Friday, 7 October 2016

பெண்கள் பிரசவம் ஆன உடனே

போன்ற உபாதைகள் வரும். பிரசவித்த கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன் நிறைய வாய்வு இருப்பதால் மேலும் அதை அதிகரிக்கக் கூடிய வகையில் எண்ணெய் கிழங்கு வகைகள், வாழைக்காய், பூசணிக்காய் போன்றவை நீக்குவது நலம். பிரசவ லேகியம் செய்முறை: சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், கண்டத்திப்பிலி, அரிசிதிப்பிலி, ஜாதிக்காய், இலவங்கம், அதிமதுரம், சித்தரத்தை, சூரத்தாவரை இவைகளை ஒவ்வொன்றும் 20 கிராம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சூடான வெறும் வாணலியில் புரட்டி இடித்து சலித்தோ அல்லது மருந்து கடைகளில் வாங்கி சலித்தோ எடுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேன் விட்டு கையால் பிசைந்து வைக்கவும். வெல்லத்துக்குப் பதில் சுத்தமான பனங்கற்கண்டு சேர்த்து இடித்தும் வைக்கலாம். பாகு வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் நல்ல கெட்டிப்பாகு வந்ததும் அடுப்பை சிறிதாக்கி தேவையான அளவு லேகியப் பொடி சேர்த்து கெட்டியாக கிளறி, எடுத்து வைக்கவும். இதுவும் பல மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். இதை தாய்ப்பால் கொடுப்பது நிறுத்தும் வரையில் சாப்பிடவும்.

No comments:

Post a Comment