Monday, 19 September 2016

சங்கீதம் 119 :141-150

நீ சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறாய், ஆனாலும் கர்த்தருடைய கட்டளைகளை மறவாதே. கர்த்தருடைய நீதி நித்திய நீதி, அவருடைய வேதம் சத்தியம். இக்கட்டும் நெருக்கமும் உன்னைப் பிடித்தது, ஆனாலும் கர்த்தருடைய கற்பனைகள் உன் மனமகிழ்ச்சி. கர்த்தருடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும், உன்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நீ பிழைத்திருப்பாய். நீ முழு இருதயத்தோடு கூப்பிடு. கர்த்தர் உன் ஜெபத்தைக்கேட்பார், அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவாயாக. நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. அவர் உன்னை இரட்சிப்பார், அப்பொழுது நீ அவருடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவாய். அதிகாலையில் நீ எழுந்து சத்தமிடு.கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருப்பாயாக. கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே உன் கண்கள் விழித்துக்கொள்ளட்டும். கர்த்தருடைய கிருபையின்படி உன் சத்தத்தைக் கேட்பார், கர்த்தருடைய நியாயத்தின்படி உன்னை உயிர்ப்பிப்பார். தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சபிக்கிறார்கள், அவர்கள் கர்த்தருடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். சங்கீதம் 119 :141-150

No comments:

Post a Comment