Saturday, 15 October 2016

சங்கீதம் 138 :1_8

கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் துதி, தேவர்களுக்கு முன்பாக அவரைக் கீர்த்தனம்பண்ணு. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நீ பணிந்து, அவரது கிருபையினிமித்தமும், அவரது உண்மையினிமித்தமும் அவரது நாமத்தைத் துதி, அவரது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவரது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார். நீ கூப்பிட்ட நாளிலே உனக்கு மறுஉத்தரவு அருளினார், உன் ஆத்துமாவிலே பெலன்தந்து உன்னைத் தைரியப்படுத்தினார், பூமியின் ராஜாக்களெல்லாரும் கரத்தருடைய வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நீ துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கர்த்தர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக அவரது கையை நீட்டுவார், அவரது வலதுகரம் உன்னை இரட்சிக்கும். கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடமாட்டார். சங்கீதம்  138 :1_8

No comments:

Post a Comment