Thursday, 19 May 2016

சங்கீதம் 60 ;1-6

தேவன், உன்னை கைவிட்டார் உன்னைச் சிதறடித்தார், உன் மேல் கோபமாயிருந்தார், மறுபடியும் உன்னிடமாய்த் திரும்பியருளுவார் பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினார், அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணுவார் அது அசையாது. உனக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தார், தத்தளிப்பின் மதுபானத்தை உனக்குக் குடிக்கக் கொடுத்தார். சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தார். அவரது பிரியர் விடுவிக்கப்படும்படி, அவரது வலதுகரத்தினால் இரட்சித்து, உனக்குச் செவிகொடுத்தருளுவார் தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூரு சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள். சங்கீதம் 60 ;1-6

No comments:

Post a Comment