Monday, 10 October 2016

சங்கீதம் 135 :1-12

பபபபஓபகபபபபபபபபபஓஓஓஓஓஓபஓஓஓஓஓஓஉஉஉஉஉஓ அல்லேலூயா, நீ கர்த்தருடைய நாமத்தைத் துதி. கர்த்தரின் ஊழியக்காரனாகிய நீ அவரைத் துதி. கர்த்தருடைய வீட்டிலும், உனது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிற நீ, கர்த்தரைத் துதி. கர்த்தர் நல்லவர், அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணு அது இன்பமானது. கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிந்துக் கொள். வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழுப்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். கர்த்தர்., எகிப்துதேசத்தின் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார் அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக்கொன்று, எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து, அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். சங்கீதம் 135 :1-12

No comments:

Post a Comment