Friday, 14 October 2016

சங்கீதம் 136 :19-26

எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோன் பாசான், ராஜாவாகிய ஓகை தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோன் பாசான், ராஜாவாகிய ஓகை தேசத்தை தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. உன்னுடைய தாழ்வில் உன்னை நினைத்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. உன்னுடைய சத்துருக்களின் கையிலிருந்து உன்னை விடுதலைபண்ணினவரை நீ துதி. அவர் கிருபை என்றுமுள்ளது. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :19-26

No comments:

Post a Comment