Wednesday, 12 October 2016

சங்கீதம் 136 1-9

நீ கர்த்தரைத் துதி, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. நீ தேவாதி தேவனைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. நீ கர்த்தாதி கர்த்தரைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. நீ தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய சுடர்களை உண்டாக்கினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது, பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 1-9

No comments:

Post a Comment