Saturday, 22 October 2016

சங்கீதம் 142:1-7

கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடு: கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சு. கர்த்தருக்கு முன்பாக உன் சஞ்சலத்தை ஊற்று: அவருக்கு முன்பாக உன் நெருக்கத்தை அறிக்கையிடு. உன் ஆவி உன்னில் தியங்கும்போது, கர்த்தர் உன் பாதையை அறிந்திருக்கிறார்: நீ நடக்கிற வழியில் மறைவாக உனக்குக் கண்ணிவைத்தார்கள். உன்னை அறிவார் ஒருவரும் இல்லை: உனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று: உன் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. கர்த்தரை நோக்கிக் கூப்பிடு: அவரே உன் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே உன் பங்குமாயிருக்கிறார் உன் கூக்குரலுக்குச் செவிகொடுப்பார், நீ மிகவும் தாழ்த்தப்பட்டாய்: உன்னைப் பின்தொடருகிறவர்களுக்கு உன்னைத் தப்புவிப்பார், அவர்கள் உன்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். அவரது நாமத்தை நீ துதிக்கும்படி, உன் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடுவார்: உனக்கு கர்த்தர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் உன்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். சங்கீதம் 142 :1-7

No comments:

Post a Comment