Thursday, 20 October 2016

சங்கீதம் 140 :8-13

கர்த்தர், துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்வார், அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டார். உன்னை வளைந்து கொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடும். நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழும், அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்கள். பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை, கொடுமையான மனுஷனைப் பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். நீதிமான்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள், செம்மையானவர்கள் கர்த்தருடைய சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். சங்கீதம் 140 :8-13

No comments:

Post a Comment