Monday, 17 October 2016

சுவிசேஷப் பணிகள்!

பபபபபபபபஓபபஓஓஓஓஓஓஓஓபபபபபபபஓபஓஓஓபமபபபபபபப சுவிசேஷப் பணிகள்! நற்காரியங்களை சுவிசேஷமாய் கூறி அறிவிக்கும் சுவிசேஷகனுடைய பாதங்கள், மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. தென்னிந்திய, வடஇந்திய திருச்சபைகள் செப்டம்பர் மாதம் முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கத் திட்டமிட்டு, பல லட்சங்கள் செலவிடுகின்றன. முழுதிருச்சபை ஜனங்களும் சுவிசேஷ வேலையைச் செய்கின்றனர். ஒவ்வொரு திருச்சபையும் தங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய அன்பின் நற்செய்தியை சொல்ல, ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும். பகிர்ந்து கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஒவ்வொரு வீடுகள்தோரும் கொடுக்கப்படும் கைபிரதிகள், நற்செய்தி புத்தகங்கள், புதியஏற்பாடுகள் முலம் பரிசுத்த ஆவியானவர் ஜனங்களோடு பேசிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுவிசேஷ ஊழியம் செய்யப் போகும் நபர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி, மற்றவர்களையும் ஆயத்தப் படுத்திக்கொள்ள, தங்கள் நற்சாட்சியின் மூலம் இயேசுவை அறிமுகப்படுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுவிசேஷ ஊழியர்களுக்கு எதிராக எழும்பியுள்ள மதவாதங்கள், மத அமைப்புகள் மாம்சீக வள்ளமைகள் செயலற்றுபோக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். எந்த கிராமத்திலும் பகுதியிலும் எதிற்புகள் இல்லாதிருக்க, எதிராக எழும்பும் நபர்களை கர்த்தர் சந்திக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அநேகருடைய பெயர்களை புதிதாக ஜீவ புஸ்தகத்தில் எழதப்பட, பிசாசு, பாவம், சாபம், வியாதியில் கட்டப் பட்டிருக்கும் மக்கள் விடுதளையைப் பெற்றுக்கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேவன் பலத்த அற்புத அடையாளங்களைச் செய்து, தமது வசனத்தை உறுதி செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment