Wednesday, 14 September 2016

சங்கீதம் 119 :91-100

கர்த்ததருடைய வேதம் உன் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், உன் துக்கத்திலே அழிந்துபோயிருப்பாய். நீ ஒருபோதும் கர்த்தருடைய கட்டளைகளை மறக்காதே, அவைகளால் அவர் உன்னை உயிர்ப்பித்தார். நீ கர்த்தருடையவன், அவர் உன்னை இரட்சிப்பார், அவருடைய கட்டளைகளை ஆராய்ந்து பார். துன்மார்க்கர் உன்னை அழிக்க காத்திருக்கிறார்கள், நீ கர்த்தருடைய சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிரு. சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டாய், அவருடைய கற்பனையோ மகா விஸ்தாரம். கர்த்தருடைய வேதத்தில் நீ எவ்வளவு பிரியமாயிருக்கிறாய்! நாள்முழுதும் அது உன் தியானம். கர்த்தருடைய கற்பனைகளைக் கொண்டு உன்னை உன் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறார், அவைகள் என்றைக்கும் உன்னுடனே இருக்கிறது. அவருடைய சாட்சிகள் உன் தியானமாயிருக்கிறபடியால், உனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறாய். கர்த்தருடைய கட்டளைகளை நீ கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறாய். சங்கீதம் 119 :91-100

No comments:

Post a Comment