Friday, 16 September 2016

மயக்கமருந்தும் வேதாகமமும்!

மயக்கமருந்தும் வேதாகமமும்! மயக்கமருந்தை (Chloroform) கண்டுப்பிடித்த ஜேம்ஸ் சிம்சன் (இவரின் காலம் 1811-1870) என்ற விஞ்ஞானி (Edinburgh University) எடின்பர்க் யூனிவர்சிட்டியில் மகப்பேறு துறையில் பணியாற்றி வந்தார். இவரின் காலத்தில் அறுவை சிகிச்சை எல்லாம் நாலைந்து பேர் பிடித்து கொள்ள அய்யோ அம்மா என்ற கூக்குரலுடன் தான் நடக்கும். இது இவரின் மனதில் மிகுந்த வேதனையாக கொடுத்து கொண்டு இருந்தது. ஒரு நாளில் நமது பரிசுத்த வேதாகமத்தை திறந்து வாசித்துக் கொண்டிருந்தார்.. அவரின் கண்களுக்கு ஒரு வசனம் பளிச்சென்று அவரின் மூளையில் மின்னிற்று. ஆதியாகமம் 2ம் அதிகாரம் 21,22 வசனங்களில்... கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை வரப் பண்ணினார்... அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து.... மனுஷியாக உருவாக்கி.... என்ற இந்த வார்த்தைகளை வாசித்தவுடன் அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது.. தேவன் அயந்த நித்திரையை ஆதாமுக்கு வரவழைத்து விலா எலும்பில் ஒன்றை எடுக்கும்போது அவனுக்கு வலி தெரியவில்லையென்றால் அந்த அயர்ந்த நித்திரையில் அர்த்தம் என்ன ?? என்று யோசிக்க ஆரம்பித்தார். அதன் விளைவு 1847ல் (CHLOROFORM) குளோரோபோம் என்ற மயக்க மருந்தை கண்டுபிடித்தார்.. நமது வேதம் விஞ்ஞான ரீதியானது மட்டுமல்ல, அநேக விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது என்றால் அது மிகையல்ல... ☘ அல்லேலுயா! ☘

No comments:

Post a Comment