Saturday, 17 September 2016

பாதுகாப்பு வீரர்களுக்காக!

தததததததததததததததததததததததததததததததததததததததத பாதுகாப்பு வீரர்களுக்காக! நமது நாட்டில் மிகப்பெரிய இரானுவப் படை செயல் பட்டு வருகிறது. நமதுதேச எல்லையை இரவு பகல் பாராது அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நமது நாட்டின் முப்படை தளபதிகளுக்காக, இராணுவவீரர்களுக்காக, அவர்கள் குடும்பங்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பலராணுவ விரர்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்திருப்பதால், மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர் சிலர் தற்கெலையும் செய்துள்ளனர். இதற்கு தீர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இராணுவ வீரர்கள் பணிசெய்கிற இடத்தில், தேவபாதுகாப்பு இருக்க, எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு விலக்கி, பாதுகாக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கப்பற்படையின் ரோந்து பணிகளுக்காக, கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். விமானப்படை வீர்களுக்காக, அனைத்து விமானிகளுக்காக, விமான விபத்துக்கள் தவிர்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். புதிய ரக கருவிகள், ஆயுதங்கள், எதிரிகளை முறியடிக்கும் திறன்படைத்த பீரங்கிகள் வாங்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். படைவீரர் மத்தியில் ஜெபிக்கிறவர்கள் எழும்பிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment