Monday, 9 May 2016

சங்கீதம் 56 :1-7

தேவன், உனக்கு இரங்குவார், மனுஷன் உன்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, உன்னை ஒடுக்குகிறான். உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னை விழுங்கப்பார்க்கிறார்கள் உனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர். நீ பயப்படுகிற நாளில் கர்த்தரை நம்பு, தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவாயாக தேவனையே நம்பியிரு நீ பயப்படாதே, மாம்சமானவன் உனக்கு என்ன செய்வான் நித்தமும் தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறான். உனக்குத் தீங்குசெய்வதே அவன் முழு எண்ணமாயிருக்கிறது. அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள், உன் பிராணனை வாங்க விரும்பி, உன் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்ப மாட்டார்கள் தேவன் கோபங்கொண்டு, ஜனங்களைக் கீழேதள்ளுவார்.
சங்கீதம் 56 :1-7

No comments:

Post a Comment