Thursday, 22 September 2016

சங்கீதம் 119 :171-176

கர்த்தருடைய பிரமாணங்களை அவர் உனக்குப் போதிக்கும்போது, உன் உதடுகள் அவரது துதியைப் பிரஸ்தாபப்படுத்தட்டும். அவரது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள், ஆதலால், உன் நாவு அவருடைய வசனத்தை விவரித்துச்சொல்லட்டும். நீ கர்த்தருடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், அவரது கரம் உனக்குத் துணையாயிருப்பதாக. கர்த்தருடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறாய், அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி. உன் ஆத்துமா பிழைத்திருந்து கர்த்தரை துதிக்கக்கடவது, அவரது நியாயத்தீர்ப்புகள் உனக்கு உதவியாயிருப்பதாக. காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனாய், கர்த்தர் உன்னைத் தேடுவார், அவரது கற்பனைகளை நீ மறவாதே. சங்கீதம் 119 :171-176

No comments:

Post a Comment