Tuesday, 18 October 2016

சங்கீதம் 139 :17-24

தேவனுடைய ஆலோசனைகள் உனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நீ எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம், நீ விழிக்கும்போது இன்னும் அவரண்டையில் இருக்கிறாய். தேவன் துன்மார்க்கனை அழித்தாரானால் நலமாயிருக்கும், இரத்தப்பிரியர், உன்னை விட்டு அகன்றுபோவார்கள். இரத்தப்பிரியர், துன்மார்க்கர் கர்த்தரைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள், அவருடைய சத்துருக்கள் அவரது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள். கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீ பகையாமலும், அவருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருக்காதே முழுப்பகையாய் அவர்களைப் பகை. அவர்களை உனக்குப் பகைஞராக எண்ணு. தேவன், உன்னை ஆராய்ந்து, உன் இருதயத்தை அறிந்துகொள்ளுவார், உன்னைச் சோதித்து, உன் சிந்தனைகளை அறிந்துகொள்ளுவார். வேதனை உண்டாக்கும் வழி உன்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே உன்னை நடத்துவார். சங்கீதம் 139 :17-24

No comments:

Post a Comment