Thursday, 22 September 2016

சங்கீதம் 119 :161-170

பிரபுக்கள் காரணமில்லாமல் உன்னைத் துன்பப்படுத்துகிறார்கள், ஆனாலும் உன் இருதயம் கர்த்தருடைய வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நீ கர்த்தருடைய வார்த்தையின்பேரில் மகிழுகிறாய். பொய்யைப் பகைத்து அருவருக்கிறாய், கர்த்தருடைய வேதத்தையோ நேசிக்கிறாய். கர்த்தருடைய நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் கர்த்தரைத் துதிக்கிறாய். கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை. கர்த்ததருடைய இரட்சிப்புக்கு நீ காத்திருந்து, அவருடைய கற்பனைகளின்படி செய்வாயாக. உன் ஆத்துமா கர்த்தரது சாட்சிகளைக் காக்கும், அவைகளை நீ மிகவும் நேசிக்கிறாய். கர்த்தரது கட்டளைகளையும் அவரது சாட்சிகளையும் காத்து நடக்கிறாய், உன் வழிகளெல்லாம் கர்த்தருக்கு முன்பாக இருக்கிறது. உன் கூப்பிடுதல் கர்த்தரது சந்நிதியில் வரட்டும், அவரது வசனத்தின்படியே உன்னை உணர்வுள்ளவனாக்குவார். உன் விண்ணப்பம் கர்த்தரது சந்நிதியில் வருவதாக, அவரது வார்த்தையின்படி உன்னை விடுவித்தருளுவார். சங்கீதம் 119 :161-170

No comments:

Post a Comment