேர்தல் அதிகாரிக்கும், காவல் துறை அதிகாரிக்கும் நல்ல ஞானத்தை கொடுக்கும்படி தேவனை நோக்கி கெஞ்சிவோம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளின் ஜனங்கள் சிறிது சிறிதாக முஸ்லிம் மக்களாக மாற்றப்படுகின்றனர். இங்குள்ள சபைகளில் எழுப்புதல் ஏற்பட்டு கிறிஸ்தவம் வேகமாய் பரவ ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

வல்லமையான தேவ ஊழியர்கள், தீர்க்கதரிசிகள், யுத்தவீரர்களை கர்த்தர் சேனையாய் எழுப்ப எலியாவைப்போல அவர்கள் வைராக்கியத்தால் நிரப்பப்பட கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

தமிழ் நாட்டில் வெப்பக் கொடுமையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி கண்மணிப் போல கர்த்தர் காத்துக் கொண்டதற்காக தேவனை நோக்கி ஸ்தோத்தரிப்போம்

சங்கீதம் 56 :1-7

தேவன், உனக்கு இரங்குவார், மனுஷன் உன்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, உன்னை ஒடுக்குகிறான். உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னை விழுங்கப்பார்க்கிறார்கள் உனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர். நீ பயப்படுகிற நாளில் கர்த்தரை நம்பு, தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவாயாக தேவனையே நம்பியிரு நீ பயப்படாதே, மாம்சமானவன் உனக்கு என்ன செய்வான் நித்தமும் தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறான். உனக்குத் தீங்குசெய்வதே அவன் முழு எண்ணமாயிருக்கிறது. அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள், உன் பிராணனை வாங்க விரும்பி, உன் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்ப மாட்டார்கள் தேவன் கோபங்கொண்டு, ஜனங்களைக் கீழேதள்ளுவார்.
சங்கீதம் 56 :1-7

Sunday, 8 May 2016

சங்கீதம் 55 :17-23

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நீ தியானம்பண்ணி கர்த்தரை நோக்கி முறையிடு், கர்த்தர் உன் சத்தத்தைக் கேட்பார் துன்மார்க்கர் திரளான கூட்டமாய்க் கூடி உன்னோடு எதிர்த்தார்கள், கர்த்தரோ உனக்கு நேரிட்ட போரை நீக்கி, உன் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார், அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். அவர்கள் தங்களோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தங்கள் கையை நீட்டி, தங்கள் உடன்படிக்கையை மீறி நடந்தார் அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவர்கள் இருதயமோ யுத்தம், அவர்கள் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவன், அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீ கர்த்தரை நம்பியிரு

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

(தேசத்தின் அஸ்திபாரங்கள் குலுக்கப்படும்) என்று கர்த்தர் எச்சரிக்கிறார் நிலநடுக்கமோ ,நிலச்சரிவோ ஏற்படாமல் ,தேசத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற ஆண்டவரை நோக்கி மனமிரங்கும்படிஜெபிப்போம் . இதற்கு காரணமாயிருக்கிற மக்களுடைய பாவங்களை ஆண்டவர் மன்னிக்கும்படி மக்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 55 :17-23

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நீ தியானம்பண்ணி கர்த்தரை நோக்கி முறையிடு், கர்த்தர் உன் சத்தத்தைக் கேட்பார் துன்மார்க்கர் திரளான கூட்டமாய்க் கூடி உன்னோடு எதிர்த்தார்கள், கர்த்தரோ உனக்கு நேரிட்ட போரை நீக்கி, உன் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார், அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். அவர்கள் தங்களோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தங்கள் கையை நீட்டி, தங்கள் உடன்படிக்கையை மீறி நடந்தார் அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவர்கள் இருதயமோ யுத்தம், அவர்கள் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவன், அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீ கர்த்தரை நம்பியிரு

உடல் சூடு தணிய

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தேவ ஊழியர்களுக்கு விரோதமாய் செயல்படுகிற மந்திரவாதம் மற்றும் பில்லி சூனிய கிரியைகள் அழிக்கப்பட, சரீர சுகம் மற்றும் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்

Saturday, 7 May 2016

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

மும்பை மற்றும் கொல்க்கத்தா பட்டணங்களிீல் பாதுகாப்பிற்காக, தீவிரவாதத்தாலோ, நெருப்பினாலோ அழிவு வராமலிருக்க, இதற்கு காரணமாயிருக்கிற அந்த மக்களின் பாவங்களை இயேச கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி அவருடைய பிள்ளையாய் மாற்றும் படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

மக்களுக்கு நன்மை செய்யும் மக்களுக்கு தியாகம் செய்யும் பொது சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் வெற்றிபெறச் செய்யும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிாப்போம்

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

மும்பை மற்றும் கொல்க்கத்தா பட்டணங்களிீல் பாதுகாப்பிற்காக, தீவிரவாதத்தாலோ, நெருப்பினாலோ அழிவு வராமலிருக்க, இதற்கு காரணமாயிருக்கிற அந்த மக்களின் பாவங்களை இயேச கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி அவருடைய பிள்ளையாய் மாற்றும் படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

சீன தேச திருச்சபைகளின் எழுப்புதலுக்காக அங்குள்ள தேவப்பிள்ளைகள், ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வலுசர்ப்ப வல்லமைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Friday, 6 May 2016

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

சங்கீதம் 55 :11-16

உன்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் நீ சகிப்பாய் உனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் உன் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பாய் உனக்குச் சமமான மனுஷனும், உன் வழிகாட்டியும், உன் தோழனுமாவான் நீயும் உன் தோழனும் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனீர்கள் மரணம் அவனைத் தொடர்ந்து பிடிக்கும், அவன் உயிரோடே பாதாளத்தில் இறங்குவான், அவன் வாசஸ்தலங்களிலும் அவன் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது நீ தேவனை நோக்கிக் கூப்பிடு, கர்த்தர் உன்னை இரட்சிப்பார். சங்கீதம் 55 :11-16

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தேசங்களில் நாசவேலைகளைச் செய்யவும் அத்தேசங்களின் சமாதானத்னதக் குலைக்கப் போராடுகிற மதத்தீவிரவாத இயக்கங்களுடைய திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 55 :6 -10,22

உனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நீ பறந்துபோய் இளைப்பாறுவாய் நீ தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பாய். பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்பத் தீவிரித்துக் கொள்ளுவாய் ஆண்டவர், அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணுவார் கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டாய் அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது, அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது, கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55 :6 -10,22

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

இலவசங்களை நம்பி மக்கள் தங்கள் உரிமைகளை இழந்துவிடாமல் ஞானமும் திறமையும் உண்மையுமான தெய்வ பக்தியுமுள்ளவர்களை தேர்ந்தெடுக்க மக்களுக்கு ஞானத்தையும் தெளிந்த புத்தியையம் கொடுக்கும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தேவ ஊழியர்களுக்கு விரோதமாய் கட்டவழ்த்து விடப்பட்டிருக்கிற ஆவிகளை கட்டிஜெபிப்போம்:- பணஆசை, பெருமை, இச்சைகள், சுயநலத்தை தூண்டுகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம்

Thursday, 5 May 2016

பல்லில் ஏற்படும் கூச்சம் மறைய

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

ஆறுகளில் முதலைகள் பெருகி ஆசீர்வாதம் தடைபடாமலிருக்கவும் காடுகளில் மிருகங்கள் பெருகி அதிகமான சேதங்கள், அழிவுகள் வராமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒருநிமிடஜெபம்

ஆறுகளில் முதலைகள் பெருகி ஆசீர்வாதம் தடைபடாமலிருக்கவும் காடுகளில் மிருகங்கள் பெருகி அதிகமான சேதங்கள், அழிவுகள் வராமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

இதய நோய் தீர

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

சங்கீதம் 55 :1-5,23

தேவன் உன் ஜெபத்தைக் கேட்டருளுவார் உன் விண்ணப்பத்திற்கு மறைந்திருக்க மாட்டார் உனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்வார், சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் உன் தியானத்தில் முறையிடு அவர்கள் உன்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, உன்னைப் பகைக்கிறார்கள். உன் இருதயம் உனக்குள் வியாகுலப்படுகிறது, மரணத்திகில் உன்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் உன்னைப் பிடித்தது, அருக்களிப்பு உன்னை மூடிற்று. தேவன் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீயோ கர்த்தரை நம்பியிருக்கிறாய் சங்கீதம் 55 :1-5,23

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

இந்தியாவிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு விபத்துக்கள், தற்கொலைகள், கருக்கலைப்புக்கள், கொலைகள் மூலம் இரத்தம் சிந்த திவிரிக்கிற கிறியைகள் அழிக்கப்பட கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

Wednesday, 4 May 2016

சங்கீதம் 54 :1-7

தேவன் அவரது நாமத்தினிமித்தம் உன்னை இரட்சித்து, அவரது வல்லமையினால் உனக்கு நியாயஞ்செய்வார் தேவன் உன் விண்ணப்பத்தைக்கேட்டு, உன் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பார் அந்நியர் உனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடியர் உன் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். இதோ, தேவன் உனக்குச் சகாயர், ஆண்டவர் உன் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். அவர் உன் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், அவரது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்குவார் உற்சாகத்துடன் நீ கர்த்தருக்குப் பலியிடு , கர்த்தருடைய நாமத்தைத் துதி அது நலமானது. கர்த்தர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, உன்னை விடுவிப்பார் உன் கண்கள் உன் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் காணும். சங்கீதம் 54 :1-7

மறதி தொல்லையா?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இந்தியாவுக்காகை நிமிடஎன்ற ஜெபம்

நம் தேசத்திீலிருக்கிற எல்லா நீர் நிலைகளுக்காக, ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பாசன நிலங்களை பாழாக்கவும், உரங்களில் கலப்படம் மூலம் விளைச்சலை மட்டுப்படுத்த பிசாசு திட்டமிடுகிறான் பிசாசின் திட்டங்களை நிர்மூலமாக்கும் படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

பாக்கிஸ்தான் மக்கள் தொகை 17,38,21,000. மொத்த மக்கள் இனங்கள் 482 கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த உபத்திரவம். சுவிசேஷம் அறிவிக்க முடியாத சூழ்நிலை இங்கு உள்ளது .இந்தநிலை மாற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

Tuesday, 3 May 2016

சங்கீதம்53;1-6

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான், அவன் தன்னைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறான் நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை. அக்கிரமக்காரர்கள் அப்பத்தைப் பட்சிக்கிறது போல் ஜனத்தைப் பட்சிக்கிறார்கள் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. ஜனத்திற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் அவர்களை வெறுத்தார் சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும், தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் சங்கீதம்53;1-6

நமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

மாநிலத்தின் பாதுகாப்பிற்காக மன்றாடுவோம் மலைப் பிரதேசங்களுக்காக ஜெபிப்போம் நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகளால் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப் படாமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இதற்கு காரணமாயிருக்கிற மக்களின் பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி அவருடைய பிள்ளையாய் மாற்ற கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

இருமலால் அவதியா?

உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

ஸ்தோத்திர ஜெபம

கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தினாலே சிறையில் அடைத்து கிறிஸ்தவர்களை அதிகமாக உபத்திரவபடுத்தும் கம்யூனிச நாடான சீனாவில் தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் பேர் இயேசுவை சொந்த இரட்சகராய் யேற்றுக் கொள்ளுகின்றனர், சுமார் 40 மில்லியனிலிருந்து 130 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என சீன அரசாங்க மதக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கிறது இதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்

Monday, 2 May 2016

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

வான மண்டலங்களில் கிரியை செய்கிற ஆவிகள் அழிக்கப்பட விமானகடத்தல்கள் மற்றும் வான் வெளி யுத்தங்களை தீவிர படுத்தப் போராடுகிற வல்லமைகளை கட்டும்படியாக தேவனை நோக்கி ஜெபிப்போம்

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

ஆகாரத் திரட்சிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி, பஞ்சங்களை ஏற்படுத்த சாத்தான் திட்டமிடுகிறான் விளைநிலங்கள் மற்றும் தானியக் களஞ்சியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி தேவனை நோக்கி ஜெபிப்போம்

நமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

நமது மாநிலத்தின் பாதுகாப்பிற்காக மன்றாடுவோம் கடற்கரை பகுதிகளுக்காக, இயற்கை சீற்றங்கலோ, தீவிரவாதிகளின் கால்களோ தமிழ் நாட்டின் எல்லைகளில் வராமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சங்கீதம் 52 :5-9

தேவன் பலவானனை அழித்துப்போடுவார், அவர் அவனைப் பிடித்து, அவன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, அவனை ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு அவனை நிர்மூலமாக்குவார் நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள். நீயோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறாய் தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிரு அவரே இதைச் செய்தார் என்று அவரை என்றென்றைக்கும் துதித்து, அவரது நாமத்திற்குக் காத்திரு அவருடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. சங்கீதம் 52 :5-9

சளித் தொல்லையா?

வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

ஸ்தோத்திர ஜெபம

40 வருடங்களுக்கு முன்பு இந்தோநேசியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.3 மில்லியன் மட்டும் ஆனால் இப்போது 9 மில்லியன் கிறிஸ்தவர்கள் உள்ளனர் இதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்

Sunday, 1 May 2016

சங்கீதம் 52 :1-5

பலவான், பொல்லாப்பில் பெருமைபாராட்டுகிறான் உனக்கு தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. அவன் கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறான், கபடுசெய்யும் அவன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யையும் அவன் விரும்புகிறான். கபடமுள்ள நாவு, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் விரும்பும் தேவன் அவனை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார், கர்த்தர் அவனைப் பிடித்து, அவனுடைய வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, அவன் ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு அவனை நிர்மூலமாக்குவார்.

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

தமிழக விளை நிீலங்கன் ஆசிர்வதிக்கப்பட பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களைக் கர்த்தர் வெளிபடுத்தி மானிலம் செழிப்படைய தேலனை நோக்கி ஜெபிப்போம்

உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்

'எரிமலைகள் அதிகமாக வெடித்துச் சிதறி பாதிப்பு ஏற்படும்" என்று ஆவியனவர் எச்சரிக்கிறார் மக்கள் அழியாதபடி பாதுகாக்கப்பட, இதற்கு காரணமான மக்களின் பாவங்களை தேவன் இயேசுவின் இரத்தத்தினால் கழுவ தேவனை நோக்கி ஜெபிப்போம்

ஸ்தோத்திர ஜெபம

1900ம் ஆண்டில் தென்கொரியாவில் ஒரு சபை கூட இல்லை ஆனால் இன்று கிறிஸ்தவர்களின் சதவீதம் 60%, சீயோலில் மட்டும் 7000 சபைகள் உள்ளன பல சபைகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் உள்ளனர் இதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம்

சீதபேதி கடுமையாக உள்ளதா?

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

இந்தியாவுக்காகை நிமிடஎன்ற ஜெபம்

திருமண்டலங்களுக்குள், கிறிஸ்தவ நிருவனங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆலயங்களை அரசாங்கத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து கிறிஸ்தவர்களை சுயமாக செயல்படவிடக்கூடாது என்ற நிலையைக் கொண்டு வரப்போராடுகிற வல்லமையை, அழிக்கும்படி தேவனை நோக்கி ஜெபிப்போம்