Monday, 23 May 2016

குளோரிந்தாள் அம்மையார

இந்தியாவைச் சமையங்களின் சங்கமம் என்று அழைக்கலாம் ஏனென்றால் பல சமையங்கள் இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப் பட்டன. அதே நேரம் இந்தியாவை" மூடத்தனங்கள் நிறைந்த நாடு" என்றுக் கூட கூறமுடியும். ஏனெனில் ஒரு காலத்தில் உலகில் எந்த பாகங்களிலும் நடந்திராத கொடிய சம்பவங்கள் இங்கே நடந்ததுண்டு. சதி, உடன்கட்டை ஏறுதல் குழந்தைகள் திருமணம் பெண்கல்வி மறுப்பு இன்னும் பல இதற்க்கு உதாரணங்கள் ஆகும். அப்படியே ஒரு நிகழ்ச்சி இது. ஒரு அழகிய இளம் பெண்🏽 கணவன் இறந்துவிட்டான். பிணத்தோடு 🛌 சேர்த்து அவளையும் சுட்டெரிக்க இழுத்துச் செல்லப்பட்டாள். இதனை அறிந்த கர்னல் லிட்டில்டன் 🏻 விரைந்து சென்று அவளை காப்பாற்றினார். ஆனால் ஊரார் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் லிட்டில்டன் அவளை🏽 தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்பெண்ணே கோகிலா என்ற குளோரிந்தாள். ஆவர். கிறிஸ்தவ சித்தாத்தங்களை லிட்டில்டன்🏻 பிரபு மூலம் அறிந்துக்கொண்ட குளோரிந்தாள் ஞானஸ்நானம் பெற விரும்பி சுவார்ட்ஸ் ஐயரிடம் புது பிறப்பு அடைந்தாள். அன்று முதல் காண்பவர்களிடம்👁 எல்லாம் கிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஆத்தும ஆதாயப் பணியை செய்தார். 1780 ஆம் ஆண்டு40 பேர் இவரால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். கர்த்தருக்கென்று ஒரு ஆலையம் கட்ட விரும்பிய குளோரிந்தாள் அம்மையார் 1785 ஆம் ஆண்டு நெல்லையில் முதல் ஆலையத்தை கட்டினார். சிறு பள்ளிக்கூடத்தையும் ஆரம்பித்தார். ஆசாரம் மிக்க பிராமண குடியில் பிறந்து, சாதி ஆசாரங்களை தகர்த்து ஏழை எளியவர்களுடன் சமமாக பழகி அவர்களுக்கு பண உதவி அளித்தார். அவர்கள் ஆன்மா முன்னேற்றத்துக்காக உழைத்து தனக்கென ஒரு முத்திரையை🏵 திருச்சபை வரலாற்றில் பதித்த குளோரிந்தாள் நமக்கு ஒரு தூண்டுகோல்❗ அன்பரே❗ சாதி மதங்களை கடந்து கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்பவரா நீங்கள்?
⚰:1806
ஊர்: தஞ்சாவூர்
நாடு:இந்தியா
உன் ஓய்வினை சீக்கிறம் எடுத்துக் கொள்ளாதே. எடுத்துக்கொண்டால் உனது உண்மை ஓய்வினை நீ அடைய முடியாது. R.Rajapandian

No comments:

Post a Comment