Friday, 7 October 2016

சங்கீதம் 130 :1-8

ஆழங்களிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. ஆண்டவர், உன் சத்தத்தைக்கேட்பார், உன் விண்ணப்பங்களின் சத்தத்தை அவரது செவிகள் கவனித்திருக்கும். கர்த்தர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பாரானால், யார் நிலைநிற்பான் கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு அவரிடத்தில் மன்னிப்பு உண்டு. கர்த்தருக்குக் காத்திரு, உன் ஆத்துமா காத்திருக்கிறது, அவருடைய வார்த்தையை நம்பியிரு. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் உன் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. நீ கர்த்தரை நம்பியிரு, கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. அவர் உன்னை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். சங்கீதம் 130 :1-8

No comments:

Post a Comment