Friday, 7 October 2016

பருவமழைக்காக

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய பருவமழைக்காக தமிழ் நாட்டிற்கு செப்டம்பர் முதல், நவம்பர் வரை வடகிழக்கு பருவகாற்றுக் காலம். இந்த காலங்களில் பெய்யக் கூடிய பருவமழையை நம்பித்தான் நமிழ்நாட்டில் விவசாயம் நடைபெருகிறது. ஒரு வருடத்திற்கான குடிதண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்யப் படுகிறது. ஆகவே, ஆசீர்வாதமான மழை பெய்திட கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆறுகள், குளங்கள் பெய்யக்கூடிய மழையால், தண்ணீர் பெருக்கெடுத்து நிரைந்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தமிழக அரசு மழைத் தண்ணீரை விவசாயத்திற்கு அதிகமாக பயன் படுத்திட, தொழிற்சாலைகளுக்கும் வீணாகும் மழை நீரையே கொண்டு செல்லக்கூடிய திட்டம் தீட்டி செயல்படுத்த ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட, அவர்கள் வாழ்வில ஏற்பட்டுள்ள கடன்கள், நஷ்டங்கள் விலகிட, விவசாயத்தின் முலம் நல்ல வருமானம் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மழைநீரை சேமிக்கும் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட, வாய்க்கால், வடிகால்கள் சீரமைக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நல்லோர், தீயோர் மேலும் மழையை பெய்யப் பண்ண வல்லமையுள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கன மழையினால் பேரழிவு ஏதும் வராதிருக்க, எல்லாஇடங்களிலும் போதிய அளவு மழை பெய்ய நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மழைக் காலங்களில் பரவும் நோய்க் கிருமிகள் அழிக்கப்பட, சுற்றுபுற சுகாதாரம் பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment