Friday, 16 September 2016

சங்கீதம் 119 :111-120

கர்த்தருடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறாய், அவைகளே உன் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் கர்த்தருடைய பிரமாணங்களின்படிசெய்ய உன் இருதயத்தைச் சாய்த்துக்கொள். வீண் சிந்தனைகளை நீ வெறுத்து, கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படு. உன் மறைவிடமும் உன் கேடகமும் கர்த்தரே, கர்த்தருடைய வசனத்துக்குக் காத்திருக்கிறாய். பொல்லாதவர்கள், உன்னைவிட்டு அகன்றுபோவார்கள், உன் தேவனுடைய கற்பனைகளை நீ கைக்கொள்ளுவாய். நீ பிழைத்திருப்பதற்கு கர்த்தருடைய வார்த்தையின்படி உன்னை ஆதரித்தருளுவார், உன் நம்பிக்கை விருதாவாய்ப்போக உன்னை வெட்கத்திற்கு உட்படுத்தமாட்டார். உன்னை கர்த்தர் ஆதரித்தருளுவார், அப்பொழுது நீீ இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் கர்த்தருடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பாய். கர்த்தருடைய பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் கர்த்தர் மிதித்துப்போடுவார், அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. கர்த்தர் பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுவார், ஆகையால் கர்த்தருடைய சாட்சிகளில் பிரியப்படு. கர்த்தருக்குப் பயப்படும் பயத்தால் உன் உடம்பு சிலிர்க்கிறது, கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறாய். சங்கீதம் 119 :111-120

No comments:

Post a Comment