Sunday, 16 October 2016

சங்கீதம் 139 :1-8

கர்த்தர் உன்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறார். உன் உட்காருதலையும் உன் எழுந்திருககுதலையும் அவர் அறிந்திருக்கிறார், உன் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறார். நீ நடந்தாலும் படுத்திருந்தாலும் உன்னைச் சூழ்ந்திருக்கிறார், உன் வழிகளெல்லாம் அவருக்குத் தெரியும். உன் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, கர்த்தர், அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார். முற்புறத்திலும் பிற்புறத்திலும் அவர் உன்னை நெருக்கி, அவரது கரத்தை உன்மேல் வைக்கிறார். இந்த அறிவு உனக்கு மிகுந்த ஆச்சரியமும், உனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. அவருடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவாய்? அவருடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவாய்? நீ வானத்திற்கு ஏறினாலும், அவர் அங்கே இருக்கிறார், நீ பாதாளத்தில் படுக்கை போட்டாலும், அவர் அங்கேயும் இருக்கிறார். சங்கீதம் 139 :1-8

No comments:

Post a Comment