Tuesday, 3 May 2016

சங்கீதம்53;1-6

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான், அவன் தன்னைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறான் நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை. அக்கிரமக்காரர்கள் அப்பத்தைப் பட்சிக்கிறது போல் ஜனத்தைப் பட்சிக்கிறார்கள் அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. ஜனத்திற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் அவர்களை வெறுத்தார் சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும், தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் சங்கீதம்53;1-6

No comments:

Post a Comment