Monday, 19 September 2016

சங்கீதம் 119 :121-130

நீ நியாயமும் நீதியும் செய், கர்த்தர் உன்னை ஒடுக்குகிறவர்களுக்கு உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார். கர்த்தர் உனக்கு நன்மையாகத் துணைநிற்பார், அகங்காரிகள் உன்னை யொடுக்கவொட்டமாட்டார். கர்த்தருடைய இரட்சிப்புக்கும் அவரது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் உன் கண்கள் பூத்துப்போகிறது. உன்னை அவரது கிருபையின்படியே நடத்தி, அவரதது பிரமாணங்களை உனக்குப் போதிபபார். நீ அவரது அடியேன், அவருடைய சாட்சிகளை நீ அறியும்படி உன்னை உணர்வுள்ளவனாக்குவார். நீதியைச் செய்யச் கர்த்தருக்கு வேளைவந்தது, அவர்கள் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நீ பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் கர்த்தருடைய கற்பனைகளில் பிரியப்படு. எல்லாவற்றைப்பற்றியும் கர்த்தர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுத்துவிடு. கர்த்தருடைய சாட்சிகள் அதிசயமானவைகள், ஆகையால் உன் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளட்டும். கர்த்தருடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். சங்கீதம் 119 :121-130

No comments:

Post a Comment