Monday, 17 October 2016

சங்கீதம் 139 :9-16

நீ விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் கர்த்தருடைய கை உன்னை நடத்தும், அவரது வலதுகரம் உன்னைப் பிடிக்கும். இருள் உன்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் உன்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். கர்த்தருக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது, இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும், கர்த்தருக்கு இருளும் வெளிச்சமும் சரி. கர்த்தர் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறார், உன் தாயின் கர்ப்பத்தில் உன்னைக் காப்பாற்றினார். நீ பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், கர்த்தரைத் துதி, அவரது கிரியைகள் அதிசயமானவைகள், அது உன் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நீ ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, உன் எலும்புகள் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை. உன் கருவை கர்த்தருடைய கண்கள் கண்டது, உன் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், அவரது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :9-16

No comments:

Post a Comment