Monday, 19 September 2016

சங்கீதம் 119 :131-140

கர்த்தருடைய கற்பனைகளை நீ வாஞ்சிக்கிறபடியால், உன் வாயை ஆவென்றுதிறந்து அவைகளுக்கு ஏங்குவாயாக. கர்த்ததருடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே உன்னை நோக்கிப்பார்த்து, கர்த்தர் உனக்கு இரங்குவார். கர்த்தருடைய வார்த்தையிலே உன் காலடிகளை நிலைப்படுத்து, ஒரு அநியாயமும் உன்னை ஆளவொட்டாதிருப்பார். மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு உன்னை விலக்கி விடுவித்தருளுவார், அப்பொழுது நீ அவருடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவாய். உன் மேல் அவரது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். கர்த்தருடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், உன் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. கர்த்தர் நீதிபரர், அவரது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். கர்த்தர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். உன் சத்துருக்கள் கர்த்தருடைய வசனங்களை மறந்தபடியால், உன் பக்திவைராக்கியம் உன்னைப் பட்சிக்கிறது. கர்த்தருடை வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, நீ அதில் பிரியப்படுகிறாய். சங்கீதம் 119 :131-140

No comments:

Post a Comment