Sunday, 8 May 2016

சங்கீதம் 55 :17-23

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நீ தியானம்பண்ணி கர்த்தரை நோக்கி முறையிடு், கர்த்தர் உன் சத்தத்தைக் கேட்பார் துன்மார்க்கர் திரளான கூட்டமாய்க் கூடி உன்னோடு எதிர்த்தார்கள், கர்த்தரோ உனக்கு நேரிட்ட போரை நீக்கி, உன் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார், அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். அவர்கள் தங்களோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தங்கள் கையை நீட்டி, தங்கள் உடன்படிக்கையை மீறி நடந்தார் அவர்கள் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவர்கள் இருதயமோ யுத்தம், அவர்கள் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். தேவன், அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவார், இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள், நீ கர்த்தரை நம்பியிரு

No comments:

Post a Comment