Thursday, 5 May 2016

சங்கீதம் 55 :1-5,23

தேவன் உன் ஜெபத்தைக் கேட்டருளுவார் உன் விண்ணப்பத்திற்கு மறைந்திருக்க மாட்டார் உனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்வார், சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் உன் தியானத்தில் முறையிடு அவர்கள் உன்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, உன்னைப் பகைக்கிறார்கள். உன் இருதயம் உனக்குள் வியாகுலப்படுகிறது, மரணத்திகில் உன்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் உன்னைப் பிடித்தது, அருக்களிப்பு உன்னை மூடிற்று. தேவன் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீயோ கர்த்தரை நம்பியிருக்கிறாய் சங்கீதம் 55 :1-5,23

No comments:

Post a Comment