Wednesday, 25 May 2016

சங்கீதம் 65 :1-7

தேவனுக்காக, சீயோனில் துதியானது அமைந்து காத்திருக்கிறது, பொருத்தனை அவருக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரிடத்தில், மாம்சமான யாவரும் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் உன் மேல் மிஞ்சி வல்லமைகொண்டது, தேவநோ உன் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறார் அவருடைய பிரகாரங்களில் வாசமாயிருக்கும்படி அவரை தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், அவருடைய பரிசுத்த ஆலயமாகிய அவரது வீட்டின் நன்மையால் திருப்தியாவான் பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற உன் இரட்சிப்பின் தேவன் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் உனக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறார். வல்லமையை இடைகட்டிக்கொண்டு, அவருடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறார். சங்கீதம் 65 :1-7

No comments:

Post a Comment