Friday, 28 October 2016

சங்கீதம் 145 :1-10

ராஜாவாகிய உன் தேவனை, உயர்த்தி, அவருடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரி. நாடோறும் அவரை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் அவருடைய நாமத்தைத் துதி. கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. தலைமுறை தலைமுறையாக அவருடைய கிரியைகளின் புகழ்ச்சியைச்சொல்லி, அவருடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவி. அவருடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசு. ஜனங்கள் அவருடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள், அவருடைய மகத்துவத்தை நீ விவரி. ஜனங்கள் அவரது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, அவரது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. கர்த்தருடைய கிரியைகளெல்லாம் அவரைத் துதிக்கும், அவருடைய பரிசுத்தவான்கள் அவரை ஸ்தோத்திரிப்பார்கள். சங்கீதம் 145 :10

No comments:

Post a Comment