Tuesday, 25 October 2016

சங்கீதம் 143:7-12

கர்த்தர், சீக்கிரமாய் உனக்குச் செவிகொடுப்பார், உன் ஆவி தொய்ந்து போகிறது, நீ குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, அவரது முகத்தை உனக்கு மறைக்கமாட்டார். அதிகாலையில் அவரது கிருபையைக் கேட்கப்பண்ணுவார், அவரையே நம்பியிரு, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பார், அவரிடத்தில் உன் ஆத்துமாவை உயர்த்து. கர்த்தர், உன் சத்துருக்களுக்கு உன்னைத் தப்புவிப்பார், அவரைப் புகலிடமாகப் கொள். அவருக்குப் பிரியமானதைச் செய்ய உனக்குப் போதித்தருளுவார், அவரே உன் தேவன், அவருடைய நல்ல ஆவி உன்னைச் செம்மையான வழியிலே நடத்துவார். கர்த்தர், அவருடைய நாமத்தினிமித்தம் உன்னை உயிர்பிப்பார், அவருடைய நீதியின்படி உன் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடுவார். அவருடைய கிருபையின்படி உன் சத்துருக்களை அழித்து, உன் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணுவார், நீ அவரது அடியேன். சங்கீதம் 143 :7-12

No comments:

Post a Comment